கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, November 22, 2010

ஆட்சியை விட நமக்கு இன உரிமை மிக முக்கியம் - பேராசிரியர் க.அன்பழகன்


ஆட்சியைவிட நமக்கு இன உரிமை என்பது மிக முக்கியம் என்று தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் கூறினார்.

சென்னையில் நீதிக்கட்சித் தலைவர்களுக்கு இன்னும் 4 மாதங்களில் சிலை வைக்கும் பணி தொடங்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

சென்னை பெரியார் திடலில் நீதிக்கட்சியின் 95ஆம் ஆண்டு விழா 20.11.2010 அன்று கடும் புயல், மழைக்கிடையே மாலை 6.45 மணிக்கு நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் நிதித்துறை அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டதாவது:

நீதிக்கட்சியின் 95ஆம் ஆண்டு விழா

நீதிக்கட்சியின் 95ஆம் ஆண்டு விழா திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் இவ்வளவு சிறப்பாக நடைபெறுகிற இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைத்த நண்பர் வீரமணி அவர்களுக்கும், நண்பர்களுக்கும் உள்ள படியே என் நன்றியைத் தெரிவித்துக் கொள் கின்றேன். நீதிக்கட்சி தொடங்கப்பட்டது எதற்காக என்ற காரணங்கள் அகலப்பட்டிருக்கின்றன; ஆழப்படுத்தப்பட்டிருக்கின்றன.

நீதிக்கட்சியில் இருந்தவர்கள் யார்?

அந்தக் காலத்தில் நீதிக்கட்சியில் இருந்தவர்கள் உள்ளபடியே ஜமீன்தார்கள் இருந்தார்கள். வியாபாரிகள் இருந்தார்கள். அவர்கள்தான் அரசியல் தெரிந்து கொள்ள முடியும். ஏழை எளிய ஒடுக்கப் பட்ட மக்கள் அரசியல் தெரிந்து கொள்ள முடியாது. அவர்களுக்கு வாக்களிக்கக்கூடிய உரிமை கூட அந்தக் காலத்தில் இல்லை.

டாக்டர் நடேச முதலியார், சர்.பிட்டி. தியாக ராயர், டாக்டர் டி.எம்.நாயர் போன்றவர்கள் எல்லாம் படித்தவர்களாக இருந்தார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் எதை எல்லாம் படிக்க வேண்டுமோ அதை எல்லாம் மக்களுக்காகப் படித்தார்கள். பள்ளிக்கூடத்திற்கே போகாத தலைவர் அவர்.

நான்கு தலைவர்களுக்கும் உள்ள ஒற்றுமை

டாக்டர் நடேச முதலியார், தியாகராயர், டி.எம். நாயர், தந்தை பெரியார் இந்த நான்கு பேருக்கும் ஓர் ஒற்றுமை இருந்தது.

நான்கு பேருமே காங்கிரசிலே இருந்த தலைவர் கள். நான்கு பேருமே சுயமாகச் சிந்தித்தார்கள். சுயமரியாதை பற்றிச் சிந்தித்தார்கள். நான்கு பேருமே மக்கள் நலனுக்குச் சிந்தித்தார்கள். அதே போல நாயுடு, நாயக்கர், முதலியார் என்று அந்தக் காலத்தில் மூன்று பேரை அழைப்பார்கள். வரதராஜுலு நாயுடு, ஈ.வெ.ராமசாமி நாயக்கர், திரு.வி.கலியாணசுந்தர முதலியார் என்று அழைப் பார்கள். அப்படிப்பட்ட காலத்தில் நீதிக்கட்சி தோன்றியது.

திருவாசகம் வந்தார்

இந்த மேடையில் சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவாசகம் பேசினார். இப்படிப் பட்ட மேடைகளுக்கே வராத பல துணைவேந்தர் கள் இருக்கிறார்கள். வரலாறே தெரியாமல் வர லாற்றை எழுதக்கூடிய ஆசிரியர்களும் இருக் கிறார்கள். நீதிக்கட்சி இல்லை என்றால் அண்ணா அவர்களால் தி.மு.க. ஆட்சியையே உருவாக்கி இருக்க முடியாது.

பெரியார் அரசியலைவிட்டு விலகக் காரணம்...?

தந்தை பெரியார் பார்த்தார். அரசியலில் இருந்தால் பல பித்தலாட்டங்களைச் செய்ய நேரிடும். இது நமக்கு ஆகாது என்று அரசியலில் இருந்து விலகி சமுதாயப் பணி ஆற்றிடச் சென்றார். அறிஞர் அண்ணா அவர்கள் நீதிக்கட்சியின் பொன்விழாவிலே பேசும் பொழுது சொன்னார். நாங்கள் நடத்துகின்ற ஆட்சி நீதிக்கட்சி பாரம் பரியம் கொண்ட ஆட்சி, பார்ப்பனரல்லாத மக்க ளுக்காக நடைபெறுகின்ற ஆட்சி என்று சொன் னார். நீதிக்கட்சி எதற்காகக் குரல் கொடுத்தது? முதல் குரல் பார்ப்பனரல்லாத பிள்ளைகளுக்குப் பள்ளி களில் இடம் வேண்டும் என்பது. இரண்டாவது குரல் மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடம் வேண்டும். மூன்றாவது குரல் பார்ப்பனரல்லாத மக்கள் அரசாங்க உத்தியோகங்களைப் பெற வேண்டும் என்பது.

க.திருநாவுக்கரசு எழுதிய திராவிட இயக்கத் தலைவர்களின் வரலாறு அண்ணாமலை எழுதிய பயணம் - முரசொலி மாறன் அவர்கள் எழுதிய மாநில சுயாட்சி நூல் கே.எஸ். ஆனந்த் எழுதிய மலரட்டும் மாநில சுயாட்சி என்ற நூல் மற்றும் தந்தை பெரியார் அண்ணா ஆகியோருடைய வரலாற்று நூல்கள் இவைகளை எல்லாம் படித்திருக் கின்றேன். எத்தனையோ நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கின்றேன். சரியாக யாரும் திராவிடர் இயக்க வரலாற்றைப் படிப்பதில்லை.

ஆட்சியிலே இருக்கின்றோம் என்ற மிதப்பு....!

நாம் ஆட்சியிலே இருக்கிறோம் என்ற மிதப்பு நம்மிடையே இருக்கக் கூடாது.

சூழ்ச்சிக்கிடையிலேதான் நாம் ஆட்சியில் இருக் கிறோம். பிராமணர்களுடைய ஆதிக்க உணர்வு அப்படியே இருக்கிறது.

எல்லாம் பிராமணர்களுக்கே

பிராமணர்கள் என்றால் அவர்கள்தான் எழுதுவ தற்கு உரியவர்கள். சாஸ்திரங்களைப் படைப்ப வர்கள் அவர்கள்தான். எல்லா இலக்கியங்களும் அவர்களுடையது. இராமாயணம், மகாபாரதம் இவை அத்துணையும் பிராமணர்களை உயர்த்துவ தற்காக - அவர்களைப் பாராட்டுவதற்காக எழுதப் பட்டன.

மனு ஸ்மிருதிகள்

மனு ஸ்மிருதிகள் என்பவை ஆரியர்களுக்காகவே எழுதப்பட்டது. அதில் பார்ப்பனர்கள்தான் உயர்ந்த வர்கள் என்று எழுதப்பட்டிருக்கின்றது. ஆரியர் களை விட உயர்ந்தவர்கள் பிராமணர்கள். அதே போல தமிழர்களிலே சூத்திரர்கள்தான் மிகத் தாழ்ந்தவர்கள்.

எல்லா மொழிகளையும்விட ஆரிய மொழி சமஸ்கிருதம்தான் உயர்ந்தது என்று சொன்னார்கள்.

இந்த நிலைகளின் கொடுமைகளை - உரிமைகள் மறுக்கப்பட்டதைப் பார்த்தார் டாக்டர் நடேசனார். அவர் தியாகராயரையும், டி.எம்.நாயரையும் ஒற்றுமையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டு, பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் இருவரையும் ஒற்றுமைப் படுத்தினார்.

நடேசனார் தொடங்கிய மாணவர் விடுதி

டாக்டர் நடேசனார் பார்ப்பனரல்லாத மாணவர் களுக்காக மாணவர் விடுதியைத் தொடங்கினார். அவர் அந்த கஷ்டத்தை உணர்ந்திருந்தார்.

பார்ப்பனர் அல்லாதார் மாணவர் சங்க முதலாம் ஆண்டு விழாவிற்கு ஆர்.கே.சண்முகம் செட்டி யாரை அழைத்து விழா நடத்தினார். அடுத்த ஆண்டு எந்த படித்தரைக் கூப்பிடுவது என்று தெரியாத நிலை. நம்மவர்கள் படித்தால்தான் இது போன்ற நிலைகளுக்கு வரமுடியும் என்று உணர்ந்தார்.

பார்ப்பன மாணவர்களுக்கு மட்டுமே

1912ஆம் ஆண்டிற்கு முன்பு வரை சென்னையில் பார்ப்பன மாணவர்கள் மட்டுமே படிக்க முடியும். அவர்களுக்குத்தான் உணவு விடுதி இருந்தது. இந்த உணவு விடுதியில் பார்ப்பனரல்லாதார் மாணவர் களுக்கு உணவு அளிக்க மாட்டார்கள். அதே போல பார்ப்பன மாணவர்களுக்கு மட்டும்தான் தங்கும் விடுதி, பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு விடுதி கிடையாது. இந்தக் கொடுமையான நிலையை உணர்ந்த டாக்டர் நடேசனார் பார்ப்பனரல்லாத மாணவர் கள் தங்கிப் படிக்க திராவிடர் மாணவர் சங்க விடுதியை ஏற்படுத்தினார். மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கி, தங்கிப் படிக்க இட வசதி ஏற் படுத்திக் கொடுத்தார்.

கபாலீசுவரர் கோயில் குளம் வெட்ட

கபாலீசுவரர் கோயிலுக்கு குளம் வெட்ட மாநகராட்சியிலிருந்து அன்றைய கவுன்சிலராக தியாகராயர் நிதி ஒதுக்கினார். அதே மன்றத்தில் உறுப்பினராக இருந்த டி.எம்.நாயர் எதிர்த்தார்.

கோயிலில் வருகின்ற வருமானத்தை வைத்து அவர்கள் குளம் வெட்டட்டும். மாநகராட்சிப் பணத்திலிருந்து குளம் வெட்ட பணம் கொடுக்கக் கூடாது என்று எதிர்த்துப் பேசியவர்.

இரட்டை ஆட்சி முறை

இந்தியாவிலேயே இரட்டை ஆட்சி முறையை ஆங்கிலேயர்கள் பரிசோதனைக்காக நடத்திய பொழுது நீதிக்கட்சியும், முஸ்லிம் லீக்கும்தான் சிறப்பாக ஆட்சியை நடத்திக்காட்டின.

சுப்பராயலு ரெட்டியார் முதல் முதலமைச்ச ரானார். சிறிது காலத்திற்குப் பிறகு பனகல் அரசர் முதலமைச்சராக ஆனார். இரட்டை ஆட்சி முறையில் முக்கிய இலாகாக்கள் ஆங்கிலேயரிட மிருந்தன. சில இலாகாக்கள் திராவிடர்களிடம் இருந்தன.

சமஸ்கிருதத்தில் எம்.ஏ. படித்த பனகல் அரசர் தான் இந்து அறநிலையத் துறையையே வெற்றி கரமாகத் தொடங்கி நடத்தி நிருவாகத்தில் வெற்றி பெற்றார்.

முத்தையா முதலியார் வகுப்புவாரி உரிமை

டாக்டர் சுப்பராயன் ஆட்சி காலத்தில் முத் தையா முதலியார் வகுப்புவாரி உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். இந்த அமைச்சரவையில் சேதுரத்தினம் அய்யர் என்பவர் இருந்தார். பார்ப்பனர்களுடைய விகிதாச் சாரத்திற்கு இடம் அளிக்கப்பட்டது. எனவே கம்யூனல் ஜி.ஓ.உத்தரவை நடைமுறைப்படுத்தலாம் என்று அவரை சட்டமன்றத்தில் வைத்து பதில் அளிக்கப்பட்டது.

படிப்பதற்கே கஷ்டப்பட்டார் அண்ணா

அதற்குப் பிறகுதான் 1921ஆம் ஆண்டு முதன் முறையாக கம்யூனல் ஜி.ஓ. உத்தரவு சட்டமன்றத் திலே நிறைவேற்றப்பட்டது. முத்தையா முதலி யார்தான் அதை நிறைவேற்றினார்.

அந்தக் காலத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் எளிய நிலையில் இருந்தார். படிப்பதற்கே கஷ்டமான சூழ்நிலை இருந்த காரணத்தால்தான் 1934ஆம் ஆண்டு அவர் எம்.ஏ. பட்டம் பெற்றார். வெள்ளைக் காரர்கள் இந்த நாட்டிற்கு வந்ததினால்தான் நாம் வாழ்வு பெற்றோம்.

அடிமைகளிடம் கூட பரிவுகாட்டாதவர்கள் ஆரியர்கள்

வெள்ளைக்காரர்கள் இந்த நாட்டிற்கு வருவதற்கு முன்பு ஆரியம் மட்டும்தான் நம்மை ஆதிக்கம் செய்தது. வெள்ளைக்காரர்கள் வியாபாரம் செய்வ தற்காக வந்தார்கள். அவர்கள் அடிமைகளிடம் பரிவு காட்டினார்கள். ஆனால், பிராமணர்களோ அந்த அடிமைகளிடமும் பரிவு காட்டாதவர்களாக ஆதிக்கம் செலுத்தினார்கள்.

நான் மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் என் தந்தையார் கடை திறக்கச் செல்லும்பொழுது நான் அப்பொழுது சிறுவன். நானும் உடன் செல்வேன். நான் செல்லுகிற தெருவில் பெரிய மண்டபம் - அதுதான் வேதபாடசாலை.

பார்ப்பனர்கள் வேதம் ஓதுவது எங்களுடைய காதுகளில் கேட்கும். அவர்கள் தின்று போட்டவை கள் தான் - இலைகளில் உள்ள மிச்சம் மீதிகளைத் தான் ஏழை எளிய மக்கள் சாப்பிடக் கூடிய நிலை. அப்படிப்பட்ட வேத பாட சாலைகள் எல்லாம் பிறகு கார்ப்பரேசன் பள்ளிகளாக மாறின.

எல்லாம் நீதிக்கட்சி ஆட்சியின் விளைவால் இத்தகைய மாறுதல் ஏற்பட்டது.

ஆரியரின் சதித்திட்டம்

ஆரிய இனம் மற்ற இனத்தை அடிமைப்படுத்து வதற்குத் தீட்டிய சதித்திட்டம்தான் மனுதர்மம். அந்தக் காலத்தில் டாக்டர்கள், வழக்கறிஞர்கள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களாக இருந்தவர்கள் எல்லோருமே பிராமணர்கள்தான்.

நீதிக்கட்சி தோன்றி இன்றைக்கு திராவிடர் கழகம் திராவிட முன்னேற்றக்கழகம் வந்த பிற்பாடு கலைஞர் தலைமையில் உள்ள அமைச்சரவையில் எல்லா அமைச்சர்களுமே பார்ப்பனரல்லாதவர்கள் தான். ஒருவர் கூட பார்ப்பன அமைச்சர் இல்லை.

நம்மை வீழ்த்தக் கூடிய ஆற்றல்

ஆனால், நம் எல்லா அமைச்சர்களையுமே வீழ்த்தக் கூடிய ஆற்றல் இன்றைக்கும் பிராமணர் களுக்கு இருக்கிறது.

உண்மையான திராவிடன் ஆரியத்தை என்றைக் கும் ஏற்றுக்கொள்ளமாட்டான். சாஸ்திரப்படி, சம்பிரதாயப்படி, சூத்திரனுக்கு திருமண உரிமையே கிடையாது.

சூத்திரன் ஆட்சி நடத்துகிற நாட்டில் ஆரியன் குடியிருக்கவே கூடாது - அதாவது சூத்திரன் ஆட்சி செய்யக்கூடாது.

நீதிக்கட்சி குரல் கொடுத்ததால்தான் - நீதிக்கட்சித் தலைவர்கள் போராடியதால்தான் திராவிடர் கழகம் தோன்றியது; திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா முதல்வர் கலைஞர் போன்றவர்களுடைய உழைப்பு இல்லை என்றால் நமக்கு வாழ உரிமையே இருந் திருக்காது.

ஆட்சியைவிட, நமக்கு இன உரிமை என்பது முக்கியமானது. இவ்வாறு பேசினார் பேராசிரியர்.

No comments:

Post a Comment