கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, November 5, 2010

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் - ‘சாம்சங்’ தொழிற்சாலை ஸி350 கோடியில் விரிவாக்கம்


ஸி350 கோடியில் சாம்சங் தொழிற்சாலை விரிவாக்க ஒப்பந்தம், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
கொரியா நாட்டைச் சேர்ந்த ‘சாம்சங்’ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மின்னணு சாதனங்கள், தொலைத் தொடர்பு தொழில்நுட்ப சாதனங்களை தயாரித்து வருகிறது.
இந்த நிறுவனத்துக்கு சொந்தமான ‘சாம்சங் இந்தியா நிறுவனம்’ வண்ணத் தொலைக் காட்சி பெட்டிகள், குளிர்சாதன பெட்டிகள், சலவை இயந்திரங்கள், மின்னணு பொருட்கள், எல்சிடி திரைகள், கணினி கருவிகள், தொழில்நுட்ப கருவிகள் தயாரிக்க
ஸி450 கோடி முதலீட்டில் ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலை தொடங்க 10&11&2006ல் தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்தது. பின்னர், தொழிற் சாலை தொடங்கப்பட்டது.
சமீபத்தில், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரியா நாட்டுக்கு சென்றிருந்தார்.
அப்போது, சாம்சங் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, ஸ்ரீபெரும்புதூரில் தற்போது உள்ள தொழிற்சாலை ஸி350 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
விரிவாக்க திட்டத்தில் நுகர்வோர் மின்னணு பொருட்கள், தகவல் தொழில்நுட்ப பொருட்கள், செல்போன், உதிரி பாகங்கள் தயாரிக்கப்படும். இதன்மூலம் நேரடியாக 1,000 பேருக்கும், மறைமுகமாக 2,000 பேருக்கும் வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
விரிவாக்கத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், அரசு தலைமைச் செயலகத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 03.11.2010 அன்று கையெழுத்தானது.
சாம்சங் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஜே.எஸ்.ஷின், தமிழக தொழில் துறை செயலர் ராஜிவ் ரஞ்சன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

No comments:

Post a Comment