கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, November 28, 2010

பெரியார் சிந்தனைகளை விஞ்சக் கூடியவர்கள் உலகத்தில் இதுவரை யாரும் தோன்றவில்லை! - கவிஞர் கனிமொழி எம்.பி. உரை




தந்தை பெரியார் கொள்கைகள் வெற்றி பெற்றால்தான் உண்மையான சமத்துவ - சம உரிமை உள்ள சமுதாயத்தை உருவாக்க முடியும் என்றார் மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி.


வைக்கத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் (26.11.2010) உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்ட தாவது:


" அய்யா நடத்தி வெற்றி பெற்ற வைக்கம் போராட் டத்தின் 85ஆம் ஆண்டு விழாவிலே கலந்து கொள் வதில் நான் பெருமை அடைகிறேன் பொதுவாக குருவுக்குச் சிஷ்யர்கள்தான் குரு காணிக்கை செலுத் துவார்கள். இங்கு எனது குருவான ஆசிரியர் எனக்கு நினைவுப் பரிசு அளித்து, சால்வை போர்த்தி சிறப்பு செய்திருக்கிறார், அதற்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரியார் திடலே இடம் பெயர்ந்ததோ!

சென்னையிலிருந்து பெரியார் திடலே இங்கு இடம் பெயர்ந்து விட்டதோ என்று நினைக்கும் அளவுக்கு, வெளி மாநிலத்தில் நடைபெறும் விழா வில் கருஞ்சட்டைக் குடும்பங்கள் திரண்டு இருப் பது கண்டு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது (பலத்த கரவொலி) .


85 ஆண்டுகளுக்குமுன் தந்தை பெரியார் அவர் கள் இங்கு வந்து போராட்டம் நடத்தி வெற்றி பெற்று இருக்கிறார் என்பது சாதாரணமானதல்ல. ராஜாஜி போன்றவர்கள், தமிழ்நாட்டில் அதிகம் வேலை இருக்கும்போது இன்னொரு மாநிலத்திற்குச் சென்று எதற்காகப் போராட வேண்டும் என்று தடுத்துப் பார்த்தும் தந்தை பெரியார் அவர்களின் போராட்ட உணர்வைத் தடுத்து நிறுத்த முடிய வில்லை.

சேகுவாராவும், தந்தை பெரியாரும்

மாவீரன் சேகுவாரா இன்றைய இளைஞர்கள் இதயத்தில் இடம் பிடித்த போராட்ட வீரர். தனது பூமியாகிய கியூபாவில் போராடி வெற்றி பெற்று விட்ட நிலையில், அதோடு திருப்தி அடையாமல், எந்தெந்த நாடுகளில் போராட்டங்கள் நடத்தப்படு கின்றனவோ அந்தந்த நாடுகளுக்கெல்லாம் சென்று சுதந்திரத்திற்காகப் போராடினார் என்று படித் திருக்கிறோம்.


தந்தை பெரியார் அவர்களும் தமிழ் மண்ணில் பல சமூகப் புரட்சிப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தாலும், கேரளாவில் - இந்த மண்ணில் நிலவும் வருணாசிரமக் கொடுமையை ஒழிப்பதற் காகப் புறப்பட்டு வந்தார் என்றால் அது சாதாரண மானதல்ல.


அதே போல் தான் சமூகநீதிப் போராட்டத்தில் இந்தியாவில் அடக்கப்பட்ட மக்களின் ஒவ்வொரு இதயத்திலும் நிற்பவர் நமது அய்யா அவர்கள்தான்.
மற்றவர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கக் கூடாது; யாருக்கும் ஒன்றும் ஏற்பட்டு விடக் கூடாது என்று தந்திரமாகப் பேசுவோர் உண்டு. ஆனால் யார் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும், அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் சமூக மாற்றத்திற்குத் தேவையான புரட்சிகரக் கருத்துகளை எடுத்துக் கூறி வந்தவர் பெரியார் ஒருவர்தான்.

பெண்ணுரிமை பற்றிப் பேச வந்தவர்கள்

பெண்ணுரிமை பற்றிப் பேச வந்தவர்கள் எல்லாம் நமக்கென்று ஒரு பாரம்பரியம் இருக்கிறது, அதனைக் கட்டிக் காக்க வேண்டும், பெண் ணென்றால் இப்படி இப்படித்தான் இருக்க வேண்டும் என்பார்கள். பெண்களின் உரிமைகளை மற்றவர்கள்தான் தீர்மானிக்கும் நிலை இந்நாட்டில் - அப்படி ஆண்களால், மற்றவர்களால் தீர்மானிக்கப் படுவதுதான் பெண்களின் உரிமைகள் என்றும் சாதிப்பார்கள்.


ஆனால் அவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்ளா தவர் நமது அய்யா. இன்னும் சொல்லப் போனால் பெண்கள் தங்களின் உரிமைகளை அவர்களே போராடிப் பெற வேண்டும் என்பதுதான் தந்தை பெரியார் அவர்களின் கொள்கையாகும்.

அன்னை நாகம்மையார் பெற்ற பக்குவம்

வைக்கத்தில் தான் சிறைப்பட்டால், அடுத்துத் தம் துணைவியார் தலைமை தாங்கி நடத்தும் அளவுக்கு, தமது தங்கை கண்ணம்மாள் முன்னின்று நடத்தும் அளவுக்கு அவர்களைப் பக்குவப்படுத்தி, தயார் நிலையில் வைத்தவர் தந்தை பெரியார்.


எந்த அளவுக்கு அன்னை நாகம்மையார் பக்குவப் பட்டிருந்தார்?


என் கணவன் ஈ.வி. இராமசாமி நாயக்கர் இந்த மாதம் முதல் தேதி திருவனந்தபுரம் சிறையிலிருந்து விடுதலையானார். இன்று காலை 10 மணிக்கு (11.9.1924) மறுபடியும் ராஜத் துரோகக் குற்றத்துக் காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்.


இரண்டு வருஷத்திற்குக் குறைவில்லாத காலம் தண்டனை கிடைக்கக் கூடிய பாக்கியம் தமக்குக் கிடைத்திருப்பதாகச் சொல்லி என்னிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டு விட்டார்.


அவர் திரும்பத் திரும்ப தேச ஊழியத்தின் பொருட்டு சிறைக்குப் போகும் பாக்கியம் பெற வேண்டும்; அதற்காக அவர் ஆயுள் வளர வேண்டும் என்று நாகம்மையார் குறிப்பிடுகிறார் என்றால், இதன் பொருள் என்ன?
உண்மையான ஒரு போராளி தன்னைச் சுற்றி யுள்ளவர்களையும் போராளிகளாக வைத்திருப்பார்கள்.

பெரியாரை விஞ்சக் கூடிய சிந்தனையாளர் யார்?

இவ்வுலகத்தில் தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளை விஞ்சக் கூடியவர்கள் யாரும் தோன்றவேயில்லை.
அதனால்தான் இன்றும் பெரியார் பிரமிப்புக் குரியவராக காணப்படுகிறார்.
இந்தியா டுடே ஒரு சிறப்பிதழை வெளியிட்டு உள்ளது. இந்தியாவில் உள்ள பல மாநில ஆட்சி களைப்பற்றியெல்லாம் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காரணம் - திராவிடர் ஆட்சி!

குஜராத் - நரேந்திரமோடி, டில்லி - ஷீலா தீட்சித் பற்றியெல்லாம் எழுத முடிகிறது. ஆனால் இந்தியா விலேயே சிறந்த ஆட்சியை நடத்தி வரும் கலைஞர் பற்றி ஒரு வரி கிடையாது.
காரணம் - இங்கு நடப்பது திராவிடர் ஆட்சி!

ஆம், சூத்திரர் ஆட்சியே!

ஒருமுறை சட்டமன்ற உறுப்பினர் ஹண்டே அவர்கள் திமுக ஆட்சியை தேர்டு ரேட் கவர்ன் மெண்ட் என்று குறிப்பிட்டார். முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள். அதற்கு உடனடியாகப் பதில் கொடுத்தார்.
மூன்றாந்தர அரசு அல்ல; இது நான்காம் தர மக்களுக்காக - சூத்திர மக்களுக்காக நடத்தப்படும் சூத்திரர்களின் அரசு என்றார் (பலத்த கரஒலி!)

ஏகலைவனின் கட்டை விரல் காணிக்கையாக கேட்கப்பட்டது ஏன்?

மகாபாரதத்திலே கர்ணன் தேரோட்டியின் மகன் என்பதாலேயே புறக்கணிக்கப்படுகிறான்.
ஏகலைவன் எனும் பழங்குடியைச் சேர்ந்தவன் வில் வித்தையில் தேர்ந்தவன்; மற்றவர்களை யெல்லாம் விஞ்சியவன் என்று தெரிந்த நிலையில், அவன் கட்டை விரலைக் காணிக்கையாகப் பெற்றான் துரோணாச்சாரி என்றால் இது எந்த வகை தர்மம்? கட்டை விரலைக் காணிக்கையாகப் பெற்றபின் அவன் எப்படி அம்பை எய்திட முடியும்?
ஏகலைவன் சத்திரியனாக இருந்திருந்தால் கட்டை விரல் காணிக்கையாகக் கேட்கப்பட்டு இருக்காது! மாறாக, மாலைகள்தான் அவன் கழுத்தில் விழுந்திருக்கும்.
வழி வழியாக நம் மக்களின் திறமைகள் மறுக்கப் பட்டு வந்திருக்கின்றன. வருணாசிரமத்தால் ஒடுக்கப் பட்டு வந்திருக்கின்றன.

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் - எதிர்ப்போர் யார்?

ஜாதியெல்லாம் இப்பொழுது எங்கே இருக்கிறது என்று சிலர் கேட்கிறார்கள். அப்படியானால் ஜாதி வேறுபாடு பார்க்காமல் அர்ச்சகர்களாக இருக் கலாம் என்றும் சட்டம் செய்தால் நீதிமன்றம் சென்று தடை வாங்குகிறார்களே, அது ஏன்? அந்த உயர்ஜாதி மனப்பான்மை அவர்களை விட்டு அழிந்து போகவில்லை.


பார்ப்பனர்கள், பார்ப்பனியம் என்று வருகிற போது நாங்கள் எந்தத் தனிப்பட்ட பார்ப்பனர்கள் மீதும் வெறுப்புக் கொள்வதில்லை. பார்ப்பனியத் தத்துவத்தைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.
சித்தர்கள் பார்ப்பனர்களைப் பற்றிப் பாட வில்லையா?
சாத்திரங்கள் ஓதுகின்ற சட்ட நாத பட்டரே
வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ?
என்று சிவ வாக்கியர் பாடவில்லையா?

கருத்துகளை உருவாக்கும் இடத்தில் இருப்போர் யார்?

வேதம் உதவாது, இப்பொழுது திமுக ஆட்சியின் 108 தான் வந்து உதவுகிறது. தந்தை பெரியார் அவர்களின் சமூகநீதிப் போராட்டங்களால்தான் ஒடுக்கப்பட்டுக் கிடந்த மக்களில் சிலர் மருத்துவர் களாகியுள்ளனர்! பலர் பொறியாளர்களாகியிருக் கின்றனர். ஆனால் கருத்துகளை உருவாக்கக் கூடிய இடத்தில், திட்டங்களுக்குக் கரு கொடுக்கும் இடத் தில், உருவாக்கும் இடத்தில் யார் இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்!


கவுரவக் கொலைகள் நடக்கின்றன - ஜாதி மனப் பான்மை இருப்பதால்தானே இந்தக் கொடுமை. இதனை ஒழிப்பது நமது கடமையல்லவா!

இது என்ன தமிழ் சினிமாவா?

உயர் பதவிகளில் இருப்பவர்களிடத்திலே இன்னும் பழைய மனப்பான்மை இருந்து வருகிறது. பெண் ஒருவர் நீதிமன்றத்திற்குச் செல்லுகிறார். தான் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட தாகக் கூறி நீதி கேட்கிறார். அந்த நீதிபதி அதற்கு என்ன தீர்வு - தீர்ப்புக் கூறுகிறார்?


யார் உன்னைப் பாலியல் பலாத்காரம் செய் தானோ அவனையே கல்யாணம் செய்துகொள் என்று தீர்ப்பு வழங்குகிறார்.
இந்தத் தீர்ப்பு நியாயம்தானா? இது எந்த வகையைச் சேர்ந்தது? இது என்ன தமிழ் சினிமாவா?

பெரியார் கொள்கைகள் வெற்றி பெற வேண்டும்

எல்லாத் தளங்களிலும் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள் பரவ வேண்டும், வெற்றி பெற வேண்டும். அப்பொழுதுதான் வளர்ச்சி அடைந்த ஓர் உண்மையான சமத்துவ - சம உரிமையுள்ள சமுதாயத்தைக் காண முடியும். அதற்காக நாம் பிரச்சாரம் செய்வோம் - பாடுபடுவோம் - தந்தை பெரியார் எண்ணங்களை நிறைவேற்றுவோம் " என்று கூறினார் கவிஞர் கனிமொழி.

No comments:

Post a Comment