கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, November 8, 2010

கமலுக்கு கலைஞர், ஸ்டாலின் வாழ்த்து





56வது பிறந்த நாளைக் கொண்டாடும் நடிகர் கமலஹாசனுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ் திரையுலகின் கவுரவமாகவும், மகுடமாகவும் திகழ்பவர் கமல்; தமிழ் சினிமாவில் கமலுக்கு என்றுமே தனியிடம் உண்டு; சிறுவனாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த கமல், தற்போது உலக அரங்கிற்கு தமிழ் சினிமாவை கொண்டு செல்லும் நிலைக்கு உயர்ந்துள்ளார்; அவர் பல்லாண்டு காலம் வாழ்ந்து மேலும் பல பெருமைகளை பெற வாழ்த்துகிறேன்; மனதளவில் அவர் கவிஞராக இருப்பதே அவரின் இந்த முன்னேற்றத்திற்கு காரணம்; அவர் சிறந்த நடிகர் என்பதை ஏற்கனவே நிரூபித்துவிட்டார் என கூறியுள்ளார்.


தனது பிறந்த நாளையொட்டி முதல்வர் கருணாநிதியை 07.11.2010அன்று அவரது இல்லத்தில் சந்தித்து, நடிகர் கமலஹாசன் வாழ்த்துப் பெற்றார். அப்போது முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள் உடனிருந்தார். இதேபோல் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் கமலுக்கு வாழ்த்து தெரிவித்தார்.


No comments:

Post a Comment