கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, November 14, 2010

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: மத்திய அமைச்சர் விளக்கம்


`ஸ்பெக்ட்ரம் விவகாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருப்ப தால் நாம் இறுதி முடிவு எடுத்து விடமுடியாது' என்று நாடாளுமன்றத் தில் மத்திய அமைச்சர் பவன்குமார் பன்சால் கூறினார்.

`2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக் கீட்டில் நடந்த முறை கேடு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த விவகாரம்பற்றி நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் பாரதீய ஜனதா, அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 11.11.2010 அன்று 2 ஆவது நாளாக நாடா ளுமன்றத்தில் வற்புறுத் தின.

இதனால் அமளி ஏற் பட்டதால் சபை திங்கள் கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டது.

அதன்பின்னர் வெளியே வந்த உள் துறை அமைச்சர் ப.சிதம் பரத்திடம் இந்த பிரச் சினை பற்றி செய்தியா ளர்கள் கருத்து கேட்ட னர்.

ப. சிதம்பரம் பேட்டி

அப்போது அவர் கூறியதாவது:-

`2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான மத்திய கணக்கு தணிக்கை தலைமை அதிகாரியின் (சி.ஏ.ஜி) விசாரணை அறிக்கை ஏற்கெனவே அரசிடம் தாக்கல் செய் யப்பட்டுள்ளது. நாடா ளுமன்ற கூட்டுக் குழுவை போன்று கருதப்படும் பொதுக்கணக்கு குழு இந்த அறிக்கையை ஆய்வு செய்து நாடாளுமன்றத் துக்கு அறிக்கை வழங் கும். பின்னர் அதன்மீது விவாதம் நடைபெறும். அப்படி இருக்கும் போது நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எதற்கு? இதை புரிந்து கொள்ள முடியவில்லை.

- இவ்வாறு ப.சிதம் பரம் கூறினார்.

பவன்குமார் பன்சால்


இதே கருத்தை நாடா ளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பவன் குமார் பன்சாலும் தெரி வித்தார்.

அவர் கூறியதாவது:-

ஊழல் ஒரு முக்கிய மான பிரச்சினை. மத்திய கணக்கு தணிக்கை தலைமை அதிகாரியின் அறிக்கையை பொதுக் கணக்கு குழு பரிசீலிக்க இருக்கிறது. அதன் பிறகு அந்தக் குழு தனது அறிக்கையை நாடாளு மன்றத்தில் தாக்கல் செய் யும். அதன்பிறகு அந்த அறிக்கையின்மீது நாடா ளுமன்றத்தில் விவாதம் நடைபெறும்.

பொதுக்கணக்கு குழுவின் தலைவராக பாரதீய ஜனதா கட் சியை சேர்ந்த முரளி மனோகர் ஜோஷிதான் இருந்து வருகிறார். நாடா ளுமன்ற கூட்டுக்குழு விசாரணையைக் கோருவதன் மூலம் பொதுக்கணக்கு குழு வின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி மீது அவர்களுக்கு (பாரதீய ஜனதா) நம்பிக்கை இல்லை என்று தெரி கிறது. மேலும் பொதுக் கணக்கு குழு நாடாளு மன்ற கூட்டுக் குழுவை விட அதிகாரம் மிக்கது ஆகும். நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் தலை வராக ஆளும் கட்சியை சேர்ந்தவர்தான் இருப் பார். எனவே நாடாளு மன்ற கூட்டுக் குழு விசா ரணை கோருவதற்குப் பதிலாக பொதுக் கணக்கு குழு தனது விசார ணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோர லாம்.

இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் விசார ணையில் இருப்பதால் ஒரு கருத்தை மட்டும் வைத்துக் கொண்டு நாம் இறுதி முடிவு எடுத்து விட முடியாது. யாரா வது குற்றம் செய்து இருப் பதாகத் தெரிய வந்தால் அவர்கள் தண்டிக்கப் பட வேண்டும்.

இவ்வாறு பவன் குமார் பன்சால் கூறினார்.

இதற்கிடையே, தி.மு.க. எம்.பி.யும் அக் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான டி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று டில்லியில் செய் தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

டி.கே.எஸ். இளங்கோவன் கருத்து

ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீட்டில் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் விதி முறைகளின்படிதான் அமைச்சர் ஆ.இராசா செயல்பட்டுள்ளார். அப் படி இருக்கும் போது அவர் ஏன் பதவிவிலக வேண்டும். இந்த பிரச் சினை குறித்து சி.பி.அய். விசாரணை நடத்தி வரு கிறது. எனவே அது முடி யும் வரை காத்து இருக்க வேண்டும்.

- இவ்வாறு டி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

இதற்கிடையே கவி ஞர் கனிமொழி எம்.பி. 11.11.2010 அன்று டில்லியில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார்.

ஸ்பெக்ட்ரம் விவகா ரத்தில் தி.மு.க.வின் நிலை பற்றி பிரணாப் முகர்ஜி யிடம் அவர் விளக்கிக் கூறியதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment