ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரம் பற்றி விசாரணை நடத்திய மத்திய கணக்கு தணிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரியின் அறிக் கையில், தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.இராசா மீது குற் றம் சுமத்தப்படவில்லை என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார்.
வீரப்ப மொய்லி 12.11.2010 அன்று டில்லி யில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
`2-ஜி' ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற் றம்சாற்றி வருகின்றன. ஆரோக் கியமான ஜனநாயகத்தில் எதிர்க் கட்சிகள் இவ்வாறு குற்றம் சுமத் துவதை குறை கூற முடியாது. இதை வைத்து சம்பந்தப்பட்ட அமைச்சகம் தவறு செய்ததாக அர்த்தம் ஆகாது.
இந்த விவகாரம் பற்றி விசா ரணை நடத்திய மத்திய கணக்கு தணிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரி தாக்கல் செய்துள்ள அறிக்கை இறுதி அறிக்கை அல்ல. அந்த அறிக்கையில் அமைச்சர் ஆ.இராசா மீது குற்றம் சாற்றப் பட்டு இருப்பதாக சொல்ல முடி யாது.
முன்பு தேசிய ஜனநாயக கூட் டணி ஆட்சியில், மறைந்த பிர மோத் மகாஜன் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த போது மத்திய கணக்கு தணிக்கை மற்றும் கட்டுப்பாட்டு குழு இப்போது எழுப்பி இருப்பதைப் போன்ற சில கேள்விகளை எழுப் பியது. அப்போது அவர் பதவி விலகவேண்டும் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள யாரும் வற்புறுத்தவில்லை. எனக்கு தெரிந்து மத்திய கணக்கு தணிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரி யின் அறிக்கைக்காக அமைச்சர் கள் யாரும் பதவி விலகியதாக தெரியவில்லை.
அதேசமயம், மத்திய கணக்கு தணிக்கை மற்றும் கட்டுப்பாட்டு குழு அரசியல் சட்ட ரீதியிலான அமைப்பு என்பதால் அதன் அறிக் கைக்கு கவுரவமும் மரியாதை யும் உள்ளது. அரசு கருவூலத்தின் நலனை பாதுகாப்பதில் இது முக்கிய அமைப்பாக விளங்குகிறது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக மத்திய கணக்கு தணிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரியின் அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ள சில கேள்விகள் குறித்து சம்பந் தப்பட்ட அமைச்சகம் அல்லது துறையிடம் கருத்து கேட்கும் நடைமுறை உள்ளது. அதன் பிறகு அந்த அறிக்கை நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அதன்பின்னர் பொதுக்கணக்கு குழு அந்த அறிக்கையை ஆய்வு செய்யும். அதன் பிறகு பொதுக் கணக்கு குழு எழுப்பும் கேள்வி களுக்கு சம்பந்தப்பட்ட அமைச் சகம் பதில் அளிக்கும்.
- இவ்வாறு வீரப்ப மொய்லி கூறினார்.
No comments:
Post a Comment