ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா மாநில கவர்னர் ஹைட் ஹிகோ யுசாகி சான், துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தொழில் மற்றும் வர்த்தகம் தொடர்பாக தமிழக அரசுக்கும் & ஹிரோஷிமா மாநிலத்திற்கும் இடையே சென்னையில் 08.11.2010 அன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
ஹிரோஷிமா மாநில அரசுக்கும் & தமிழக அரசுக்கும் இடையே கலாசாரம், பொருளாதார கூட்டுறவு பரிமாற்றங்களுக் கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தியா&ஜப்பானுக்கும் இடையில் வரலாற்று ரீதியான நீண்டகால உறவு இருந்து வருகிறது. இரு நாடுகளும் தற்போது நல்லுறவை பேணிகாத்து வருகின்றன. ஜப்பான் நாட்டவர் முதலீடு செய்வதற்கு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இந்தியாவில் 728 ஜப்பான் கம்பெனிகள் உள்ளன. இதில் 236க்கும் அதிகமான கம்பெனிகள் தமிழகத்தில் அமைந்துள்ளன. ஜப்பானில் உள்ள நிசான், தொஷிபா, ஹிட்டாசி உள்ளிட்ட முதன்மையான நிறுவனங்கள் முதலீடு செய்ய தமிழகத்தை தேர்வு செய்துள்ளன. சமீபத்தில் ஜெட்ரே நிறுவனம் சென்னையில் அலுவலகத்தை திறந்துள்ளது.
ஜப்பான் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்ப்பதற்காக தமிழக அரசு உயர்நிலைக் குழு ஒன்றை சமீபத்தில் ஜப்பானுக்கு அனுப்பியது. எங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு வரவேற்பு இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஜப்பான் கம்பெனிகளுக்காக தனியாக ஒரு தொழில் கட்டமைப்பு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில், ஒகேனேகல் கூட்டு குடிநீர் திட்டம் ஆகிய முக்கிய திட்டங்களுக்கு ‘ஜிக்கா’ அமைப்பு மூலம் உதவி செய்திருப்பதற்கு ஜப்பான் மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஜப்பான் கம்பெனிகள் தமிழகத்தில் முதலீடு செய்ய வர வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
No comments:
Post a Comment