திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:
எல்லா புகழும் இறைவனுக்கே. எனக்கு யாத்ரா, லிங்கா என்ற 2 பேரன்கள் உள்ளனர். இருவரிடமும் விளையாடுவது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கும். பேரன்களுடன் விளையாடும் போதே இவ்வளவு சந்தோஷம் என்றால், பேரன்களின் குழந்தைகளுடன் விளையாடும்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும். கொள்ளுப் பேரன்களு டன் வாழ்ந்து கொண்டிருக்கும் கலைஞர் எப்படி சந்தோஷமாக இருப்பார். கலைஞருக்கு 2 சொத்துக்கள் உள்ளன. அதில் திமுக ஒரு சொத்து, அழகிரி, ஸ்டாலின் இன்னொரு சொத்து. அந்த சொத்து இந்த சொத்தை காப்பற்ற வேண்டும். இந்த சொத்து அந்த சொத்தை காப்பாற்ற வேண்டும்.
அழகிரி, ஸ்டாலினை 38 ஆண்டுக்கு முன்பே எனக்கு தெரியும். நீண்ட இடைவெளிக்கு பிறகு மதுரைக்கு வருகிறேன். 32 ஆண்டுகளுக்கு முன்பு சச்சு, செந்தாமரையுடன் மீனாட்சியம்மன் கோயிலுக்கு போனேன். அர்ச்சகர் எனது நட்சத்திரத்தை கேட்டார். பிறந்தநாளே தெரியாது. நட்சத்திரம் எப்படி தெரியும் என சொன்னேன். உடனே சச்சு கடவுள் நட்சத்திரத்தில் அர்ச்சனை செய்யக்கூறினார்.
சூப்பர் ஸ்டார் ஆன பிறகு தான் எனது ஜாதகத்தை தோண்டி எடுத்து நட்சத்திரம் பார்த்தனர். அன்றுதான் எனக்கு தெரியும் என்னுடைய நட்சத்திரமும், கடவுளின் நட்சத்திரமான திருவோணம் என்பது. நான் வணங்கும் மிகசக்தி வாய்ந்த மகான் பெங்காளி பாபா. இமயமலைக்கு அவர் சென்றபோது பனிப்பொழிவை நில் எனக்கூறினால் நிற்கும், செல் எனக்கூறினால் சென்றுவிடும். அந்தளவிற்கு சக்தி படைத்த அபூர்வ மகான். அவர் தமிழகத்தில் சக்தி வாய்ந்த இடங்களாக பட்டியலிட்டு கூறியிருப்பது மதுரை, பழனி, சிதம்பரம், திருவண்ணாமலை.
இதில் பாபா முதலில் வந்தது மதுரைக்கு, அப்படியென்றால் மதுரை எவ்வளவு பவர்புல்லான இடம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மணமக்கள் எவ்வளவு, அழகாக லட்சணமாக இருக்கிறார்கள். இது காதல் திருமணம். ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டிருப்பீர்கள். ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டு நீண்டகாலம் வாழ வாழ்த்துகிறேன்.
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
No comments:
Post a Comment