காங் கிரஸ்-தி.மு.க. கூட்டணி தொடரும்'' என்று மத் திய நிதி அமைச்சர் பிர ணாப் முகர்ஜி பேசினார்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் 18.11.2010 அன்று நடந்த மத்திய அமைச் சர் மு.க.அழகிரி மகன் துரைதயாநிதி திருமண விழாவில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசியதாவது:-
``வரலாற்றுச் சிறப்பு மிக்க மதுரையில் நடக் கும் துரைதயாநிதி-அனுஷா திருமணத்திற் காக நாம் இங்கு கூடி யுள்ளோம். புதிய தம்பதி கள் இருவரும் சந்தோஷ மாக வாழ எனது வாழ்த் துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் குடும்பத்திற்கு ஒரு புதிய உறுப்பினர் வந்திருக்கிறார். எனவே இது ஒரு சந்தோஷமான நேரம். இந்த விழாவில், பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகி யோர் கலந்துகொள்ள வில்லை என்றாலும், அவர்கள் இந்த திரு மணத்திற்கு வாழ்த்து அனுப்பி இருக்கிறார்கள்.
சிறப்புமிக்க பல் வேறு துறைகளைச் சேர்ந் தவர்கள் இந்த திரு மணத்தில் கலந்து கொண்டு இருக்கிறார் கள். இதிலிருந்தே அவர் கள் இந்த குடும்பத்திற்கு எவ்வளவு முக்கியத்து வம் தருகிறார்கள் என் பது தெரிகிறது.
இந்த குடும்பத்தினர் பொதுவாழ்வில் பல் வேறு சேவைகளை செய்து வருகின்றனர். கலைஞர் இந்தியாவில் உள்ள மிகச் சிறந்த அரசியல் தலைவர். அவரும், அவ ரது குடும்பமும் சமூகம், அரசியல் மறுமலர்ச்சி ஆகியவற்றுக்கு மிகப் பெரியளவில் தொண் டாற்றி உள்ளனர்.
மத்தியிலும், மாநிலத் திலும் எங்களுடைய கூட்டணி (தி.மு.க. - காங் கிரஸ்) கடந்த 2004 ஆம் ஆண்டு தொடங்கியது. எங்களுடைய கூட் டணி, ஆறரை ஆண்டு களை நிறைவு செய்து விட்டது. நாட்டின் சமூ கம் மற்றும் பொருளா தார மேம்பாட்டில் கடந்த ஆறரை ஆண்டு களாக அய்க்கிய முற் போக்குக் கூட்டணி பொறுப்பாக செயல் பட்டு வருகிறது.
அந்தப் பணிகளில் இனிமேலும் தொடர்ந்து நாங்கள் இணைந்து செயல்படுவோம் என் பதில் எந்தவித சந்தேக மும் கிடையாது. அடுத்த மூன்றரை ஆண்டுகளுக் கும் இந்த கூட்டணி தொடரும். வரும் ஆண் டுகளில், இந்த கூட்டணி இன்னும் பலவித சாத னைகளை செய்யும்.
இந்திய நாட்டின் மிகப் பெரிய மூத்த அர சியல்வாதியாக தி.மு.க. தலைவர் கலைஞர் இருக்கிறார். நாட்டின் அரசியல் மற்றும் சமூக மாற்றங்களில் அவரு டைய பங்களிப்பு மிக வும் பாராட்டத்தக்கது. எங்கள் அனைவரையும் வழி நடத்திச் செல்லும் கலைஞரை நான் மதிக் கிறேன். அவருக்கு எனது மிகுதியான பாராட்டு களைத் தெரிவிக்கிறேன்.''
- இவ்வாறு பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
No comments:
Post a Comment