கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, November 22, 2010

ஆ.இராசாவின் ராஜினாமா ஏற்பு : டி.ஆர்.பாலு விளக்கம்


ஆ.இராசாவிடம் இருந்த தொலைத்தொடர்பு இலாகா, கூடுதல் பொறுப்பாக மத்திய அமைச்சர் கபில் சிப லுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மனிதவள மேம் பாட்டுத் துறை அமைச் சர் கபில்சிபலுக்கு 15.11.2010 அன்று கூடுதல் பொறுப் பாக தொலைத் தொடர்பு இலாகா வழங்கப்பட்டது.

விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணையமைச்சராக இருந்த பிரிதிவிராஜ் சவான் சில நாள்களுக்கு முன் மராட்டிய மாநில முதல்வராக தேர்ந்து எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த இலாகா கூடுதல் பொறுப்பாக கபில் சிபலுக்கு ஒதுக்கப் பட்டது. இப்போது தொலைத்தொடர்புத் துறை இலாகாவும் அவருக்கு ஒதுக்கப் பட்டு இருக்கிறது.

டி.ஆர்.பாலு

கபில்சிபலுக்கு கூடு தல் பொறுப்பாக தொலைத்தொடர்பு இலாகா வழங்கப்பட்டு இருப்பது பற்றி முன் னாள் மத்திய அமைச் சரும், தி.மு.க. எம்.பி. யுமான டி.ஆர்.பாலு விடம் செய்தியாளர்கள் கருத்துக் கேட்டபோது, அவர் கூறியதாவது: காலி இடத்தை நிரப்பும் இடைக்கால ஏற் பாடாக கபில் சிபலுக்கு கூடுதல் பொறுப்பாக தொலைத்தொடர்பு இலாகா வழங்கப்பட்டு இருக்கிறது. காலியாக இருக்கும் இலாகாவை எந்த அமைச்சருக்கு ஒதுக்க வேண்டும் என் பது முழுக்க முழுக்க பிரதமரின் தனிப்பட்ட உரிமை ஆகும். இதுபற்றி பிரதமர் தவிர வேறு யாரும் எதுவும் கூற முடியாது.

எங்கள் தலைவர் (கருணாநிதி) ஆ.இராசா வுக்குப் பதிலாக இது வரை யாருடைய பெய ரையும் பிரதமருக்குத் தெரிவிக்கவில்லை. கட்சியின் மூத்தத் தலை வர்களுடன் கலந்து ஆலோசித்து, தி.மு. க.வின் சார்பில் நியமிக் கப்பட இருக்கும் புதிய கேபினட் அமைச்சரின் பெயரை பிரதமருக்கு அவர் தெரிவிப்பார். -இவ்வாறு டி.ஆர்.பாலு எம்.பி கூறினார்.

No comments:

Post a Comment