முரசொலியில் இதுகுறித்து முதல மைச்சர் கலைஞர் அவர்கள் 19.11.2010 அன்று எழுதி யிருப்பதாவது:
கேள்வி: நாடாளுமன்ற கூட்டுக் குழு ஒன்றினை 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து அமைக்க வேண்டுமென்று அ.தி.மு.க. உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு நீங்கள் அஞ்சுவதாகவும், அதைப் பார்த்தால் மடியில் கனம் இருந்தால் வழியில் பயம்' என்ற பழமொழி தனக்கு ஞாபகத்திற்கு வருவதாகவும் ஜெயலலிதா அறிக்கை விடுத்திருக்கிறாரே?.
கலைஞர்: ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் ஜெயலலிதா, மத்திய அமைச்சராக இருந்த ராஜாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அப்படி செய்தால் எந்தவிதமான நிபந்தனையும் இன்றி, மத்திய அரசை தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி வேறு சில கட்சி உறுப்பினர் களும் சேர்ந்து ஆதரிக்க தான் ஏற்பாடு செய்யத் தயாராக இருப்பதாகவும் தானா கவே முன்வந்து அறிக்கை விடுத்தாரே தவிர, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டுக் குழுவினை அமைக்க வேண்டுமென்றோ, ராஜாவை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றோ முதலில் கோரவில்லை. ஜெயலலிதாவின் முகத்திலே கரியைப் பூசு கின்ற அளவிற்கு காங்கிரஸ் கட்சியின் சார் பில் அ.தி.மு.க. உறவை மறுத்து, அவருடைய கட்சியின் சார்பில்; வேண்டாத விருந்தாளி யாக தானாகவே ஆதரவு தருகிறேன் என்று வெட்கமில்லாமல் தெரிவித்த ஜெயாவின் அறிவிப்பை அலட்சியப்படுத்தி விட்டார்கள்.
ஜெயலலிதா முதலில் சொன்னதெல்லாம் ராஜா மீது பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான். ஆனால், அவரு டைய விருப்பம் நிறைவேறாத அளவிற்கு, தி.மு.க. தானாகவே முன்வந்து நாடாளுமன் றம் கூச்சல் குழப்பமின்றி ஜனநாயக முறைப் படி இயங்கவேண்டும்; மக்கள் பிரச்சினை கள் விவாதிக்கப்பட்டு நல்ல முடிவுகள் மேற் கொள்ளப்பட வேண்டும்; என்ற எண்ணத் தோடு அமைச்சர் ராஜாவை பதவி விலகச் செய்தது. அதற்குப் பிறகு மத்திய அரசுக்கு பிரச்சினை கொடுக்க வேண்டும் என்பதற் காகவே மீண்டும் போர்க் குரல் எழுப்பி பா.ஜ.க. போன்ற எதிர்க்கட்சிகளோடு சேர்ந்து கொண்டு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாடா ளுமன்றக் கூட்டுக் குழுவினை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஜெயலலிதா எழுப்பத் தொடங்கினார். தி.மு.க. சார்பில் அந்தப் பிரச்சினையிலே மத்திய அரசு எடுக் கும் நடவடிக்கையை ஆதரிப்பதாக நாடாளு மன்றத்தில் தெரிவிக்கப்பட்டதே தவிர, தி.மு.க.வை பொறுத்தவரையில் நாடாளுமன் றக் கூட்டுக் குழுவை வேண்டாமென்று சொல்லவே இல்லை. நான் சொன்னேனா இல்லையா என்று தெரியாத நிலையில் என் மடியில் கனம், அதனால் பயப்படுகிறேன் என்று ஜெயலலிதா அறிக்கைவிட்டு, அந்த அறிக்கையை தினமணி நாளிதழும், அந்த அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக கருணாநிதி நாடாளுமன்றக் கூட்டுக்குழுவிற்கு அஞ்சுவது ஏன்? என்று கொட்டை எழுத்துக்களில் வெளியிட்டுள்ளது.
நான் அவ்வாறு சொன்னேனா இல்லையா என்றுகூட தெரிந்து கொள்ளாத நிலையில் தினமணி அவ்வாறு வெளியிடக் காரணம் என்ன?. ஞானசூரியன்'' என்ற தலைப்பில் சுவாமி சிவானந்தசரஸ்வதி தொகுத்து, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்ட நூலில் சில பகுதிகள் - கொலைத் தொழில் புரிந்த மற்ற வருணத்தார்களைத் தூக்கில் இடவேண்டும்; பிராமணன் இத்தகைய குற்றம் புரிவானாயின், அவனது தலைமயிரை மொட்டை அடித்தலே தண்டனையாகும்.
மௌண்ட்யம் ப்ராணாந்தி கோதண்டா
ப்ராஹ்மணானாம் வீதீயதே
இதரேஷாம்து, வர்ணானாமதண்ட;
ப்ராணாந்தி கோபவேத'' (மனு)
எந்த நாட்டில் சூத்திரன் மந்திரியாயி ருக்கிறானோ, அந்த நாடு அழிந்து போகும். எந்த இடம் பார்ப்பனர்கள் இல்லாததாக இருக்கிறதோ, அந்த நாடு பஞ்சம், நோய் முதலிய கேடுகளால் விரைவில் அழிந்து போகும்.
யஸ்ய சூத்ரஸ்து குருதே
ராஜ்யே தர்ம விவேசனம்
தஸ்ய ஸீததிதத் ராஷ்ட்ரம்
பங்கே கௌரிவ பஸ்யத;
யத்ராஜ்யம் சூத்ர பூயிஷ்டம்
நாஸ்தி காக்ராந்தமத்விஜயம்,
வினஸ்யதயாசு தத்கரித்ஸ்னம்
துர்ப்பிக்ஷம்வ்யாதி பீடிதம்'' (மனு) சூத்திரன் ஆட்சி புரிகிற நாட்டில் குடியிருத்தல் ஆகாது.
நசூத்திர ராஜயே திவஸேத்
நதார்மிக ஜனாவ்ருதே;
ந பாஷண்டி ஜனாக்ராந்தே
நாபஸ்ருஷடேந்த்ய ஜேந்ருபே (மனு) பிராமணர்களை திட்டுகிற சூத்திரனைக் கொன்று விட வேண்டும்.
சதம் ப்ராஹ்மணமாக்ருச்ய,
க்ஷத்ரியோ தண்டமர்ஹதி;
வைச்ய; ஸார்த்தசதம் சைவ
சூத்ஸ்ரது வதமர்ஹதி (மனு)
மூன்று வருணத்தாருடைய பெண்களில் எவளையேனும் சூத்திரன் கைப்பற்றினால் அவனது பொருளை கொள்ளையிடுவதோடு, ஆண்குறியையும் அறுத்துவிட வேண்டும். சூத்திரனது அழகிய பெண்ணை த்விஜர்கள் கைப்பற்றிக் கொள்ளலாம் என்றும் பிரமாணமுண்டு.
ஆர்யஸ்த்ர்ய பிகமனே லிங்கோத்தாரா;
ஸ்வஹ ரணஞ்
ஸ்த்ரீ ரத்தம் துஷ்குலாநபி
(கோதமர் சூத்திரம்)
இப்போது புரிகிறதா? தினமணி நான் சொல்லாத ஒரு செய்தியைப் பற்றி ஜெயா வெளியிட்ட அறிக்கையை வேண்டுமென்றே - முக்கியத்துவம் கொடுத்து முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் வெளியிட்டதற்கு என்ன காரணம் என்று!
No comments:
Post a Comment