கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, November 14, 2010

தமிழ் மொழிமூலம் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை சட்டமன்றத்தில் சட்ட முன்வடிவு அறிமுகம்


சட்டமன்றத்தில் 10.11.2010 அன்று 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ்மொழி மூலமாக படித்த நபர்களை அரசுப் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யும் சட்ட முன் வடிவை அமைச்சர் துரைமுரு கன் அறிமுகம் செய்து வைத்தார். அதில் கூறியிருப்பதாவது:

தமிழ்மொழி மூலமாக படித்தவர்கள் மய்ய அரசின், மாநில அரசின், அல்லது தனியார் துறை நிறுவனங் களின் பணிக்குத் தெரிவு பெறுவதற்கு மிகக் மிகக் குறைந்த வாய்ப்புகள் பெற் றுள்ளனர். எனவே மாநில அரசின் பணிகளில் அவர் களுக்கு முன்னுரிமை கொடுப் பது தேவையாகிறது.

தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள பெருமளவிலான பள் ளிக்கூடங்களிலும், கல்லூரி களிலும் உள்ள பாடப் பிரிவு கள் தமிழ் மொழி மூலமாக நடத்தப்படுகின்றன என்பதைக் கருத்தில் கொண்டு அரசானது தமிழ் மொழியின் மூலமாக படித்தவர்களுக்கு முன் னுரிமை அடிப்படையில் நிய மனம் வழங்குவது தொடர் பான தீர்மானத்தைப் பரி சீலனை செய்து, தமிழ் மொழி மூலம் படித்தவர்களுக்கு நேரடி ஆள் சேர்ப்பின்மூலம் நிரப்பப்படவேண்டிய, இம் மாநிலத்தின் கீழ் வரும் பணி களுக்கான நியமனங்களில் எழும் காலியிடங்களில் 100-க்கு 20 விழுக்காடு என்பதான அளவினை தனியே ஒதுக்கி வைப்பது என முடிவு செய் துள்ளது. எனவே அரசானது இந் நோக்கத்திற்காக சட்டம் ஒன் றைக் கொண்டுவருவது என முடிவு செய்துள்ளது. அதற்கு இணங்கிய வகையில் 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் மொழி மூலமாக படித்த நபர் களை அரசின்கீழ் வரும் பணி களில் முன்னுரிமை அடிப் படையில் நியமனம் செய்தல் அவசரச் சட்டமானது (தமிழ் நாடு அவசரச் சட்டம் 3/2010) ஆளுநரால் பிறப்பிக்கப்பட்டு அது 2010 செப்டம்பர் 7ஆம் தேதியிட்ட தமிழ்நாடு அரசு இதழின் சிறப்பிதழில் வெளி யிடப்பட்டது. இந்த சட்ட முன் வடிவு மேற்சொன்ன அவசரச் சட்டத்திற்குப் பதி லாக அமையவிருக்கிறது என இதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

2 comments:

  1. mr.duraimurugan's photo is very nice

    ReplyDelete
  2. dmk's president karunanithi is excellent, kind hearted man

    ReplyDelete