கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, November 22, 2010

தி.மு.க.-காங். கூட்டணி உறுதியாக உள்ளது - மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி பேட்டி


தமிழ்நாட்டில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உறுதியாகவும், வலுவா கவும் உள்ளது என்று மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பார் வையாளரும், மத்திய சட்ட அமைச்சருமான வீரப்ப மொய்லி நேற்று (21.11.2010) காலை பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் செய் தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவ ரம் வருமாறு:-

கேள்வி: ஸ்பெக்ட் ரம் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து இருப்பதால் பிரதமரின் கவுரவம் பாதிக்கப்படுமா?

பதில்: இதனால் பிரத மரின் கவுரவத்துக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. இந்த பிரச்சினை தொடர் பாக நாடாளுமன்றத்தில் பேசுவதற்கும், விவாதம் நடத்துவதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் எதிர்கட்சிகள் தயாராக இல்லை. இதை காரணம் காட்டி கடந்த ஒரு வாரமாக நாடாளு மன்றத்தை நடத்த விடாமல் முட்டுகட்டை போடுகின்றனர். நாடா ளுமன்றத்தில் கூச்சல்-குழப்பம் ஏற்படுத்துவது சரியான நடவடிக்கை ஆகாது. இது ஜனநாயக விரோத செயல் ஆகும்.

கேள்வி: ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் நாடாளு மன்ற கூட்டுக் குழு விசா ரணைக்கு மத்திய அரசு தயங்குவது ஏன்?

பதில்: இதில் மத்திய அரசுக்கு எந்த விதமான தயக்கமும் கிடையாது. இந்தியாவில் நாடாளு மன்றம்தான் சர்வ அதி காரம் கொண்டது. அப் படி சர்வ அதிகாரம் படைத்த நாடாளுமன் றத்தில் இந்த பிரச்சினை பற்றி பேசி விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால் நாடாளுமன்றத்தின் ஓர் அங்கமான கூட்டு குழுவை கொண்டு விசாரணை நடத்த எதிர்கட்சிகள் கேட்பது ஜனநாயக விதி முறைகளுக்கு முரணானது.

கேள்வி: ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என பிரதமர் கூறி உள்ளாரே?

பதில்: ஆம். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. தவறு செய்த வர்கள் யாராக இருந் தாலும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக் கப்படும்.

கேள்வி: தி.மு.க.-காங் கிரஸ் கூட்டணி பற்றி?

பதில்: தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உறுதியாக வும், வலுவாகவும் உள் ளது. இந்த கூட்டணி தொடரும். இதில் எவ் விதமான சந்தேகமும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment