கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, November 22, 2010

பண்ணை சாரா கடன்களுக்கான வட்டி சலுகை 2011 வரை நீட்டிப்பு - முதல்வர் கருணாநிதி ஆணை


தமிழக அரசு 20.11.2010 அன்று வெளியிட்ட அறிக்கை:
தமிழக விவசாயிகள் அனுபவித்து வந்த கடன் சுமைகளை முழுவதும் அகற்றும் நோக்கில், 2006 மார்ச் 31ம் தேதி வரை இருந்த கூட்டுறவு விவசாய கடன்கள் ஏறத்தாழ 7 ஆயிரம் கோடி ரூபாயை, அரசு தள்ளுபடி செய்து ஆணை பிறப்பித்தது. 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.
விசைத்தறி, செங்கல் சூளை போன்ற பல்வேறு பணிகளுக்காக வழங்கப்பட்டு, பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பண்ணை சாராக் கடன் பெற்றவர்களுக்கு ஏற்பட்டிருந்த கடன் சுமையைக் குறைக்கவும் இந்த அரசு முடிவு செய்தது.
2007 மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, தவணை தவறிய பண்ணை சாராக் கடன்கள் அனைத்துக்கும், அவர்கள் ஏற்கனவே செலுத்தி வந்த 12 சதவீத வட்டியை 6 சதவீதமாக குறைத்தும், அபராத வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்தும் இந்த அரசு ஆணையிட்டது.
இந்த வட்டிச் சலுகையை பெற்றிட பண்ணை சாராக் கடன் பெற்றவர்கள், தங்கள் கடனை திருப்பிச் செலுத்த 2010 மார்ச் 31ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. தமிழக அரசு வழங்கிய இந்த சலுகையால் 79,932 பேர் 201 கோடியே 94 லட்சம் ரூபாய் கடன் தொகை யை திரும்பச் செலுத்தினர். எனினும், இந்த சலுகையின் முழு பலனையும் பெற முடியாத நிலையில், மீதமுள்ள ஒரு லட்சத்து 63,722 பேர், இந்த சலுகை திட்டத்தை மேலும் நீட்டிக்குமாறு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அதைத்தொடர்ந்து, பண்ணை சாராக் கடன்களுக்கான சிறப்பு கடன் தீர்வு திட்டத்தில், ஏற்கனவே சேர்ந்து 25 சதவீத தொகையைச் செலுத்தியவர்கள், மீதம் செலுத்த வேண்டிய தொகையை ஒரே தவணையில் அல்லது அதிகபட்சமாக 4 காலாண்டு தவணைகளில் 2011 டிசம்பர் 31க்குள் செலுத்தலாம் என்றும் முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment