கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, November 22, 2010

மனுதர்மத்திற்கு மறுபிறவி கிடையாது தனக்கொரு நீதி, தஸ்யூக்களுக்கு ஒரு நீதியா? - முதலமைச்சர் கலைஞர்


திட்டமிட்ட வகையில் பார்ப்பன சக்திகளும், பார்ப்பன ஊடகங்களும் ஆ.இராசா விட யத்தில் நடந்துகொண்டுவரும் போக்கினை மனதிற் கொண்டு, முதலமைச்சர் கலைஞர் அவர்கள் மனுதர்மத் திற்கு மறுபிறவி கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார்.

முரசொலியில் 16.11.2010 அன்று அவர் எழுதியிருப்பதாவது:

ஜெயலலிதா ஆட்சியில் உண்மையிலேயே நடை பெற்று உச்சநீதி மன்றத்தாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு ஊழல் குறித்துக் கூட, தணிக்கைத் துறை அதிகாரி தாக்கல் செய்த அறிக்கையிலே கூறப்பட்டதை இங்கே நான் நினைவுபடுத்துகிறேன். அதன் தலைப்பே,“TANSI - Loss of revenue due to failure to follow uniform procedure in disposal of assets” (டான்சி - சொத்துக்களை விற்ற தில் முறையான அணுகுமுறையை பின்பற்றாததால் ஏற்பட்ட வருவாய் இழப்பு) என்பதாகும்.

......“........the sale of land in all the three defunct units had been effected almost at the same time, in the same locality, the sale price of land of Tansi Foundry to Jaya Publications Limited at Rs. 1350 per square metre was very low when compared to the sale price of Rs. 2080 and Rs, 2100 per square metre obtained in case of sale of land of Tansi Enamelled Wires and Tansi Forgings, respectively. Thus, the Company had not fully explored the possibility of getting a higher rate..........”

(ஒரே பகுதியில் இருந்த டான்சி நிறுவனத்திற்குரிய டான்சி எனாமல்டு ஒயர்ஸ் மற்றும் டான்சி போர்ஜிங்ஸ்க் குச் சொந்தமான இரண்டு இடங்களை ஒரு சதுர மீட்டர் 2080 ரூபாய் மற்றும் 2100 ரூபாய் என்ற விலைக்கு விற்றி ருக்கும் போது, ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு மட்டும் டான்சி பவுண்டரி நிறுவன இடத்தை ஒரு சதுர மீட்டர் 1350 ரூபாய் என்ற குறைந்த விலைக்கு விற்றிருக் கிறார்கள். எனவே அதிகத் தொகையை பெறுகின்ற வாய்ப்பினை டான்சி இழந்துவிட்டது.)

இந்தக் கருத்து தணிக்கைத் துறை அதிகாரியினால் அறிக்கையிலே எழுதப்பட்டு இன்றளவும் அந்தப் புத் தகத்திலே உள்ள வாசகங்களாகும். தற்போது அரசின் சார்பில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு தகவல் தொழில் நுட்பப் பணிக்காக குத்தகை அடிப்படையில் ஒதுக்கப் பட்ட இடம் குறித்து அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா, அந்த இடம் குறைந்த விலைக்குக் கொடுக்கப்பட்டு விட்டது என்றும், அந்த இடத்திற்குப் பக்கத்திலே உள்ள இடம் அதிக மதிப்பு கொண்டது என்றும் அதன் காரண மாக அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுவிட்டது என்றும் கூறியிருந்தார். ஜெயலலிதா குறைந்த விலைக்கு வாங்கிய இடம், அவருடைய சொந்த நிறு வனத்திற்காக குறைந்த விலையில் வாங்கப்பட்டதாகும். தற்போது கழக அரசில் ஒதுக்கப்பட்ட இடம் தனியார் ஒருவர் பங்கு தாரராக இருந்து, தமிழக அரசின் தொழில் வளர்ச்சிக் கழகத்தோடு இணைந்து தகவல் தொழில் நுட்பப் பணி களைத் தொடங்கி பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவிருந்தார் என்ற அடிப்படையில் ஒதுக்கப் பட்டதாகும். ஆனால் அந்தத் தனியார் நிறுவனம் அந்த இடத்தைக்கூட தங்களுக் குத் தேவையில்லை என்று கூறி, அரசுக்கு மனு கொடுத் துள்ளார்கள் என்பதிலி ருந்தே, யாரோ ஒரு தனிப் பட்டவருக்கு இந்த அரசு உதவி செய்து விடவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இப்படிப்பட்ட ஜெயலலிதா தேவையில்லாமல் தனது அறிக்கையில் என்னைப் பற்றிக் கூறும்போது, ஊழலே என்னுடைய வாழ்க்கை முறையாக உள்ளதாகத் தெரி வித்திருக்கிறார். என்னைப் பற்றியா உச்சநீதிமன்ற நீதி பதிகள் வருமான வரி வழக்கில் நீதிமன்ற நடவடிக்கை களை கேலிக் கூத்தாக்குகிறேன் என்று சொன்னார்கள்? அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி, அதனைத் திரும்ப ஒப்படைக்க வேண்டுமென்று என்னைப் பற்றியா உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினார்கள்? ஜெயாவுக்குத்தானே வேண்டு மென்றே விலையைக் குறைத்தும், முத்திரைக் கட்டணத் தைக் குறைத்தும் வாங்கிய நிலத்தை அரசுக்குத் திரும்ப கொடுத்திட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. கொட நாட்டில் எஸ்டேட் வாங்கிக் கொண்டு, மாதக்கணக்கில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பவனா நான்? சிறுதாவூரில் தலித் மக்களுக்காக ஒப்படைக்கப்பட்ட நிலத்தையெல் லாம் பறித்துக் கொண்டதாக ஜெயாவின் தோழமைக் கட்சியாலேயே குற்றம் கூறப்பட்டு, அதற்காக நீதிபதியைக் கொண்டு விசாரித்து, தலித்களுக்காக ஒப்படைக்கப்பட்ட நிலம் கைப்பற்றப்பட்டது உண்மைதான் என்றும், அந்த நிலங்களைத் திரும்பப் பெறவேண்டுமென்றும், அந்த இடத்திற்குப் பக்கத்திலே உள்ள அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தை இன்றளவும் கைப்பற்றி மாளிகை கட்டியிருப்ப திலே அடிக்கடி சென்று ஓய்வெடுப்பது நானா? ஜெயலலிதாவா? வெளிநாட்டிலிருந்து தன் பெயருக்கு வந்த ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வங்கியிலே உள்ள தன் கணக்கிலே வரவு வைத்துக் கொண்டு, யார் அனுப்பியது என்றே தெரியவில்லை என்று ஊரை ஏமாற்ற நினைத்த ஜெயலலிதா ஊழல் பேர் வழியா? நானா? முதலமைச்சராக ஜெயா பொறுப்பேற்ப தற்கு முன்பு 1.7.1991இல் ஜெயாவின் சொத்து மதிப்பு 2 கோடியே 2 இலட்சம் ரூபாய். அவர் முதலமைச்சராக அய்ந்தாண்டுகள் பொறுப்பிலே இருந்த பிறகு 30.4.1996இல் ஜெயாவின் சொத்து மதிப்பு 66 கோடியே 45 இலட்சம் ரூபாய் என்றால் அன்றாடம் ஊழலையே வாழ்க்கை முறையாகக் கொண் டிருப்பது நானா? ஜெயலலிதாவா? வருமானத்திற்கு மீறி 64 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, இன்றளவும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண் டிருப்பது என் மீதா? அல்லது அந்த வழக்குக்கு ஆண்டுக் கணக்கில் வாய்தா வாங்கிக் கொண்டிருப்பது ஊழல் மகாராணி ஜெயலலிதாவா? நானா? செய்தியாளர்கள் ஒருமுறை ஜெயாவைப் பார்த்து, உங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்றங் களில் வழக்குகள் நடைபெறுகின்றனவே, இந்நிலையில் நீங்கள் பதவி வகிக்க முடியுமா? என்று கேட்டபோது, உச்சநீதிமன்றம் வரையில் விசாரிக்க வாய்ப்பும் காலமும் இருக்கிறது. உச்சநீதிமன்றம் என்னைக் குற்றவாளி என்று தீர்ப் பளித்தால் மட்டுமே நான் குற்றவாளி ஆவேன், அது வரையில் நான் குற்றவாளி அல்ல, வெறும் குற்றம் சாட்டப்பட்டவர்தான் என்று பதிலளித்ததையெல்லாம் மறந்துவிட்டு, நான் ஊழலை வாழ்க்கை முறையாகக் கொண்டுள்ளேன் என்று சொல்கிறார் என்றால், எவ்வளவு பெரிய பித்தலாட்டக்காரரை தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவராகப் பெற்றுள்ளது என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது அல்லவா?

இத்தனை உண்மைகளையும் மக்கள் மறந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில், மனு தர்ம ஆட்சியை மீண்டும் கொண்டு வரலாம் என்று மகிழ்ச்சிக் கூத்தாடும் மமதையாளர்களுக்கு கடைசி எச்சரிக்கையும், அறிவிப்பும் இதுதான்!

சூத்திரனுக்கொரு நீதி - தண்டச்

சோறுண்ணும் பார்ப்புக்கொரு நீதி

என்று பாரதி கேட்டது போல் -

தனக்கொரு நீதி தஸ்யூகளுக்கொரு நீதி

என்ற மனு தர்மத்திற்கு தமிழகத்தில் மறுபிறவி கிடையாது!

- இவ்வாறு கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment