கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, November 22, 2010

கடலோர ஒழுங்குமுறை அறிவிப்பாணை - முதல்வர் கலைஞர் மீண்டும் வலியுறுத்தல்


கடலோர ஒழுங்குமுறை அறிவிப்பாணை மீது மீனவர்கள் மற்றும் சுற் றுச்சூழல் ஆர்வலர்களுக்கு உள்ள சந்தேகங்களைப் போக்கிய பிறகு அதை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் முதல்வர் கலைஞர் மீண் டும் கோரிக்கை விடுத்து உள்ளார்.

இது குறித்து, பிரத மர் மன்மோகன் சிங் குக்கு 19.11.2010 அன்று அவர் எழுதிய கடிதத் தின் விவரம் வருமாறு:

கடலோர ஒழுங்கு முறை அறிவிப்பாணை யில் உள்ள அம்சங்களை அனைத்து தரப்பினரும் குறிப்பாக மீனவ சமு தாயத்தினர் முழுமை யாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அதன்பின்பே அதைச் செயல்படுத்த வேண்டும் எனவும் ஏற்கெனவே தங்களுக்கு எழுதிய கடி தத்தில் குறிப்பிட்டு இருந் தேன்.

அறிவிப்பாணை குறித்து கடந்த செப்டம் பர் மாதம் 15 ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப் பட்டது. அது வெளி யான 60 நாட்களுக்குள் பொது மக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக் கலாம் என அறிவிக்கப் பட்டது.

இந்த அறிவிப்பா ணைக்கு மீனவ மக்களி டம் கடும் எதிர்ப்பு உள் ளது. இதனால், அவர் களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப் படும். மேலும், கட லோர சூற்றுச்சூழலும், கடல்சார் வளமும் பாதிப்புக்குள்ளாகும் என்ற கருத்து நிலவுகிறது.

இந்த அறிவிப்பாணை யில் மேலும் சில புதிய திருத்தங்கள் செய்யப் பட்டுள்ளன. அய்ந்தாண் டுகளுக்கு ஒரு முறை கடலோர மேலாண் மைத் திட்டங்களில் மாற்றம் செய்வது என் பது போன்ற திருத்தங் கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்த சட்ட முன்வடிவுக்கு ஏற்கெ னவே தமிழகத்திலுள்ள கடலோர மாவட்டங் களில் உள்ளவர்கள் தொடர் போராட்டங் களை நடத்தி வருகின்றனர்.

கடலோர ஒழுங்கு முறை அறிவிப்பாணை ஒரு சில தரப்பினரின் வளர்ச்சிக்கு ஊக்குவிப் பாக இருக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர் குழுக்கள் அச்சம் தெரி வித்துள்ளன. கடலோர மேலாண்மை விஷயத் தில் ஏதேனும் மாறுதல் கள் செய்யப்படும் பட் சத்தில் அது மீனவ மக்களிடையே பெரும் குழப்பத்தை விளைவிக் கும். இதைப் பயன் படுத்தி சிலர் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை களைக் கிளப்ப வாய்ப்பு ஏற்படும்.

எனவே, மேற்கூறிய உண்மைக் கருத்துகளை கருத்தில் கொண்டு அறி விப்பாணையை தள்ளி வைக்க வேண்டும். மீனவ மக்கள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களி டையே இந்த சட்ட முன்வடிவு குறித்து எழுந் துள்ள சந்தேகங்களை நீக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் கலைஞர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment