கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, November 8, 2010

முதல்வர் கருணாநிதியுடன் ப.சிதம்பரம் சந்திப்பு


முதல்வர் கருணாநிதியை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்துப் பேசினார்.
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் 06.10.2010 அன்று காலை 10 மணிக்கு கோபாலபுரம் இல்லம் வந்து முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். 30 நிமிடங்கள் இருவரும் பேசினர். இந்த சந்திப்பு முடிந்த பிறகு வெளியே வந்த சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும்:

முதல்-அமைச்சரை சந்தித்ததில் ஏதேனும் விசேஷம் உண்டா?

விசேஷம் ஏதும் இல்லை. தீபாவளிதான் விசேஷம். மரியாதை நிமித்தமாக நடந்த சந்திப்பு. அதே நேரத்தில், கடந்த முறை முதல்-அமைச்சரை நான் சந்தித்துவிட்டு சென்ற பிறகு, இலங்கை அதிபர் ராஜபக்சே டெல்லி வந்திருந்தார். அவரோடு பேசிய செய்திகளைப் பரிமாறிக்கொண்டேன்.

வாழ்விடத்தில் இருந்து இடம்பெயர்ந்த 50 ஆயிரம் பேருக்கு வீடுகட்டித்தர வேண்டும் என்ற திட்டம் முன்னேற்றத்தில் இருக்கிறது.

விரைவில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று இலங்கை அதிபரிடம் வற்புறுத்தி இருக்கிறோம். மழைக்காலம் முடிந்த பிறகு, வீடு கட்டும் பணிகள் தொடங்கும் என்று அவர்கள் வாக்குறுதி அளித்திருக்கிறார்கள். இதுபோன்ற பொதுவான விஷயங்களை பரிமாறிக்கொண்டோமே தவிர வேறெதுவும் இல்லை.


இலங்கை அரசினால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்களே?


எனது நினைவின்படி, இந்த ஆண்டு ஒரு தமிழ் மீனவர் உயிரிழந்திருக்கிறார். 9 பேர் கைதுசெய்யப்பட்டு இருக்கிறார்கள். அதுதவிர புதிதாக யாராவது கைதுசெய்யப்பட்டு இருக்கிறார்களா? என்பது எனக்கு தெரியாது.


அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா வருகை குறித்து?

ஒபாமா சென்னைக்கு வரவில்லையே, அவர் மும்பைக்கும், டெல்லிக்கும்தான் வருகிறார். அவருக்கு முழுப்பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.


ஒபாமா வருகையால் இந்திய-அமெரிக்க உறவில் முன்னேற்றம் ஏற்படுமா?


அவர் சென்றபிறகுதான் இதுபற்றிக்கூற முடியும். இந்திய-அமெரிக்க உறவு சீராக இருக்கிறது. இன்னும் வலுப்படுமா என்பதை பேச்சுவார்த்தைக்குப் பிறகுதான் கூற முடியும்.


கலைஞருக்கு ப.சிதம்பரம் கடிதம் :


முதலமைச்சர் கருணாநிதிக்கு மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,

’’2011-ம் ஆண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பது தொடர்பாக தாங்கள் கடந்த ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி பிரதமருக்கு எழுதிய கடிதத்தை தங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.


கடந்த செப்டம்பர் மாதம் 9-ந் தேதி நடந்த மந்திரிசபை கூட்டத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகு அனைத்து மக்களிடமும் சாதிவாரி கணக்கெடுப்பை தனியாக நடத்த வேண்டும் என்ற அமைச்சர்கள் குழுவின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் பொதுத் தேர்தல் நடக்க இருப்பதை கருத்தில் கொண்டு, சாதிவாரி கணக்கெடுப்பு 2011-ம் ஆண்டு ஜுன் மாதம் தொடங்கி ஒவ்வொரு கட்டமாக செப்டம்பர் மாதத்தில் முடிவடையும்’’என்று தெரிவித்துள்ளார்



No comments:

Post a Comment