கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, November 26, 2010

பெரியாரைப் போல் உலகில் ஒரு தலைவரைப் பார்க்க முடியாது இந்தியாவில் முதல் மனித உரிமைப்போர்-வைக்கம் போராட்டமே! - பரிதிஇளம்வழுதி முழக்கம்





வைக்கம் சத்தியாக்கிரக 85ஆம் ஆண்டு விழா 26.11.2010 அன்று வைக்கத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி ஆற்றிய உரை வருமாறு:

உணர்ச்சிமயமான இந்த நிகழ்ச்சியில் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் வைக்கம்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கே.அஜீத் அவர்களே, முன் னிலை வகித்திருக்கும் கே.மதுமோகன் அவர்களே, அனில்குமார் அவர்களே, திருமதி கே.மேனகா அவர்களே, மூணாறு மோகன்தாஸ் அவர்களே, வர வேற்புரையாற்றிய திராவிடர் கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் மானமிகு வீ.அன்புராஜ் அவர்களே, அறிமுக உரையாற்றிய திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணன் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, சிறப்புரையாற்ற வருகை தந்துள்ள கேரள தேவஸ்வம் அச்சுத்துறை அமைச் சர், மாண்புமிகு இராமச்சந்திரன் அவர்களே, நிறைவாக எழுச்சிமிகுந்த நிறைவுரையை வழங்க வுள்ள திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களே, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ள பெரு மக்களே, கேரள மாநிலத்தில் சமூகநீதிக்காக பாடு படும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த பெரியோர் களே, இந்த விழாவை சிறப்பாக நடத்துவதற்காக பல நாள்களாக பணியாற்றி வரும் தி.மு.க இலக்கிய அணியைச் சார்ந்த அண்ணன் சா.அமுதன் அவர் களே, கேரள மாநில தி.மு.க அமைப்பாளர் எம்.ஏ.மசூத் அவர்களே, கேரள மாநிலத்தைச் சேர்ந்த வைக்கம் சத்தியாக்கிரக ஆதரவாளர் குழுவினைச் சார்ந்த பொறுப்பாளர்களே, தமிழகத்திலிருந்து வருகை புரிந்துள்ள திராவிடர் கழக தோழர்களே, திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளே, உங்கள் அனைவருக்கும் எனது கனிவான வணக்கத் தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என் வாழ்நாளில் குறிப்பிடத்தக்க நாள்

இன்று நடைபெறுகின்ற இந்த நிகழ்ச்சிக்கு என்னை தொடக்க உரையாற்ற அழைத்த ஆசிரியர் அண்ணன் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு முதற்கண் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள் கிறேன். ஏனென்றால், இந்த வாய்ப்பு என் வாழ் நாளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒவ்வொரு மதத் தினருக்கும் ஒவ்வொரு புனிதத் தலங்கள் இருக்கும். அந்த அடிப்படையில் சொல்லவேண்டுமானால் திராவிட இயக்கத்தினர் பெரியார் பிறந்த ஈரோட் டையும், பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத் தையும், தலைவர் கலைஞர் பிறந்த திருக்குவளை யையும் புனிதத் தலங்களாக கருதிக்கொண்டிருக் கின்றனர். அந்த வரிசையில் வைக்கம் நகரமும் திராவிட இயக்கத்தினருக்கு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, சமூகநீதியை விரும்புகிற மக்களுக்கு புனிதத் தலமாக திகழ்கிறது என்பதை நான் பெருமையோடு எடுத்துக் காட்ட விரும்புகிறேன். இந்தியாவின் முதல் மனித உரிமைப் போர்

இந்தியாவில் முதல் மனித உரிமைப்போராக வரலாற்றாளர்கள் இந்த வைக்கம் நகரத்தில் நடந்த சத்தியாக்கிரக போராட்டத்தைத்தான் சுட்டிக் காட்டுகிறார்கள். வைக்கம் நகரத்தில் உள்ள ஒடுக் கப்பட்ட மக்களின் எழுச்சி மங்கிவிடாமல் தொடர்ந்து அந்தப் போராட்டத்தை நடத்திய தலை வராக தந்தை பெரியார் அவர்கள் இந்த மண்ணிற்கு வருகைதந்து வெற்றி பெற்றிருக்கிறார். அதனால் தான் அவரை தமிழ்த்தென்றல் திரு.வி.க அவர்கள் வைக்கம் வீரர் என்று அழைத்தார்.

வைக்கம் போராட்டம்தான் அம்பேத்கருக்குத் தூண்டுதல்

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போது, அவர் நடத்திய மகத் என்னும் பொதுக்குளத்தில் நீரெடுக்கும் போராட் டத்திற்கே வைக்கம் சத்தியாக்கிரகம்தான் தூண்டு கோலாக இருந்திருக்கிறது என்பதை அறிய முடி கிறது. இந்த வகையில் இந்தியா முழுவதும் சமூகநீதி தழைத்தோங்க ஓர் உள்ளார்ந்த எழுச்சியையும், உணர்ச்சியையும் ஊட்டக்கூடிய போராட்டமாக திகழுகின்ற வைக்கம் சத்தியாக்கிரகப் பேராட் டத்தின் 85ஆம் ஆண்டு விழா கொண்டாடப்படுவது மிகவும் முக்கியமானதாகும். அந்தக் கடமையைச் செய்த ஏற்பாட்டாளர்களுக்கு எனது நன்றியை மீண்டும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

உலக வரலாற்றில் இப்படி ஒரு தலைவரைப் பார்க்க முடியுமா?

சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒருவர் எதிர்ப்புக்குரல் கொடுப்பது என்பதும், போராட்டத்தில் குதிப்பது என்பதும் இயற்கையான ஒன்றாகும். ஆனால், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறக்காத தந்தை பெரியார் அவர்கள் அந்த மக்களுக்காக தன்னுடைய மாநிலத்தைவிட்டு அண்டை மாநிலத்திற்கு வந்து போராட்டத்தை உக்கிரமாக நடத்தியிருக்கிறார் என்ற வரலாற்றைப் படிக்கும்போது, உலக வரலாற்றில் இப்படி ஒரு தலைவரை இதுவரை பார்த்திருக்க முடியாது என்கிற மலைப்புதான் நமக்கு ஏற்படுகிறது. தான் மட்டுமல்லாமல், தன்னுடைய மனைவி நாகம்மையாரையும், தங்கை கண்ணாம்மாளையும் இந்தப் போராட்டத்தில் ஈடுபடுத்தி, பொது வாழ்க்கைக்கு பெண்கள் துணிந்து வரவேண்டும் என்ற ஊக்கத்தையும் தந்தை பெரியார் அவர்கள் வழங்கிய காரணத்தினால்தான், இன்றைக்கு அரசியல் மற்றும் சமுதாயத் துறைகளில் பெண்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

தனிக்கிணறு அமைப்பது தவறு

தீண்டாமை ஒழிப்பில் மிகுந்த தீவிரமாக தந்தை பெரியார் அவர்கள் ஈடுபட்டார் என்பதற்கு பல்வேறு உதாரணங்களைச் சொல்ல முடியும். அன்றைய இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறாவயல் என்ற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வர்களுக்கு தனிக்கிணறு அமைத்து அதனைத் தொடங்கி வைக்குமாறு தந்தை பெரியார் அவர்களைக் கேட்டிருக்கிறார்கள். ஆனால் தந்தை பெரியார் அவர்கள் அந்த ஊருக்கே போய் பொதுக் கிணற்றில் தாழ்த்தப்ட்டவர்கள் தண்ணீர் எடுக்க வேண்டுமே தவிர, அவர்களுக்கென தனிக்கிணறு அமைப்பது தவறு, என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல, தன்னுடைய குடி அரசு ஏட்டில், தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்திருக்கிறார். அந்த மக்களின் உணர்வுகளை எல்லாம் செய்திகளாக வெளியிட்டிருக்கிறார். அண்மையில், குடி அரசில் வெளிவந்த ஒரு செய்தியை படிக்க நேர்ந்தது.

1928 குடி அரசில் ஒரு செய்தி

1928ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 8ஆம் நாள் குடிஅரசு இதழில் ஒரு செய்தியை தந்தை பெரியார் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். சென்னை தங்கசாலை தெருவிலுள்ள சுப்பிரமணியர் கோவிலுக்குள் அப்போதெல்லாம் ஆதிதிராவிடர் களை உள்ளே அனுமதிப்பதில்லை. அந்தத் தடை இருந்த காலகட்டத்தில், ஒரு ஆதிதிராவிட பெண் தைரியமாக கோவிலுக்குள்ளே சென்று அங்கேயி ருக்கும் குருக்களிடம் மிகுந்த கோபத்துடன், சாமி கும்பிட வந்தேன், இதோ இருக்கும் தேங்காய் பழத்தை வைத்து, கற்பூரத்தைக் கொளுத்திக் காண்பியுங்கள் என்று சொல்லி யிருக்கிறார் குருக்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. வேறு வழியில்லாமல், அவரும் பூஜை செய்து அனுப்பி யிருக்கிறார்.

வீர ஆதி திராவிடப் பெண்

இந்தச் செய்தியை ஆலயம்புகுந்த வீர ஆதிராவிடப்பெண் என்று தலைப்பிட்டு தந்தை பெரியார் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். இப்படி தான் மட்டுமல்லாமல் தன்னுடைய கொள்கையை யார் நிறைவேற்றுவதற்கு பாடு பட்டாலும், அவர்களை தூக்கிப் பிடிக்கும் ஒரு போராளியாக தந்தை பெரியார் அவர்கள் திகழ்ந்திருக்கிறார்கள்.

அம்பேத்கரையே அறிமுகப்படுத்தியவர்

வட இந்தியாவில், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட அண்ணல் அம்பேத்கர் அவர்களை தென்னகத்திற்கு அறிமுகப்படுத்தியவரே தந்தை பெரியார் அவர்கள்தான், அம்பேத்கர் அவர்களின் ஜாதியை ஒழிக்க வழி என்னும் நூலை அவரிடமிருந்தே பெற்று தமிழில் வெளியிட்டவர் தந்தை பெரியார் அவர்கள்தான்.

சென்னை வந்திருந்த அம்பேத்கர் அவர்களிடம், தாழ்த்தப்பட்டோர் அமைப்பைச் சேர்ந்த சிலர் தங்கள் தலைமையில் அமைப்பை ஏற்படுத்தலாம் என்றிருக்கிறோம் என்று கேட்டபோது, அம்பேத்கர் அவர்கள் உங்களுக்காக போராடத்தான் இங்கே பெரியார் இருக்கிறாரே, நான் எதற்கு? அவர் தலைமையில் போராடுங்கள் என்று கூறியிருக்கிறார்.

இந்த அளவுக்கு தந்தை பெரியார் அவர்களும், அண்ணல் அம்பேத்கர் அவர்களும், ஒருவருக் கொருவர் நல்ல புரிதலோடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலையைப் பெற்றுத்தர போராடியிருக்கிறார்கள்.

முதல்வர் கலைஞர் தமிழர் தலைவர் கி.வீரமணி

அவர்களின் தொடர்ச்சியாகத்தான், தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் அவர்களும், திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களும் இன்றைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல்கொடுக்கும் சக்தியாகத் திகழ்கிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரையில், திராவிட இயக்கம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களையும், கல்வி வழங்கும் திட்டங்களையும், சமூக உரிமைகளை அளிக்கும் சட்டங்களையும், உள்ளாட்சியில் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் நடைமுறைகளையும் அரசியலில் எல்லா மட்டங்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிய பங்களிப்பையும் வழங்கி, இந்தியாவிற்கே முன்னுதாரணமாக திகழ்ந்துகொண்டிருக்கிறது என்பதை நான் பெருமையோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதாவது எந்தச் சமுதாயத்தைச் சார்ந்தவர்களை அன்றைக்கு தடுத்து நிறுத்தினார்களோ அந்தச் சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் அமைச்சராக (கேரள அமைச்சர்) இங்கு உள்ளார். அதே போல அதே சமுதாயத்தைச் சார்ந்த இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் இங்கு உள்ளார். அதே சமுதா யத்தைச் சார்ந்த நான் (பரிதி இளம் வழுதி) தலைவர் கலைஞர் தலை மையிலே அமைச்சரவை யில் இடம் பெற்றுள்ளேன் என்பது பெருமை அளிக் கக்கூடிய செய்தியாகும்.

இந்த வகையில், சமூக நீதியை முழுமையாகப் பெற்றுத்தர இடைய றாமல் பாடுபடும் திராவிட இயக்கத்தின் அரசியல் வடிவமான திராவிட முன் னேற்றக் கழகத்தின் பிரதி நிதியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில் உள்ளபடி நான் பெருமை அடைகிறேன். இன்னும் சமூக தளத்தில் ஒடுக்கப் பட்ட மக்கள் பெற வேண்டிய எல்லா உரிமை களையும் பெறுவதற்கான போராட்டத்தை தொடர்வதற்கு இத்தகைய நிகழ்ச்சிகள் நமக்கு உணர்ச் சியையும், எழுச்சியையும் தரும் என்பதில் எந்த வித அய்யமும் இல்லை என்று கூறி, இந்த எழுச்சிமயமான வைக்கம் சத்தியாக்கிரக 85ஆம் ஆண்டு விழாவைத் தொடங்கி வைத்து அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம். -இவ்வாறு அமைச்சர் பேசினார்.

No comments:

Post a Comment