கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, November 30, 2010

இந்தியாவை ஆட்டிப் படைப்பது புத்தகம் அல்ல; நூல்! : வி.அய்.டி. பல்கலை. விழாவில் முதல்வர் கலைஞர் பேச்சு





வேலூர், வி.அய்.டி. பல்கலைக்கழக வளாகத்தில் அறிஞர் அண்ணா மற்றும் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா - காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் மற்றும் சார்லஸ் டார்வின் விடுதிக் கட்டடங்களுக்கு 27.11.2010 அன்று அடிக்கல் நாட்டு விழாக்களில் முதலமைச்சர் கலைஞர் ஆற்றிய உரை வருமாறு:-

அண்ணா அவர்களுடைய சிலையைத் திறந்து வைப்பதாலோ அல்லது பெயரை ஒருவர், தான் இருக்கும் இடத்திற்கோ அல்லது தன்னுடைய ஒரு அமைப்புக்கோ சூட்டிவிட்டால் மாத்திரம் அண்ணா வின் புகழ் முழுமை அடைந்து விடாது. அண்ணா என்பது அய்ந் தரை அடி குள்ள உருவம் அல்ல; அண்ணா என்பது வெற்றிலை பாக்கு போட்டு, சிவந்திருக்கின்ற பற்களும், உதடுகளும் படைத்த உருவம் அல்ல - அண்ணா என்பவர் சாதாரண, எளிமை யான ஒரு சட்டை போட்டு, அந்தச் சட்டையோடு காட்சி தருகின்ற ஒரு எளிய மனிதர் அல்லர் - அண்ணா என்பவர், அவரை பேருருவாய் பார்த் தால், அண்ணா என்ற அந்த மூன் றெழுத்திற்குப் பின்னால் அடங்கி யிருக்கின்ற இலக்கியம் தெரியும் - அரசியல் தெரியும் - பொருளாதாரத் தத்துவம் தெரியும் - உலகத்திலே உள்ள நாடுகளுடைய வரலாறு தெரியும் - அண்ணாவிற்குத் தெரியாத வரலாறு இல்லை - அவருக்குத் தெரியாத இலக்கியம் இல்லை - அவருக்குத் தெரியாத கலை இல்லை - அவருக்குத் தெரியாத எழுத்து இல்லை. அப்படிப்பட்ட ஒரு மாபெரும் சக்திதான் பேரறிஞர் அண்ணா ஆவார் கள். அண்ணா அவர்கள் நீண்ட காலம் வாழவில்லை. அதுதான் நமக்குப் பெரும் குறை. 59 ஆண்டுக் காலம் வாழ்ந்து - மணிவிழா நடத்து வதற்கு மாபெரும் திட்டத்தையெல் லாம் நாம் வகுத்துக் கொண்டி ருந்தபோது, நம்மையெல்லாம் ஏமாற்றிவிட்டு, நம்மை விட்டுப் பிரிந்து விட்டவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். அவருடைய சிலையை ஆயிரக்கணக்கான இடங்களிலே திறந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், ஒரு பல்கலைக்கழகத்தில் - பல்கலைக் கழகமாகவே விளங்கிய அவருடைய சிலையை - அதுவும் தம்பி விசுவநாதன் அவர்கள் இங்கே நிறுவியிருப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒன்றாகும். இந்தச் சிலையைப் பார்க்கின்ற ஆசிரியர்கள், இந்தச் சிலையைப் பார்க்கின்ற மாணவர்கள் - அவர்கள் சொன்னார்களே, 40 மாநிலங்களிலே இருந்து, 40-க்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசுகின்ற வர்கள் இந்தப் பல்கலைக்கழகத்திலே இருக்கிறார்கள் என்று - அந்த மொழிக்காரர்கள் எல்லாம் புரிந்து கொண்டு - அண்ணாவினுடைய கொள்கைகள் என்ன என்பதை ஆராய்ந்து, அறிந்து அதைச் செயல் படுத்துகின்ற வகையிலே ஈடுபடுவார் களேயானால், இன்றையதினம் அண்ணாவினுடைய சிலையைத் திறந்து வைப்பதற்கு நிச்சயமாக மதிப்பு உண்டு. அப்படிப்பட்ட மாமேதை அறிஞர் அண்ணா அவர்கள். அண்ணா அவர்கள் மிக எளிமையான வாழ்வுதான் வாழ்ந்தார். அவர் ஏதோ தமிழகத்தினுடைய அதிபராக இருந்து, தமிழகத்திலே சர்வாதிகாரியாக இருந்து, உலக நாடுகளுடைய பார்வைக்கெல்லாம் உட்பட்டு, அந்தப் பார்வைக்குத் தென் பட்டு வாழ்ந்தவர் அல்லர். ஆனால், அவரை உலக நாடுகள் சுற்றிக் கொண் டிருந்தன. அண்ணா என்ன சொல் கிறார் என்று அவரது ஒவ்வொரு கருத்தைப் பற்றியும், அவருடைய கருத்து என்ன என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ள உலக அறிஞர்கள் எல்லாம் தவியாய்த் தவித்தார்கள். ஆனால், அவர்களுடைய ஆசை களுக்கு, அவர்களுடைய எண்ணங் களுக்குத் தீனி போட முடியாமல், விளக்கம் அளிக்க இயலாமல், காலம் அவரை நம்மிடமிருந்து பிரித்து விட்டது. இன்னும் பல ஆண்டுக் காலம் அவர் வாழ்ந்திருப்பாரேயா னால், ஏன் - இந்தச் சிலையைத் திறக்கிற இந்தக் காலம் வரை யிலேகூட, அவர் வாழ்ந்திருப்பாரே யானால் - எவ்வளவோ பயன்கள் இந்த நாட்டிற்கு ஏற்பட்டிருக்கும். நாங்கள் இந்த ஆட்சியிலே அரிசி விலையைக் குறைத்து, ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்று கொடுத்து - ஏழை களுடைய வாழ்விலே - இறைவன் தந்த வரம் இது என்று சொல்கின்ற அளவிற்கு ஏழைகளுடைய அரசாக இந்த அரசு இருக்கிறது என்றால், அந்தத் திட்டத்தை நாங்கள் இன் றைக்கு நடைமுறைப்படுத்தினாலும் கூட, அதற்கு அணிவகுத்துக் கொடுத்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள் என்பதை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன். அரிசி திட்டம் தந்தார் - அதைப்போல, ஏழையெளி யவர்களுடைய வாழ்க்கைக்கு வழிவகுத்துத் தருகிற திட்டங்களால், இன்றுள்ள இந்த அரசுக்கு பேரும், புகழும் வருகிறது - மக்களுடைய ஆதரவு பெருகுகிறது . எனக்கு வழிகாட்டியாக உள்ளது அதைப்போலவே, இன்றையதினம் அண்ணா சிலையைத் திறந்து வைக்கின்ற இதே நேரத்தில், அய்யன் வள்ளுவனுடைய சிலையையும் திறந்து வைத்திருக்கின்றோம். இங்கே சொன்னார்கள் - 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையை குமரிக் கடலில் நான் உருவாக்கி வைத்து, பெருவிழா நடத்தி அதைத் திறந்து வைத்தேன் என்று சொன்னார்கள். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. காங்கிரஸ் கட்சியினுடைய தமிழகத் தலைவர் - என்னுடைய அருமை நண்பர் மூப்பனார் அவர்கள் - கொஞ்சம் அரசியல் ரீதியாக நானும், அவரும் வேறுபட்டிருந்தாலும்கூட, அந்த விழாவிற்குத் தவறாமல் வருகை தந்து, அந்த விழாவிலே எனக்கொரு புத்தகத்தைக் கொடுத்தார் - ஆங்கிலப் புத்தகம் அது. அந்தப் புத்தகத்தி னுடைய தலைப்பு - என்றும் நீ வெல்வாய் என்பதுதான். இன்றைக் கும் அந்தப் புத்தகம் என்னுடைய கையிலே இருக்கிறது - என்னுடைய அறையிலே உள்ள பீரோவில் இருக் கிறது - என்னுடைய நூல் நிலையத் திலே இருக்கிறது - என்னுடைய மேசையில் இருக்கிறது - அதை நான் படிக்க, வைத்துப் போற்ற அந்தப் புத்தகம் இருக்கிறது. ஏனென்றால், என்றும் நீ வெல்வாய் என்பது தலைப்பு. அந்தப் புத்தகத்தைப் பெற்ற தற்குப் பிறகு - நான் ஞானசேகரன் அவர்களுக்குச் சொல்லிக் கொள் கிறேன். - நம்முடைய மூப்பனார் அவர்கள் தந்த அந்தப் புத்தகமே எனக்கு வழிகாட்டியாக - எனக்கு ஒவ்வொரு முறையும் ஆறுதலாக, எனக்கு நம்பிக்கையாக இருக்கிறது என்பதை தம்பி ஞானசேகரனுக்குச் சொல்லிக் கொள்கிறேன். தம்பி ஞானசேகரன் - இதை நீங்கள் மாத்திர மல்ல; உங்களுடைய நண்பர்களுக் கெல்லாம் சொல்ல வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் (கைதட்டல்).

இப்படி குமரிக் கடலில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை வைக்கிறோமே - அது மழைக்குத் தாங்குமா? புயலுக்குத் தாங்குமா அந்தச் சிலை? என்றெல்லாம் கேட்ட போது, அந்தச் சிலையை வடித்துத் தந்த கணபதி ஸ்தபதியார் சொன்னார் - நிச்சயமாகத் தாங்கும் - நான் உறுதி அளிக்கிறேன் என்று சொன்னார். அவர் சொன்ன அடுத்த ஆண்டே எவ்வளவு பெரிய சூறாவளி, புயல் - ஒரு முறை அல்ல; பலமுறை அடித்தும்கூட, அந்தச் சிலை சேதாரம் இல்லாமல் அங்கே நின்று கொண்டி ருக்கிறது. ஏனென்றால், வள்ளுவ ருடைய சிலையை நாம் அவ்வளவு அஜாக்கிரதையாக வைக்கமாட் டோம்; வைக்கவில்லை. மிக உறுதி யான நிலையிலேதான் அதை நாம் வைத்திருக்கிறோம் - ஒருவேளை மீண்டும் தமிழ்நாட்டில் ஒரு பெரும் வெள்ளம் போல், ஊழி ஏற்படுமே யானால், அந்த ஊழியும்கூட, வள்ளு வரை ஒன்றும் செய்ய முடியாது என்பது போலத்தான் அது அமைக் கப்பட்டிருக்கிறது (கைதட்டல்).

இந்தச் சிலையைக் கூட இங்கே நான் திறந்து வைத்தபோது, தம்பி விசுவநாதன் அவர்களிடம் - என்ன? வள்ளுவர் சிலையிலே கொஞ்சம் வித்தியாசம் தெரிகிறதே? என்றுகூட கேட்டேன். என்ன? என்று கேட்டார். பிறகு தனியாகச் சொல்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறேன். எனவே, இத்தகைய சிலைகள் வெளிநாடு களுக்குச் செல்கின்றபோது, வள்ளுவர் என்றால் இப்படித்தான் இருப்பார் என்று புராண காலத்திலே புராணிகர்களால், பஞ்சாங்கங்களில் வெளியிடப்பட்ட அந்தப் படங் களை வைத்துக் கொண்டு - தாடி, மீசை - அதைப்போல, குடுமி, ருத்தி ராட்சம், திருநீர்ப் பட்டை, குங்குமம், கையிலே உத்திராட்சம் - என்றெல் லாம் வைக்கப்பட்ட அந்தச் சிலை - இப்பொழுது துரை முருகன் இங்கே சொன்னதைப் போல, சட்டப் பேரவையிலே திருவள்ளுவர் படத்தை வைக்க வேண்டுமென்று நான் எண்ணியதற்குக் காரணமே, தமிழ் நாட்டு மக்களுக்கு - திருவள்ளுவர் எப்படி இருப்பார் என்றே இன்னும் தெரியவில்லை. பூணூல் போட்டிருப் பாரா? அவர் பிராமணரா? விரும்பு வார்கள் ஒரு சிலர் - ஒரு நல்லவன் இருந்தால், ஒரு அறிவாளி இருந்தால், அந்த அறிவாளியை உலகமே புகழ்ந்தால் - ஒரு கூட்டம் இருக்கிறது தமிழ்நாட்டில். அவர்கள் யாரென் றால் பிராமணர். ஏனென்றால், அவ்வளவு அறிவு உள்ளவராக அவர் இருப்பதற்குக் காரணம், அவர் பிராம ணராக இருப்பதுதான் என்று பிரா மணராக அவரை ஆக்கி விடுவார்கள். இந்தியாவையே நூல் ஆட்டிப் படைக்கிறது பூணூலை வைத்து மாத்திரம் இன்றைக்குத் தமிழ்நாட்டிலே மாத்தி ரமல்ல; இன்றைக்கு இந்தியாவிலே என்னென்ன நடக்கிறது என்பதை யெல்லாம் நாம் மறந்து விடக் கூடாது. சட்ட நூல் அல்ல; இந்தி யாவை மாத்திரமல்ல - இந்தியாவிலே இருக்கின்ற பல மாநிலங்களை ஆட்டிப் படைக்கின்ற நூல் - சட்டப் புத்தகம் அல்ல. புத்தகத்திற்கு நூல் என்று ஒரு பெயருண்டு தமிழில். ஆனால், தமிழ்நாட்டையோ, இந்தி யாவையோ ஆட்டிப்படைப்பது புத்தகம் அல்ல; நூல் ஆட்டிப் படைக்கிறது - நூல் என்றால் புத்தகம் என்று பொருள் கொள்க. ஆகவே, அந்த நூலால், புத்தகத்தால், சட்டங் களால் நிறைவேற்ற முடியாதவை எதுவுமே இல்லை என்று சொல்கின்ற அளவிற்கு, நாடு போய்க் கொண்டிருக்கிறது. இந்த நேரத்திலே நாம் நம்முடைய நாட்டு ஜனநாய கத்தைக் காப்பாற்ற, பேரறிஞர் அண்ணா அவர்கள் எந்த அரசியல் தத்துவத்திற்காகப் பாடுபட்டாரோ, எந்த அரசியல் தத்துவம் நம்மை யெல்லாம் படைக்க வேண்டுமென்று கருதினாரோ, அந்த ஜனநாயக தத்துவத்திற்கு நம்மையெல்லாம் ஆட்படுத்த, நாமெல்லாம் அணி வகுத்து நிற்க பாடுபட வேண்டும்; பணியாற்ற வேண்டும். முக்கியமாக, மனிதன் எங்கிருந்து தோன்றினான்? எப்படித் தோன்றினான்? குரங்கி லிருந்து தோன்றினானா? அல்லது வேறு பிராணிகளிடமிருந்து தோன்றி னானா என்றால், மனிதன் இன்னும் தோன்றவே இல்லை என்பதுதான், என்னுடைய வாதம். மனிதன் இன்னும் தோன்றவே இல்லை. மனி தன் தோன்றினால், அவன் இப்படி யெல்லாம் இருக்க மாட்டான். எனக்கு வருகிற சந்தேகம் எல்லாம், குரங்குகள் எல்லாம் கூட்டம் போட்டு, மனிதர்களிடமிருந்து குரங்கு தோன்றியது என்று ஒரு தீர்மானம் போட்டாலும், ஆச்சர்யப்படுவதற் கில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலை யிலே இந்த உலகம் போய்க் கொண்டி ருக்கிறது. விஞ்ஞானம் வளருகிறது - அதே நேரத்திலே, ஒருபுறம் அஞ்ஞான மும் வளர்ந்து கொண்டிருக்கின்றது. விஞ்ஞான வளர்ச்சி அறிவியலை உருவாக்கி, அமளியை அடக்கி, எல்லா மக்களும் ஒன்றாக, ஒற்றுமை யோடு வாழ்ந்து, எல்லா மக்களும் மகிழ்ச்சியோடு கலந்து பேசி, எல்லா மக்களும் ஓரணியில் திரண்டு நின்று உலகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் ஞானம். முடியாது - அப்படிச் செய்ய முடியாது - ஒரே குண்டு வீச்சில் ஆயிரம் மக்களை ஒழிக்க வேண்டும் - இதுதான் நியாயம் என்றால், அது ஞானம் அல்ல; அஞ் ஞானம். எனவே, அந்த அஞ்ஞானம் வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம்முடைய கடமை. அதற்குத்தான் நாம் இன்றைக்கு இருபெரும் தலைவர்களுடைய சிலைகளை இங்கே திறந்து வைத் திருக்கின்றோம். ஒருவர் வள்ளுவர் - இன்னொருவர் பேரறிஞர் அண்ணா. அது மாத்திரமல்ல; உலகம் எப்படித் தோன்றியது? மனிதன் எப்படித் தோன்றினான்? மனிதன் எங்கிருந்து வந்தான்? என்ற தத்துவத்தை நாட் டிற்குச் சொன்ன டார்வின் என்ற அந்த மேதையினுடைய பெயரால், இந்த விழாவின்மூலம் ஒரு விடுதிக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறோம். அதைப் போலவே காயிதே மில்லத் பெயரால் இன்னொரு விடுதிக்கும் அடிக்கல் நாட்டியிருக்கிறோம். அவர்களுடைய பெயர்களெல்லாம் விளங்க, துலங்க நாம் - கட்டடங் களுக்குப் பெயர் வைத்தால் மாத்திரம் போதாது; சிலைகளை நிறுவினால் மாத்திரம் போதாது; அவர்கள் என்ன சொன்னார்களோ, அந்தத் தத்துவத் தின் படி நடக்க நம்மையும் பயிற்சியில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்; மற்றவர்களுக்கும் அந்தப் பயிற்சியை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, இந்த இனிய விழாவில், என்னுடைய அன்புத் தம்பி விசுவ நாதன் அவர்கள் இந்தப் பல்கலைக் கழகத்தை நடத்தி, பேரும், புகழும் பெற்று, உலகம் புகழக்கூடிய அள விற்கு - பல்கலைக்கழகத்தினுடைய வேந்தராக இங்கே இயங்குகிறார் என்றால், அத்தகைய புகழும், பேரும் இந்த அண்ணனுக்கும் உரியது என்ற அந்த முறையிலே அவரை வாழ்த்தி விடைபெறுகிறேன்.

-இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment