About Me
- DMK Thondan
- Madurai, Tamilnadu, India
- " இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,
Search This Blog
Friday, November 26, 2010
வேலூர் வரும் முதல்வரின் பயண திட்டம்
வேலூர் மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு வேலூர் கோட்டைக்குள் இயங்கி வரும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு புதிய கட்டிடங்கள் வேலூரை அடுத்த சேர்க்காடு அருகே கட்டப்பட்டுள்ளது. இதை நாளை (27.11.2010) காலை 11 மணி அளவில் முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் துரைமுருகன் தலைமை வகிக்கிறார். அமைச்சர் க.பொன்முடி வரவேற்று பேசுகிறார். அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், எ.வ.வேலு மத்திய தகவல் ஒலிபரப்பு இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் கணேசன், மாவட்ட கலெக்டர் ராஜேந்திரன், ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. காந்தி ஆகியோர் விழாவிற்கு முன்னிலை வகிக்கிறார்கள்.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜோதி முருகன் செய்து வருகிறார். புதிய கட்டிடங்களை திறந்து வைத்த பின் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்துகிறார்.
மாலை 4.30 மணி அளவில் வேலூர் வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தில் அண்ணா மற்றும் திருவள்ளுவர் சிலைகளின் திறப்புவிழா காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் மற்றும் பரிணாம வளர்ச்சிக் கொள்கையை கண்டறிந்த பிரபல விஞ்ஞானி சார்லஸ் டார்வின் விடுதி கட்டிடங்களின் அடிக்கல்லை நாட்டி முதலமைச்சர் கருணாநிதி சிறப்புரையாற்றுகிறார்.
மாலை 6 மணி அளவில் வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு பேசுகிறார்.
இந்த விழாவிற்காக குடிசை வீடுகள் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகளாக மாறுவதுபோல் மிகப்பெரிய மேடை அமைக்கப்பட்டு வருகிறது. தி.மு.க.வினர் வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment