கலை ஞரின் பெயரன், மத்திய அமைச்சர் மு.க. அழகிரி - காந்தி ஆகியோரது செல்வன் துரை தயாநிதி - அனுஷா மணவிழாவில், இதே காட்சி தொடர்ந்தால் மீண்டும் ஆறாவது முறையாக கலைஞர் முதல்வராகி பொற்கால ஆட்சியைத் தொடருவார் என்று கழக தலைவர், தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் கூறி புகழாரம் சூட்டினார்.
மத்திய அமைச்சர் மு.க.அழகிரி - காந்தி ஆகியோரின் செல்வன் முதல மைச்சர் கலைஞரின் பெயரனுமான துரை தயாநிதி அழகிரிக்கும் - அனுஷாவுக்கும் மதுரை தமுக்கம் மைதானத்தில் 18.11.2010 நடைபெற்ற மணவிழாவில் கலந்து கொண்டு திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
அழகிரி இல்ல மணவிழா நம் இல்லத்து மணவிழா
அன்பு சகோதரர் தென்மண்டலத்தில் திராவிடர் இயக்கத்தினுடைய தளபதியாக இருந்து திராவிட முன்னேற்றக் கழக அமைப்பை கட்டுப்பாடாக நடத்திக் கொண்டு வருகின்ற அழகிரி இல்லத்து மணவிழா என்று சென்னால் அது நம்முடைய இல்லத்து மணவிழா என்ற உரிமையோடும், உறவோடும் - நாங்கள் எல்லோருமே கலந்து கொள்கின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கின்றோம்.
அதிலும் குறிப்பாக நம்முடைய அன்பிற்கும் பாராட்டுக்குமுரிய துணை முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டு ஒரு வரலாற்றையே உருவாக்கி வருகின்ற தம்மின் தம் மக்கள் அறிவுடைமை என்று சொல்லக்கூடிய அந்த வாய்ப்பை நிலை நிறுத்திக் கொண்டு வருகின்ற தளபதி ஸ்டாலின் அவர்கள் வரவேற்புரை யாற்றினார்.
இம்மணவிழாவிலே கொள்கை பலம்
இப்படி ஒரு அற்புதமான குடும்பத்தை - குடும்ப உறவை, கொள்கைப் பலத்தை இந்த மணவிழாவிலே நாம் காணும் பொழுது எல்லையற்ற மகிழ்ச்சியை அடைகிறோம். வெள்ளம்போல் தமிழர் கூட்டம் இந்த மணவிழாவிலே திரண்டிருக்கிறது.
தந்தை பெரியார் அவர்கள் 1925ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். அந்தக் காலத்தில் நடைபெற்ற திருமணங்களில் இதுபோன்ற வெள்ளம் போன்ற கூட்டத்தைக் காண முடியாது.
அன்றைய கால கட்டங்களில் மிகப்பெரிய எதிர்ப்பு
சுயமரியாதைத் திருமணங்களை நடத்தும் பொழுது மிகப்பெரிய எதிர்ப்பு களைத்தான் அன்றைக்கு சந்திக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இன்றைக்கு அனைத்து தரப்பினரும் இந்த மேடையில் அமர்ந் திருக்கின்றார்கள்.
இன்னும் கேட்டால் கொள்கையில் மாறுபட்டவர்கள் கூட இதனைப் பாராட்ட, வாழ்த்தத் தயங்க மாட்டோம் என்று சொல்லக் கூடிய அளவிற்கு இந்த கொள்கை வெற்றிவாகை சூடியிருக்கிறது என்பதற்கு அடை யாளம்தான் நம்முடைய அருமை மணமக்கள் ஏற்றிருக்கின்ற சுயமரியாதை மணமுறையாகும்.
1967-க்கு முன்னால் என்ன நிலை?
1967ஆம் ஆண்டுக்கு முன்னால் இதை விட பெருங்கூட்டம் கூடி, இத்தகைய தலைவர்கள் மணவிழாவை நடத்தி வைத்தால் கூட இந்த மணமுறை சட்டப்படி செல்லாது என்ற ஒரு நிலை இருந்தது. அதை மாற்றிக் காட்டிய பெருமை 1967லே பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் முதலமைச்சராக வந்த நிலையில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியையே தந்தை பெரியார் அவர்களுக்கு என்று காணிக்கை என்று சொல்லி, சுயமரியாதை திருமணங் கள் சட்டப்படி செல்லும் என்று ஆக்கி னார்கள்.
சட்டத்தாலே அங்கீகரிக்கப்பட்ட மணமுறை
எனவே இன்றைய மணமுறை சமுதாயத்தாலே ஏற்றுக் கொள்ளப்பட்ட மணமுறை மட்டுமல்ல. சட்டத்தாலும் அங்கீகரிக்கப்பட்ட மணமுறையாகும். எனவே இந்த மணமுறை வெற்றிகரமாக நடை பெறுகிறது. இந்த கொள்கை வெற்றி பெற்றிருக்கிறது என்பதற்குத்தான் இவ்வளவு பெரிய எடுத்துக் காட்டு.
இதிலே இன்னொரு சிறப்பு என்ன வென்று சொன்னால், எங்களுக்கெல்லாம் பெரிய மகிழ்ச்சி என்னவென்று சொன் னால் சில இளைஞர்களுக்குத் தெரியாது.
ஒரு வரலாற்றுச் சம்பவம்
ஒரு வரலாற்றை நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கின்றோம். அருமை சகோதரர் அழகிரி-காந்தி ஆகியோரின் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த நிகழ்ச்சி சென்னையிலே பெரியார் திடலிலே தந்தை பெரியார் அவர்களுடைய தலைமையிலே பல்லாண்டுகளுக்கு முன்னாலே நடைபெற்றது.
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் அந்த மணவிழாவிற்கு வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.
அன்றைக்கு முதல்வர் கலைஞர் வரவேற்றார்
நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள் வரவேற்றுப் பேசினார். அப்படி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கோபாலபுரத்தில் பெரியார் - ஜெகஜீவன்ராம்
அன்றைக்கு மத்திய அமைச்சராக இருந்த மாண்புமிகு பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள் அந்த மணவிழாவிற்கு அழைக்கப் பட்டு வர இருந்தார்கள். டில்லியிலே இருந்து புறப்பட வேண்டிய விமானம் சற்று காலதாமதமாயிற்று. எனவே மண விழாவிற்கு நேரே பெரியார் திடலுக்கு வந்து சேர அவர்களால் இயலவில்லை. என்றாலும் மணவிழா சிறப்பாக நடைபெற்று மணமக்கள் கோபாலபுரத்திற்கு சென்று விட்டார்கள். மணவிழாவிற்கு பாபு ஜெகஜீவன்ராம் கால தாமதமாகத்தான் வர நேரிட்டது.
கோபாலபுரத்தில் பாபு ஜெகஜீவன்ராம், தந்தை பெரியார் ஆகியோர் எல்லோரும் மீண்டும் மணமக்களை வாழ்த்தி விருந்துண்டு சென்றார்கள்.
எனவே அன்றைக்கு இதுபோன்ற உறவு இருந்தது. இன்றைக்கும் இந்த உறவு தொடருகிறது. ஆகவே, இந்த எண்ணங் களை எல்லாம் மாற்ற யாராவது நினைத் தால் அவர்கள் தோற்றுப் போவார்கள் என்பதற்கு இது நல்ல அடையாளம்.
இதே காட்சி தொடர வேண்டும்
இன்றைக்கு எப்படி மகிழ்ச்சியோடு ஒன்றாகக் காட்சி அளிக்கின்றீர்களோ இதே காட்சி தொடர வேண்டும். இதே காட்சி தொடர வேண்டும் என்பதற் காகத்தான் இந்த மணவிழா அச்சார மணவிழாவாக இருக்கிறது.
ஆறாவது முறையாக மீண்டும் கலைஞர் முதல்வர்
இது தொடர்ந்தால் ஆறாவது முறையும் பொற்கால ஆட்சி தொடரும் என்று கூறி மணமக்களை வாழ்த்தி அமர்கிறேன். இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
No comments:
Post a Comment