கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, November 15, 2010

ஜெயலலிதாவுக்குப் பெருத்த ஏமாற்றம் கூட்டணி, திமுகவோடுதான் அதிமுகவுக்கு இடம் இல்லை! - காங்கிரஸ் திட்டவட்ட அறிவிப்பு


``அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் அ.தி.மு. க.வை சேர்ப்பதற்கு இடம் காலியாக இல்லை'' என்று, காங்கிரஸ் கூறி இருக்கிறது.

``ஊழல் காரணமாக மத்திய அமைச்சரவையி லிருந்து இராசாவை விலக்கினால், அவ்வாறு நீக்கும் பட்சத்தில், மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகினால், மத்திய அர சுக்கு அ.தி.முக. நிபந்தனை அற்ற ஆதரவு அளிக்க தயார்'' என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார்.

இதுபற்றி டில்லியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், செய்திப்பிரிவின் தலை வருமான ஜனார்த்தன் திவிவேதியிடம் செய்தி யாளர்கள் கருத்து கேட் டனர். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. தான் கூட்டணிக் கட்சி

தமிழகத்தில் இப் போதைக்கு தி.மு.க. தான் எங்கள் கூட்டணிக் கட்சி. ஜெயலலிதா ஆதரவு தருவதாக கூறி இருப்பது பற்றி எங்களுக்கு தகவல் வந்தது. தமிழ் நாட்டில் இப்போதைக்கு தி.மு.க. தான் எங்கள் கூட்டணி யின் முக்கிய கட்சி. ஜெய லலிதா கூறி இருப்பது எல்லாம் அவரது சொந்த கருத்துகள்.

இந்தப் பிரச்சினை யில் அரசியல் ரீதியாக ஏதாவது முடிவு எடுக்க வேண்டும் என்றால், அது எங்களது கூட்டணி கட் சியான தி.மு.க.தான் மேற் கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்த வரை, சட்ட பூர்வமாக விதிமுறை களின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம்.

- இவ்வாறு ஜனார்த் தன் திவிவேதி கூறினார்.

ஆதர்ஷ் வீட்டு வசதி சங்க ஊழல் புகாரில் சிக்கிய மராட்டிய முத லமைச்சர் அசோக் சவான் பதவி நீக்கம் செய் யப்பட்டது போல், மத் திய அமைச்சர் ஆ.இரா சாவும் நீக்கப்பட வேண் டும் என்ற கோரிக்கை எழுந்து இருப்பது பற்றி அவரிடம் கேட்கப்பட் டது.

அதற்கு ஜனார்த்தன் திவிவேதி பதில் அளிக் கையில்: ``இராசா எங்கள் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர். அவர் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர் அல்லர். எனவே இந்தப் பிரச்சினையில் அவரது கட்சிதான் முடிவு எடுக்க வேண்டும்'' என்றார்.

அவர் மேலும் கூறு கையில்,

ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீடு தொடர் பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், இந்த பிரச்சினை குறித்து விசா ரணை நடத்திய மத்திய கணக்கு தணிக்கை கட் டுப்பாட்டு அதிகாரியின் அறிக்கை நாடாளுமன் றத்தில் தாக்கல் செய்யப் பட்ட பின், அது பொதுக் கணக்கு குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதன் பின் னர் பொதுக்கணக்குக் குழு அந்த அறிக்கையை ஆய்வு செய்யும் என்றும் கூறினார்.

குலாம் நபி ஆசாத்

ஜெயலலிதாவின் பேட்டி குறித்து, தமிழக காங்கிரஸ் பொறுப்பா ளரும், மத்திய அமைச்ச ருமான குலாம் நபி ஆசாத் திடம் செய்தியாளர்கள் கருத்துக் கேட்டனர்.

அப்போது அவர், ``தமி ழகத்தில் காங்கிரஸ் கட்சி, தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில், எங்கள் கூட்டணியில் எங்கு வேறு இடம் இருக்கிறது?'' என்றார்.

``காங்கிரஸ் கட்சி, தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து இருப்பதற்கும், மத்திய அமைச்சர் ஆ. இராசா மீது எழுப்பப் படும் குற்றச்சாற்றுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவை இரண்டும் வெவ் வேறு விஷயங்கள்'' என் றும் அவர் பதில் அளித்தார்.

No comments:

Post a Comment