கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, November 26, 2010

இராசாமீது பூசப்பட்ட கறையைத் துடைத்தெறிய புறப்படுவோம்! - ஊடகத்துறை அறிஞர்களின் முழக்கங்கள்

ஆ.இராசாமீது சில ஊடகங்களின் வேட்டை ஏன்? என்ற தலைப்பில் ஊடகத் துறை அறிஞர்கள் பங்கேற்ற கூட்டம் 24.11.2010 அன்று மாலை 6.30 மணிக்கு சென்னை தியாகராயர் நகரில் தியாகராயர் மண்டபத்தில் தொடங்கி எழுச்சியுடன் நடை பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து பத்திரிகையாளர் ஜெயகிருஷ்ணன் வரவேற்றார்.

ரமேஷ் பிரபா


அடுத்து தொலைக் காட்சி ஊடகவியலாளர் ரமேஷ் பிரபா தனது உரை யில் குறிப்பிட்டதாவது:

இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் என்ற பிரச்சினையே இல்லாத ஒன்று இருப் பதாக புரளியைக் கிளப்பி விடுவது. ஆங்கில தொலைக் காட்சி சேனல்கள் ஒரு தனி ஜாதியாக இருந்து கொண்டு செயல்படு கின்றார்கள்.

ஒரு பேட்டி என்று வரும்பொழுது பதில் சொல் பவர்களை முழுமையாக பேசவிடாமல் முழுமை யாகப் பேசினால்தான் உண்மை நிலை என்ன வென்பது புரியும். அப்படி முழுமையாகப் பேச விடாமல் இடையிடையே கேள்வி கேட்டு பேட்டியாளர்கள் எதிர்பார்ப்பதை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். பேட்டிக்கு வந்தவர்களின் முழுமையான பதிலை இவர்கள் பெறுவதில்லை. ஸ்பெக்ட்ரம் விவகாரம் 2002, 2003, 2004, 2005, 2006, 2007, 2008, 2009 வரை இருக்கிறது.

ஸ்பெக்ட்ராம் விவகாரத்திற்கு முழு அத்தாரிட் டியாக விளங்குகின்ற டிராய் அமைப்பு 4 பரிந் துரைகளை அதாவது 1500 பக்கங்களைக் கொண்ட பரிந்துரைகளை வெளியிட்டிருக்கிறது. அதை எந்த ஊடகவியலாளரும் படித்ததில்லை. அதைப்படித்து விட்டு இதுவரை கேள்வியும் கேட்கவில்லை.

தனியார் சேனல்களுக்கு பணம் கொடுத்தவர்கள் யார்?

அதாவது ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்கள் இராசாவை எப்படி காட்டுகிறார்கள் என்றால், அவர் நடப்பது, அவர் தலையில் கை வைத்து உட்கார்ந்திருப்பது இந்த மாதிரி மோசமான காட்சிகளையே வேண்டுமென்றே காட்டுகிறார்கள்.

ஆ.இராசா பதவி விலகிவிட்டு வருகிறார். டில்லியைச் சார்ந்த ஒரு தொலைக்காட்சி பெண் மட்டும் குறுக்கே இராசாவை மறித்து இராசாவுக்கு எதிராக விஷமத்தனமாக கேள்வி கேட்கிறார். நமது மற்ற ஊடகவியலாளர்கள் எங்கே போனார்கள்? ஆகவே ஒரு பெண்ணை அவர் முன் தடுக்கி விழச் செய்து ஏதாவது நடக்காதா? ஏதாவது இராசா மீது குற்றம் சுமத்த முடியாதா என்று பார்க்கிறார்கள்.

ஒரு சதவிகிதம் கூட யாரும் பார்ப்பதில்லை.

பெரும்பாலான வடநாட்டு ஆங்கில தொலைக் காட்சி சேனல்கள் பல நூறு கோடி ரூபாய் நட்டத் தில் தான் இயங்குகின்றன. இவைதான் ஆ.இராசா விஷயத்தைப் பெரிதுபடுத்தி அடிக்கடி காட்டு கின்றனர்.

இந்த தனியார் சேனல்களுக்கு ஸ்பான்சர்ஸ் பண்ணுவது யார்?

ஆ.இராசா பெயரைக் கெடுக்க எத்தனை கோடி பணம் கொடுக்கப்பட்டது? யார் கொடுத்தார்கள் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியத்தான் போகிறது என்று பேசினார்.

ஜெகத் கஸ்பார்

தமிழ் மய்ய நிறுவனர் ஜெகத் கஸ்பார் தனது உரையிலேயே குறிப்பிட்டதாவது:


ஆ.இராசா அவர்கள் சமூகநீதி அரசியலை மிக ஆழமாக நேசிக்கக் கூடியவர். தந்தை பெரியார் கொள்கை மீது ஒப்புவமை இல்லாத மரியாதை வைத் திருப்பவர். சமூக நீதி சார்ந்த அரசியலை மக் களுக்கு எடுத்து வைப் பவர்.

இரண்டாவது, அவர் ஒரு தாழ்த்தப்பட்ட சமு தாயத்தைச் சார்ந்தவர். ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒருவரை உயர் பதவியில் அமர வைத்திருப்பது கலைஞரைத் தவிர வேறு யாரும் அப்படி உயர்த்தி வைக்க முடியாது.

உண்மையிலேயே இந்த இரண்டு காரணங் களுக்காகத்தான் நான் அவரை நேசிக்கிறேன்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு 2003ஆம் ஆண்டி லிருந்து 2010ஆம் ஆண்டு வரை நடைபெற்றி ருக்கிறது. இராசா பதவி ஏற்றபிறகு 2008ஆம் ஆண்டை மட்டும் 2ஜி ஸ்பெக்ட்ரம் இந்திய தணிக்கை அதிகாரி கேள்வி கேட்பது ஏன்? ஒன்று, இந்த ஆடிட்டருக்கு உண்மையிலேயே ஆடிட்டிங் தெரியாது. இரண்டாவது அந்த தணிக்கை அதிகாரி இதை உள்நோக்கத்தோடு எழுதியிருக்கின்றார் என்பதைத் தான் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆ.இராசா விசயத்தில் எஃப்அய்ஆர் கூட பதிவு செய்யப்படவில்லை. விசாரணை செய்யவில்லை. விஜிலென்ஸ் கமிஷன் விசாரணை இல்லை. சி.பி.அய். விசாரணை நடத்தவில்லை. ஆனால் அதற்குள்ளா கவே இராசாவை குற்ற வாளியாக்கி பதவி விலகச் செய்து அவரை கழுவில் ஏற்றிக் கொன்று விட்டார் கள்.

செந்நாய் கூட்டம் எப்படி ஒரு மனிதனை கடித்துக் குதறுமோ அது போல இராசாவைக் குதறி விட்டனர்; காரணம் மீடியாக்களே. இந்தியாவில் இரண்டு மாயைகளை உடைத்தே ஆக வேண்டும். ஒன்று நீதித் துறையை எதிர்த்து யாரும் கேள்வி கேட்கக் கூடாது. இரண்டாவது ஊழல் வயப்பட்ட நிருவாகத் துறையையும் கேள்வி கேட்கக் கூடாது. இந்த இரண்டு அமைப்பையும் உடைத்தே ஆகவேண்டும். மீடியாக்கள் அரைகுறை உண்மை களையே வெளி யிடுகின்றன. வேண்டுமென்றே முழு உண்மையைத் தவிர்த்து விடுகிறார்கள்.

ஊடகங்கள் ஒரு சார்பாக செயல்படக் கூடாது. ஒரு பத்திரிகைக்கு தலையங்கம் எழுதுகிறவர் களுக்கு முதலில் தகுதி இருக்கவேண்டும். அதற்குரிய யோக்கியதை இருக்க வேண்டும்.

டில்லியில் விளக்க வேண்டும்

இடதுசாரிகள் இந்த விசயத்தில் உண்மையைப் பேச மறுக்கிறார்கள். ஊடகங்களிலே ஜாதி அரசியல் இருக்கிறது. மத அரசியல் இருக்கிறது. நாம் இங்கே மட்டும் இதுபோன்ற விளக்கங்களை சொன்னால் போதாது. டில்லிக்கே சென்று நாம் விளக்க வேண்டும்.

இராசா ஒரு போராளி. இராசாவை ஒழித்துக் கட்ட ஒரு கூட்டு - கொள்ளை கும்பல் ஒன்றாக இணைந்து செயல்பட்டிருக்கிறது. - இவ்வாறு பேசினார்.

ஏ.எஸ். பன்னீர்செல்வம்

போனஸ் சவுத் ஏசியா ஊடக அமைப்பின் செயல் இயக்குநர் ஏ.எஸ். பன்னீர்செல்வம் தமது உரையில் குறிப்பிட்ட தாவது:


ஸ்பெக்ட்ரம் சம்பந்த மாக நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட இந்திய தணிக்கை குழு அறிக்கை (சிஏஜி அறிக்கை) உள்ள செய்திகள் என் கையில் வைத்துள்ளேன்.

இதில் 2002ஆம் ஆண்டு முதல் 2010 வரை உள்ள அறிக்கை. ஆனால் 2008 ஆம் ஆண்டு மட்டும் இந்த அறிக்கை பெரிதுபடுத்திச் சொல்கிறது. மற்ற ஆண்டு களைப் பற்றி இந்த அறிக் கையில் ஒரு வார்த்தை கூட இல்லை. இந்திய தணிக்கை அதிகாரி எதை வேண்டுமானாலும் சொல்ல வேண்டும், நாங்கள் அதை நம்பவேண்டுமா?

எனக்குத் தோன்றியதை எழுதினேன்

சி.ஏ.ஜி. ரிப்போர்ட்டை தாக்கல் செய்த சி.ஏ.ஜி. அதிகாரி சொல்லுகிறார். எனக்குத் தோன்றியதை நான் இந்த அறிக்கையில் எழுதியிருக்கின்றேன் என்று சொல்லியிருக் கின்றார்.

அதாவது எதையும் படிக்காமல், எந்த ஆதாரத் தையும் வைக்காமல், எந்த புள்ளி விவரத்தையும் படிக்காமல் எனக்குத் தோன்றியதை எழுதியிருக் கிறேன் என்று சொல்லு கின்றார்.

அதாவதுதான் தோன் றித்தனமாக இந்திய கணக்கு தலைமை அதிகாரி ஓர் அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார் என்று நான் குற்றம் சுமத்து கிறேன். ஸ்பெக்ட்ரல் மார்க்கெட்டிங் முதலீடே ரூ. இரண்டு லட்சம் கோடி. ஆனால் ரூ.1,76,000 கோடி எப்படி ஊழல் நடைபெற்றிருக்கும்? வேடிக்கையாக இருக்கிறது.

தொலை தொடர்புத்துறை 2002ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த அமைச்சகத்தில் பிரமோத் மகாஜன், அருண் ஷோரி, தயாநிதி மாறன், சுக்ராம் ஆகியோர் எல்லாம் அமைச் சர்களாக இருந்திருக் கிறார்கள்.

ஆனால் அவர்களைப் பற்றி எல்லாம் சொல்லா மல் இராசாவை மட்டும் குறி வைத்துத் தாக்குவது ஏன்?

தொலை தொடர்புத் துறையை ஒரு சமூக சேவைத் துறையாகப் பார்க்க வேண்டும். டிராய், மத்திய அமைச்சரவை எடுத்துதான் எல்லா முடிவுமே செயல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தத் துறையில் நட்டம் வரத்தான் செய்யும். அது பொது மக்களுக்கு இலாபமாகத்தான் இருக்கும். - இவ்வாறு பேசினார்.

சுப.வீரபாண்டியன்

கறுஞ்சட்டைத் தமிழர் இதழ் ஆசிரியர் பேரா சிரியர் சுப.வீரபாண்டியன் தமது உரையிலே குறிப் பிட்டதாவது:


கஸ்பார் பேசும் பொழுது சொன்னார். இரண்டு காரணங்களுக் காக இராசாவை எனக்குப் பிடித் திருக்கிறது என்று. அதே இரண்டு காரணங் களுக்காகத்தான் பார்ப் பனர்களும், பார்ப்பன ஊடகங்களும் அவரை வெறுக்கின்றன. தி.மு. க.வை அழித்த கறுப்பு அயைளம் என்று சொல்லி தாக்கினார்கள். ஆ.இராசா வும் பதவி விலகினார்.

கறுப்பு அடையாளம் பெரியார் கொடுத்தது. எனவே அது உங்களுக்கு கொஞ்சம் கசக்கத்தான் செய்யும். தி.மு.க., காங்கிரஸ் ஊழல் கட்சிகள் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள் என்று உயர்ஜாதி ஊடகம் தெரிவித்திருக்கிறது.

விடுதலையில் நாளைக்கு கருத்துத் தெரிவிக் கட்டுமா? நூற்றுக்கு நூறு சரியான கூட்டணி என்று.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் எதுவுமே இன்னும் நீதி மன்றத்திற்கு வரவில்லை. தலித் மக்களின் தகத்த காய ஜொலிக்கும் கொள்கை வீரன் ராசா என்று கலை ஞர் குறிப்பிட்டிருக்கிறாரே.

அய்யா வீரமணி மிக அருமையாக எழுதியிருக்கிறார்

இன்றைய விடுதலை யில் நம்முடைய ஆசிரியர் அய்யா வீரமணி அவர் கள் மிகச் சிறப்பானதொரு அறிக்கையை, மிகச் சரியானதொரு தருணத்தில் எழுதியிருக்கின்றார்.

திமுக பிரச்சாரப் படை தமிழகமெங்கும் கிளம் பட்டும் என்று மிக அருமையாக எழுதியிருக் கின்றார். தமிழர்களே புறப்படுங்கள் நாடெங்கும் நமது பிரச்சாரத்தை கிளப்பிடுவோம். ஆ.இராசாவின் மீது பூசப்பட்ட கறையைத் துடைப்பது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.

சு.சாமி, தினமணி ஆசிரியரை கைது செய்யுங்கள்

சுப்பிரமணியசாமி சொல்லுகிறார். இராசா உயிருக்கு ஆபத்து - யாரோ கொல்லப்போகிறார்கள் என்று சொல்லுகிறார்கள். அப்படியானால் இராசாவை யாரோ கொலை செய்யப் போகிறார்கள் என்ற செய்தி உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. எனவே முதலில் சுப்பிரமணிய சாமியை கைது செய்யுங்கள்.

அதேபோல இராசாவை தீண்டத்தகாதவராக சொன்ன தினமணி ஆசிரியரை கைது செய்யுங்கள். நீரோ என்பவருடைய உரையாடலைப் பார்த்து கலைஞர் கண் கலங்கினாராம். ஏதோ பக்கத்தில் இருந்து பார்த்தவன் போல் சொல்கிறார்கள்.

எந்தக் காலத்திலும் எதற்கும் கலங்காதவர் தான் கலைஞர். இராசாவுக்கு நடத்துகின்ற முதல் கூட்டமல்ல இது. தமிழகம் முழுக்க இந்தக் கூட்டம் சுழன்றடிக்க வேண்டும். - இவ்வாறு சுப. வீரபாண்டியன் பேசினார்.

தி.சிற்றரசு நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொகுத்து வழங்கினார். மண்டபம் நிறைந்து மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆன்டோ பீட்டர் நன்றி கூறிட இரவு 9.30 மணிக்குக் கூட்டம் நிறைவுற்றது

No comments:

Post a Comment