கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, November 28, 2010

ஆரியர் - திராவிடர் போராட்டம் மூண்டு விட்டது ஆரியத்தை வீழ்த்துவோம் - வாரீர்! : முதல் அமைச்சர் கலைஞர் பிரகடனம்



வேலூர் கோட்டை மைதானத்தில் மாவட்ட திமுக சார்பில் 27.11.2010 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி கலந்து கொண்டார். அமைச்சர்கள் துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்பட திமுக முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

வேலூரில் நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-

பகுத்தறிவுப் பிரச்சாரத்தைச் செய்ய உறுதி எடுத்துக் கொள்க!

இன்றைய நிகழ்ச்சிகள் - காலை 8 மணிக்கு சென்னையிலே புறப்பட்டு துரைமுருகனும் அவரோடு சேர்ந்து இந்த விழாக்களை நடத்திய வர்களும் காட்டிய கருணையினால் ஏறத்தாழ மாலை 3 மணிக்கு மதிய உணவருந்தி, அதற்குப் பிறகு வேறு பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, வெள்ளம் போல் மக்கள் குழுமியிருக்கின்ற வேலூர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கின்ற வாய்ப்பை நான் பெற்றிருக்கின்றேன்.
என்னைப் பற்றியும், வேலூர் மக்கள் காட்டு கின்ற ஆர்வத்தைப் பற்றியும் இங்கே உரையாற் றிய மத்திய இணையமைச்சர் தம்பி ஜெகத்ரட் சகன் அவர்கள், என்னை மக்கள் ஆண்டவனாகக் கருதுகிறார்கள் என்று சொன்னார். அப்படிக் கருதக்கூடாது என்பதற்காக பெரியார் எத்தனை ஆண்டு காலம் போராடி இருக்கிறார் என்பதை யும், அண்ணா எத்தனை ஆண்டு காலம் போராடி யிருக்கிறார் என்பதையும், நான் எத்தனை ஆண்டுகாலம் எடுத்துச் சொல்லி வந்திருக்கிறேன் என்பதையும் நம்முடைய ஜெகத்ரட்சகன் ஏன் மறந்து விட்டார் என்று எனக்குத் தெரியவில்லை. மனிதனை மகானாகக் கருதுவதும், அல்லது ஆண்டவ னாகக் கருதி ஏமாறுவதும் இந்த நாட்டிலே வழக்கமாக இருக்கிற காரணத்தினால், அப்படி கருதக்கூடாது என்கின்ற அறிவுரையை அய்யா பெரியார் அவர்கள் பல்லாண்டு காலமாக வழங்கி வந்தார்கள்.
மனிதனை ஆண்டவனாகக் கருதி ஏமாறக் கூடாது என்றுதான் அறிவுறுத்துகிறோம். அவரு டைய குருகுலத்தில் பயின்றவன் நான். நம்முடைய ஜெகத்ரட்சகன் அவர்களுக்குச் சொல்லிக் கொள் கிறேன். அவருடைய பெயர் ஜெகத்ரட்சகன் என்று இருக்கின்ற காரணத்தினால், என்னையும் ஜெகத்ரட்சகனாக கருதிக் கொண்டு, ஆண்டவன் என்று மக்கள் என்னைச் சொல்வதாகச் சொன்னார். பின்னால் இருந்து தாய்மார்கள், ஆண்டவன் போகிறான், ஆண்டவன் போகிறான் என்று சொன்னதை, தான் கேட்டதாக ஜெகத்ரட்சகன் சொன்னார். அப்போது ஜெகத்ரட்சகன் என்ன சொல்லியிருக்க வேண்டும். ஆண்டவன் அல்ல அம்மா! ஆள்பவர் போகிறார் என்று சொல்ல வேண்டுமே தவிர, ஆண்டவன் என்றால் ஞயளவ வநளேந (கடந்த காலம்). ஆள்பவன் என்றால் ஞசநளநவே வநளேந (நிகழ்காலம்). (பலத்த கைதட்டல்). ஆள்பவன் என்று சொல்ல வேண்டுமே தவிர, ஆண்டவன் போகிறார் என ஜெகத்ரட்சகன் ஒத்துக் கொண்டாலும், நான் ஒத்துக் கொள்ளத் தயாராக இல்லை. ஆண்டவனாக இருப்பதில் லாபம்தான். ஏனென்றால், எந்தக் குறையை மக்கள் சொன்னாலும், கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கலாம், படுத்திருக்கலாம், தூங்கிக் கொண்டிருக்கலாம், திருவரங்கத்திலே போய் ஆண்டவனிடத்திலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் முறையிடுகிறார்களே, அங்கே ரங்கநாதர் எழுந்து என்ன செய்தார்? என்று யாராவது கேட்டிருக்கிறார்களா? ஆண்டவனுக் குள்ள சவுகரியம் ஆள்பவனுக்குக் கிடையாது. அதனால்தான் ஆண்டவனாக இருக்க விரும்ப வில்லை. ஆள்பவனாகவே இருந்து மக்களுக்கு அன்றாடம் பணியாற்று வதற்கு, அவர்களுக்குச் சேவை செய்வதற்கு நான் விரும்புகின்றேன். ஆண்டவன் என்றெல்லாம் சொல்லி, மக்களை ஏமாற்றுகின்ற ஒரு கூட்டம் இருக் கின்றது. அந்தக் கூட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து, வீழ்த்தி, அதில் யாரும் ஏமாறாமல் இருக்கின்ற பகுத்தறிவுப் பிரச்சாரத்தை செய்வது தான் நமது கடமை. அந்தப் பகுத்தறிவுப் பிரச்சா ரத்தை நாம் தொடர்ந்து செய்ய வேண்டுமென்று இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் உறுதி யெடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். (பலத்த கைதட்டல்). ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இங்கே குழுமியிருக்கின்றீர்கள். உங்களை யெல்லாம் ஆண்டவன் பெயரால், பக்தியின் பெயரால், மதத்தின் பெயரால் நான் ஏமாற்ற விரும்பவில்லை. ஏமாற்றவும் கூடாது. அப்படி ஏமாற்றுபவர்களை நாம் விடப் போவதும் இல்லை. ஆகவே, எழுச்சி பெற்ற இளைஞர்கள், எதிர் காலத்தை உருவாக்க வேண்டிய சிற்பிகள், நீங்கள் பெரியார் வழியில், அண்ணா வழியில், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வழியில், திராவிட முன்னேற்றக் கழக வழியில் வீறு நடைபோட்டு சமுதாயச் சீர்திருத்தங்களை, சமுதாயப் புரட்சிகளை இந்த நாட்டில் உருவாக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

என்னைப் பொறுத்தவரையில், நான் ஒரு கிராமத் திலே பிறந்தவன். தஞ்சை மாவட்டத்தில் திருக் குவளை என்ற ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்தவன். இன்றைக்குத்தான் அந்த ஊருக்கு நம்முடைய மத்திய அரசினுடைய உதவியினால் ஒரு பல்கலைக் கழகம் வந்திருக்கிறது. இன்றைக்குத்தான் அந்த ஊருக்கு ஒரு மருத்துவமனை வந்திருக்கிறது. அப்படிப்பட்ட சின்னஞ்சிறு குக்கிராமத்திலே பிறந்து, ஒவ்வொரு நாளும் என்னுடைய வீட்டி லேயிருந்து ஏழு கல் தொலைவில் உள்ள ரயில டிக்குச் சென்று, ரயில் ஏறி பிறகு திருவாரூரிலே போய் படித்துக் கொண்டிருந்தவன் நான். அப்படி ஏறத்தாழ கிராமவாசியாகவே இருந்த என்னை, இன்றைக்கு உங்களுடைய முதலமைச்சராக ஆக்கியிருப்பது எது என்றால், என்னு டைய தலைமை அல்ல, என்னுடைய சக்தி அல்ல. ஏதோ அந்தராத்மா, ஆண்டவன் சக்தி என்றெல்லாம் கருதி என்னை நானே ஏமாற்றிக் கொள்ள விரும்ப வில்லை. என்னை இந்த நிலைக்கு உயர்த்தியிருக் கிறீர்கள் என்றால் - நான் எவ்வளவு எச்சரிக்கையாகச் சொல்கிறேன் பாருங்கள், மறந்து விடக்கூடாது - உயர்த்தியிருக்கிறீர்கள் என்றால், நீங்கள்தான் என்னை இந்த அளவிற்கு உயர்த்தியிருக்கிறீர்கள் (கைதட்டல்). இங்கே உட்கார்ந்து இருக்கின்ற ஒவ்வொருவரும் எழுந்து நின்று, ஒவ்வொரு வருடைய தோளையும் கொடுத்து, ஒரு தோள் மீது ஏறி, இன்னொரு தோள் மீது ஏறி, இன்னொரு தோள் மீது ஏறி இப்படி உச்சிக்கு வந்தவன் நான். ஆகவே, உங்கள் தோள்தான் எனக்கு இன்றைக்கு அடிபீடமாக இருக்கின்ற தோள். ஏன்? எதற்காக? உங்களுக்காகப் பாடுபட, உங்களுக்காகப் பணி யாற்ற, தமிழ்நாட்டிலே பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள், ஆதி திராவிடர்கள், அருந்ததியர்கள் என்றெல்லாம் பிரிக் கப்பட்டுக் கிடந்த இந்த அருமையான சமுதாயத்தை ஒன்றுபடுத்தி, மனிதனில் நீயும் மனிதன்; மண் ணன்று! என்று உணர்த்தி மனித சமுதாயத்திலே நம்மைக் கலக்கச் செய்த மாபெரும் இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம். அந்த இயக்கத்தை வழித் தோன்றலாகக் கொண்டு உருவானது தான் நீதிக்கட்சி. அந்த நீதிக்கட்சி போதித்த சமுதாயச் சிந்தனை, சமூகநீதி - இவைகளின் அடிப்படையிலே பிறந்ததுதான் திராவிடர் இயக்கம். அந்த திராவிடர் இயக்கத்தின் கிளைதான் திராவிட முன்னேற்றக் கழகம்.

இந்த திராவிட என்ற சொல்லை நாம் நாட்டிலே பரப்புவதற்கும், மக்களுடைய மனங் களிலே பதிய வைப்பதற்கும், எதிர்க்கட்சிக்காரர் களுடைய ஏளனங்களுக்குப் பதிலளிப்பதற்கும், விளக்கமளிப்பதற்கும், விளக்கமளித்து நிலை நாட்டுவதற்கும் எப்பாடு பட்டிருக்கிறோம் என்று சொல்ல முடியாது. திராவிட என்ற சொல்லே கிடையாது என்று சொன்னார்கள். திராவிட என்ற வார்த்தையே கிடையாது என்று கூறினார்கள். திராவிட என்ற இனமே கிடையாது. பெரியாரு டைய கூற்று அது, அண்ணாதுரையின் கூற்று, கருணாநிதியின் கூற்று என்று சொல்லிக் கொண்டி ருந்தார்கள். இன்றைக்கு திராவிட என்பது, புதிதாக கட்சி ஆரம்பிப்பவர்களெல்லாம் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு அவசியமான வார்த்தை யாக ஆகி விட்டிருக்கிறது என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. அந்த அளவிற்கு திராவிட என்ற சொல்லுக்கு பெருமை ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அதே நேரத்திலே அந்தச் சொல்தான் எதிரிகளுக்கு எரிச்சலைக் கிளப்பியிருக்கிறது. அந்தச் சொல்தான் இந்த இயக்கத்தை எப்படி யாவது அழிக்க வேண்டும் என்ற வெறித்தனத்தை பகைவர்களுக்கு ஊட்டியிருக்கிறது. அதைத்தான் நான் உங்களுக்கு விளக்க விரும்புகின்றேன் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சாதனைகளைப் பற்றியெல்லாம் இங்கே சொன்னார்கள். நான் தொடக்கத்திலே குறிப்பிட்டதைப் போல, தஞ்சை மாவட்டத்திலே, சின்னஞ்சிறு கிராமத்திலே, திருக்குவளை என்ற சிற்றூரிலே பிறந்த எனக்கு, என்னுடைய சுற்றுப்புறம், சுற்றுச் சூழல் எப்படி இருந்தது என்றால்- நான் இங்கே சொல்ல விரும்பு கின்றேன், என்னுடைய அருமை கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் யாராகிலும் இந்தக் கூட்டத்திலே இருக்கக்கூடும். வராமல் இருக்க மாட்டார்கள். அவர்கள் அறிவைத் தேடி அலை பவர்கள். அவர்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு சொல் கின்றேன். அந்தச் சின்னஞ்சிறு கிராமத்திலே விவசாயத் தொழிலாளர்களுடைய போராட் டம் நடைபெற்றபோது - மணலி கந்தசாமி போன்ற வர்கள் போர்க்களத்திலே நின்று அந்தப் போராட் டத்தை நடத்தியபோது, சீனிவாச ராவ் போன்ற வர்கள், ஆதிதிராவிட விவசாயிகளுக்காக போர்க் கொடி உயர்த்தியபோது, அந்தப் போர்க்கொடியின் நிழலில் நின்றவன் நான். எனவே, இளமைக் காலத்திலே என்னுடைய உள்ளத்தை ஆதிக்கம் செலுத்தியது, கம்யூனிசத் தத்துவம்தான். ருஷ்ய நாட்டு லெனினுடைய போத னைகள்தான். ஸ்டாலினுடைய செயல்கள்தான் என்னுடைய இருதயத்தை அன்றைக்கு ஆக்கிரமித்துக் கொண்டி ருந்தது. அந்தக் காலகட்டத்தில் எங்கள் மாவட் டத்தைச் சேர்ந்த பெரிய பெரிய மிராசுதாரர்கள், மிட்டாதாரர்கள், குட்டிக் குபேரர்கள் இவர்க ளெல்லாம் எந்த அளவிற்கு ஆதிதிராவிடத் தொழி லாளர்களை, விவசாயிகளை பாடுபடுத்தினார்கள், என்னென்ன கடுமையான தண்டனைகளை யெல்லாம் கொடுத்தார்கள் என்றால், குற்றம் செய்த ஒரு தலித் விவசாயியை, கூலிக்காரா! நீ குற்றம் செய்தாயா, இல்லையா? என்று கேட்டு, அந்த விவசாயி அதை நிரூபிப்பதற்கு முன்பே, சாணிப் பாலை காய்ச்சி, சுண்டக்காய்ச்சி, கொதிக்க கொதிக்க அந்தச் சாணிப்பாலால் அந்த ஆதிதிராவிடத் தோழனை குளிப்பாட்டுவார்கள். அவன் துடித்துத் துவளுவான். அந்தக் காட்சியையெல்லாம் நான் கண்டிருக்கின்றேன். அதனுடைய விளைவு, கருணாநிதியை ஒரு கம்யூனிஸ்ட்காரனாக அன்றைக்கு ஆக்கியது. அப்படியானால், இன்றைக்கு நீ கம்யூனிஸ்ட்டா, இல்லையா? என்று கேட்பீர்களே யானால், இன்றைக்கும் நான் கம்யூனிஸ்ட்தான். கம்யூனிஸ்ட் கட்சியிலேதான் கம்யூனிசம் இல்லையே தவிர, என்னிடத்திலே கம்யூனிசம் இருக்கிறது.

தி.மு.க. செய்த தவறு என்ன என்று கம்யூனிஸ்டுகளால் கூற முடியுமா?

கம்யூனிஸ்ட் கட்சி கம்யூனிசத்தைத் துறந்து வெகு நாளாயிற்று. ஏன் நீங்கள் அங்கேயெல்லாம் போக வேண்டியதில்லை. கடந்த முறை நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் நாங்கள், சி.பி.எம்., சி.பி.அய்., காங்கிரஸ் ஆகிய இந்தக் கட்சிகளெல்லாம் ஒன்றாக இணைந்து தேர்தலிலே போட்டியிட்டோம். இப்பொழுது இந்தத் தேர்தலிலே என்ன நிலைமை? நாங்கள் விலக்காமலே அவர்களாகவே - சி.பி.அய்., சி.பி.எம். ஆகிய கட்சிகள் அவர்களாகவே ஒதுங்கிக் கொண்டிருக்கிறார்கள். என்ன காரணம்? நான் அவர்களைக் கேட்க விரும்புகின்றேன். தனியாக டிநே வடி - டிநே என்று சொல்வார்களே, அப்படிக்கூட அந்தக் கட்சிகளின் தலைவர்களிடத்திலே பேசுவ தற்கு நான் தயாராக இருக்கின்றேன். தி.மு.க. எந்தக் கொள்கையிலே உங்களிடமிருந்து பிறழ்ந்தது? தி.மு.க. எந்தத் தத்துவத்திலே உங்களிடமிருந்து தவறியது? ஏன் நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்து - நாங்கள் ஜெயலலிதாவோடு இருப்போம் என்று சொல்கிறீர்கள்? என்று நான் கேட்க விரும்பு கின்றேன். இதற்கு அவர்கள் என்ன பதில் சொல்ல முடியும்? என்ன தவறு செய்தேன் என்று குற்றம் சாட்டிவிட்டு, என்னை ஒதுக்கி வைத்தால், நான் ஒதுங்கிக் கொள்ளத் தயாராக இருக்கிறேன். ஆனால், எந்தக் குற்றமும் என் மீது சாற்ற முடி யாமல்; ஒரே ஒரு குற்றம் - சோனியா காந்தி தலைமையிலே உள்ள காங்கிரஸ் கட்சியோடு நாங்கள் அணி சேர்ந்திருக்கிறோம், கூட்டணி வைத்திருக்கிறோம் என்ற ஒன்றைத் தவிர எங்கள் மீது வேறு என்ன சொல்ல முடியும்? அது என்ன தவறான கூட்டணியா? நீங்கள் வைக்காத கூட்டணியா? சி.பி.அய்., சி.பி.எம்., தி.மு.க. எல்லாக் கட்சிகளும் சேர்ந்துதான் காங்கிரசோடு கூட்டணி வைத்து அகில இந்திய அரசியலிலே பெரு வெற்றியைப் பெற்றோம். மறக்க முடியுமா? பிறகு என்னதான் நடந்தது? வடக்கே இருக்கிற கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தலைவர் பிரகாஷ் காரத் எனக்கு அருமையான நண்பர். அந்த பிரகாஷ் காரத் அவர்களும், இந்த மாநிலத்திலே சென்னை யிலே இருந்து அரசியல் நடத்தி, திராவிட முன் னேற்றக் கழகத்தின் ஆதரவைப் பெற்று ராஜ்ய சபா உறுப்பினராகி இருக்கின்ற நண்பர் டி.ராஜா அவர்களும் என்னிடத்திலே வந்து பேசினார்கள். அதுதான் ஆரம்பம். நீங்கள் காங்கிரஸ் கட்சி அணியிலே இருக்கக் கூடாது என்றார்கள். ஏன்? என்று கேட்டேன். அவர்கள் அணுசக்திப் பிரச் சினையில் அமெரிக்காவோடு ஒரு உடன்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். அதை அவர்கள் கைவிட்டால்தான் அவர்களோடு கூட்டணியில் இருக்க முடியும்? என்றார்கள். அதைப் பற்றி நான் அவர்களி டம் பேசுகிறேன். அதற்காக ஏன் கூட் டணியை கலைக்க வேண்டும்? மதவாத சக்திகளை எதிர்த்து, பிற்போக்கு சக்திகளை எதிர்த்து, சாதியை அடிப் படையாகக் கொண்ட சக்திகளை எதிர்த்து, ஒரு கூட்டணி உருவாக்கினோம். இந்தியாவில் ஒரு பெரும் புரட்சியைச் செய்து, அந்தக் கூட்டணிக் கான வெற்றியைப் பெற்றோம். இப்போது திடீரென்று அமெரிக்காவை காரணம் காட்டி, அணுகுண்டை காரணம் காட்டி, காங்கிரசிலே இருந்து நீங்கள் பிரிவது என்றால் சரியல்ல. நீங்கள் உற்ற காரணங்களைச் சொல்லுங்கள். நான் சோனியா காந்தி அம்மையாரிடம் பேசுகிறேன். மன்மோகன்சிங் அவர்களோடு பேசுகிறேன், பிரணாப் முகர்ஜியோடு பேசுகிறேன் என்று சொன்னேன். நான் சொன்னவாறு அவர்களோடு பேசினேன், இரண்டு மூன்று முறை பேசினேன். அந்தப் பேச்சுக்குப் பிறகு திடீரென்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் என்னை வந்து சந்திப்பதையும், பேசுவதையும் நிறுத்தி விட்டார்கள். சென்னைக்கு வருவார்கள், வீட்டிலே சந்திப்பார்கள், கட்சி அலுவலகத்திலே சந்திப்பார்கள், தலைமைச் செயலகத்திலே சந்திப்பார்கள், இப்படி இரண்டு அல்லது மூன்று முறை சந்தித்துப் பேசிய பிரகாஷ் காரத்தும், சி.பி.ஐ. நண்பர் ராஜாவும் என்னி டத்திலே பேசுவதை திடீரென்று நிறுத்தி விட்டார்கள்.

தொழிலாளர்களை வேட்டையாடிய ஜெயலலிதாவோடு சேர்ந்தது நியாயமா?

ஏன் என்று பிறகு விசாரித்தால், நான் காங்கிரசை ஆதரிக்கப்போகிறேன் என்று இவர்கள் ஒரு கற்பனையை செய்து கொண்டு, அதனால் இனி மேல் கருணாநிதியிடம் பேசி புண்ணியம் இல்லை என்று விலகிக்கொண்டார்கள். விலகுவதற்கு முன்பு, ஒரு உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த கட்சிகளின் தலைவர்கள், நாங்கள் இனிமேல் உங்களோடு உடன்பாடு கொள்ள முடியாது. எங்களால் இதை ஜீரணிக்க முடியாது, ஆகவே விலகிக்கொள்கிறோம் என்று சொன்ன துண்டா? இல்லை. பேசிக் கொண்டிருக்கும்போதே, இவர்கள் வெளியேறி விட்டார்கள். வெளியேறி அடுத்ததாக, தி.மு.கழக அரசு பாட்டாளிகளுக்கு எதிரான அரசு. தொழிலாளர்களுக்கு எதிரான அரசு என்று அறிக்கை விட்டார்கள். நான் கேட்டேன், ஏன் நீங்கள் இல்லாததைச் சொல்லுகிறீர்கள்? தொழிலாளர்களுக்கு எதிராக நாங்கள் என்ன சொல்லிவிட்டோம். நீங்கள் என்ன தொழிலாளர் களுக்கு ஆதரவான கட்சியுடனா போய்ச் சேர்ந் திருக்கிறீர்கள். அந்த அம்மையார் முதலமைச்சராக இருந்தபோது, தொழிலாளர்களை எல்லாம் துடிக்கத் துடிக்க வேட்டை ஆடியவர் அல்லவா? அங்கே போய்ச் சேருகிறீர்களே, என்ன நியாயம்? என்று கேட்டபோது, பதிலே சொல்லாமல், அவர்களுடைய பத்திரிகைகளிலும் சரி, கூட்டங் களிலும் சரி, தி.மு.கழக அரசை கண்டபடி தூற்றவும், என்னுடைய சொந்த விவகாரங் களைப் பற்றிப் பேசவும், எனது குடும்பத்தைப் பற்றிப் பேசவும், என்னுடைய மனைவியைப் பற்றி எழுதவும் என்கின்ற அளவிற்கு உச்சக் கட்டத்திற்கே சென்று விட்டார்கள். நான் இப்போதும் கேட்கின்றேன்; நீங்கள் அப்படிச் செல்ல வேண்டிய காரணம் என்ன? நீங்கள் சென்றாலும் பரவாயில்லை, அந்தக் காரணத்தையாவது சொல்லுங்கள். நீங்கள் சொல்லக்கூடிய ஒரே காரணம், நாங்கள் காங்கிரஸ் கட்சியோடு உடன்பாடு கொள்கின்றோம் என்பது தான். அந்த உடன்பாடு ஒன்றும் புதிதல்ல. நீங்களும் சேர்ந்து செய்து கொண்ட உடன்பாடுதான் அது. அந்த உடன்பாட்டை நீங்கள் முறித்துக்கொண்டு, அதற்குக் காரணம் நாங்கள் என்று சொன்னால், அதை ஏற்க நான் தயாராக இல்லை என்பதை மாத்திரம், என்னுடைய அருமை கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். இங்கே தம்பி பொன்முடி சொன்னார். தொழிலாளர்களுடைய பிளவின் காரணமாக என்ன ஆயிற்று? தமிழ்நாட்டிலே போக்குவரத்துத் தொழிலாளர்களு டைய தேர்தல் நடைபெற்று, அந்தத் தேர்தலில் அய்ந்து ஆறு சங்கங்கள் போட்டியிட்டு, நாம் ஒன்றாக இருந்த கூட்டணியை முறித்துக்கொண்டு, சி.பி.அய். சார்பாக ஒரு சங்கம், தே.மு.தி.க. அது ஒரு சங்கம், இப்படி பல பிரிவுகளாகி அதிலெல்லாம் போய் சேர்ந்து கொண்டு - இதிலே மறுமலர்ச்சி வேறு, அதெல்லாம் சேர்ந்து கொண்டு - இன்றைக்கு என்ன ஆயிற்று?

தொழிலாளர் சங்கத் தேர்தலில் கம்யூனிஸ்ட் சார்புடைய சங்கம் என்ன ஆனது?

இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் இருக் கின்ற ஒரு பெரிய நிறுவனம், அந்தப் பேருந்து தொழி லாளர் களுடைய பெரிய சங்கத்தை பிளவுபடுத்தி, அய்ந்து ஆறு கட்சிகளின் சார்பாக போட்டியிட்ட காரணத்தால் - கம்யூனிஸ்ட் சங்கம், கம்யூனிஸ்ட் சார்புடைய சங்கம் வெற்றி பெற முடியாமல், தி.மு.கழகச் சார்புடைய சங்கம் பெருவெற்றியைப் பெற்று வருகிறது என்ற செய்தியை கேள்விப்படு கிறோமே, (கை தட்டல்) அதற்காக நான் மகிழ்ச்சி அடையவில்லை. இங்கே பொன்முடி போன்றவர் கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள். ஆனால், நான் அதற்காக மகிழ்ச்சி அடையவில்லை. அய்யோ, இடது சாரி இயக்கத்தினுடைய தோழர்கள், அந்த அமைப்பின் சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெறாமல் போய் விட்டார்களே! என்ற சங்கடம் தான் எனக்கு. தொழிலாளர்களுடைய போராட்டத் திலேயாவது ஒன்றாக இருந்தி ருக்கலாமே- அந்த அளவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது - திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் மீது அவர்களுக்கு வெறுப்பு, எரிச்சல். இது காங்கிரசை எதிர்த்து செய்த விஷயமல்ல. திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய லட்சியத்திற்கு எதிராக நடை பெறுகிற காரியம். ஏனென்றால், திராவிட என்ற சொல்லுக்கு இன்று நேற்றல்ல, பல்லாண்டு காலமாகவே இந்த எதிர்ப்பு இருந்து வருகிறது. என்றைக்கு நாங்கள் திராவிட என்று சொல்ல ஆரம்பித்தோமோ, அன்றைக்கே ஒரு பக்கத்திலே இருந்து ஆரியம் படமெடுக்க ஆரம்பித்து விட்டது. ஆரியம் தன்னை யாரென்று காட்டிக் கொள்ளாமல் படமெடுக்க ஆரம்பித்தது. ஒரு நாடகத்திலே அண்ணா அவர்கள் ஆரியத்தைப் பற்றிச் சொல்வார் - விளக்கி விட்டுச் சொல்வார் - விதைக்காமலே விளையும் கழனி என்று சொல்வார். எது என்று கேட்டால், அதுதான் அம்மா ஆரியம் என்பார். சந்திரமோகன் நாடகத்தில் இத்தகைய உரையாடல் களை அண்ணா அன்றைக்கே தீட்டினார். அதுதான் இன்றைக்கும் செயல்படுத்தப்படுகிறது. அதைத்தான் நாங்கள் கம்யூனிஸ்ட் கட்சியிடத்திலே கேட் கிறோம். இத்தகைய இன உணர்வை உருவாக்கிய இந்த இயக்கத்தை, அதன் காரணமாகவே அழிக்க நினைக்கிற சிலரோடு நீங்களும் சேர்ந்துகொண்டு அதற்காக புஜபல பராக்கிரமத்தை காட்டு கிறீர்கள் என்றால், நாங்கள் எப்படி அதைப் பொறுத்துக் கொள்ள முடியும் என்றுதான் கேட்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைய தினம் காங்கிரசோடு கூட்டணியில் இருக்கிறது என்றால், தமிழகத்திலே, இந்தியாவிலே இரு பெரும் அரசுகள் - இங்கே மாநில அரசு, மத்திய அரசு என்று இருபெரும் அரசுகள் இருப்பதை அறிந்துதான் கூட்டணியில் இருக்கின்றோம்.

காங்கிரசில் நம்மை விரும்பாத சில விஷமிகள் கழகக் கூட்டணிக்கு எதிராகச் செயல்படுகிறார்கள்!

மத்திய அரசு மாநில அரசுக்கு உறுதுணையாக இருக்கிறது - மாநில அரசு மத்திய அரசுக்கு உறுதுணையாக இருக்கிறது. இதை ஏற்றுக் கொள்ள வேண்டும். சில காங்கிரஸ்காரர்கள்கூட இதை ஏற்றுக் கொள்ள வேண்டும். எப்படி மத்திய அரசு மாநில அரசுக்கு துணையாக இருக்கிறதோ, அதே போல மாநில அரசு மத்திய அரசுக்குத் துணையாக இருக்கிறது. இதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இதை காங்கிரஸ்காரர்கள் சிலர் ஏற்றுக் கொள்ள வேண்டும். சிலரால் ஜீரணிக்க முடியாத நிலை. ஏனென்றால், திராவிட முன்னேற்றக் கழகம் இங்கே கூட்டணிக்குத் தலைமை வகிப்பது சிலருக்குப் பிடிக்கவில்லை. அதனால், ஏதேதோ பேசுகிறார்கள். அதை தட்டிக் கேட்கவும், அடக்கவும் டெல்லியிலே இருக்கின்ற தலைவர்கள், பெரியவர்கள் வரவேண்டியிருக்கிறது - அல்லது அவர்கள் சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால், இங்கே இருக்கின்ற சில விஷமிகள், தூண்டிவிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தோடு இருக்கின்ற உறவை எப்படியாவது கெடுக்க வேண்டும் என்று எண்ணுகின்றார்கள். அப்படிக் கெடுத்தால், இந்த உறவைத் துண்டித்தால், அது யாருக்கு நஷ்டம் என்றால் துண்டிக் கின்றவர்களுக்குத்தான் நஷ்ட மாகும். இன்னும் சொல்லப்போனால், துண்டிக் கின்றவர்களுக்கும், துண்டிக்கப்படுகின்றவர் களுக்கும் சேர்த்து இரண்டு பேருக்கும் நஷ்டம். ஏனென்றால், நாம் இரு சக்திகளும் மதவாத சக்திகளை எதிர்க்கின்ற சக்திகள். நாம் இருவரும் சாதி துவேஷங்களை ஏற்றுக் கொள்ளாத சக்திகள். காங்கிரசாக இருந்தாலும், கழகமாக இருந்தாலும் நாம் என்றென்றும் மதவாதத்தை இந்தியாவிலோ தமிழகத்திலோ நுழைவதற்கு அனுமதிக்காதவர்கள். நமக்குள்ளே ஒரு பிளவை ஏற்படுத்தினால், மதவாதம் சுலபமாக உள்ளே நுழைய முடியும் என்று மதவாதத்தினால் மகிழ்ச்சியடைந்து கட்டிப் புரண்டு கொண்டிருப்பவர்கள், இந்தச் சந்தர்ப்பத்தை பொன்னான சந்தர்ப்பமாகக் கருதி உள்ளே நுழைந்து விடுவார்கள். ஆகவேதான் நான் சொல்லு கின்றேன். மதவாதத்தை இன்றைக்கு எதிர்த்து நிற்கின்ற, விரும்பாத, வெறுக்கிற சக்தி தி.மு. கழகம். அந்தக் கழகம் காங்கிரசுடன் கொண்டிருக்கின்ற உடன்பாடு, அதை மேலும் வலுப்படுத்திக் கொள்வ தற்காகத்தானே தவிர, வேறல்ல என்பதை சிண்டு முடிபவர்களுக்கு, பிணக்கை ஏற்படுத்த வேண்டும் என்று கருதுபவர்களுக்கு நான் அறிவுரையாகச் சொல்லுகின்றேன். அதே நேரத்தில் மேலே இருப் பவர்கள் இவர்களை யெல்லாம் இனியும் துளிர் விடாமல், இனியும் இப்படிப்பட்ட பேச்சுக்களை யெல்லாம் பேசி இருப்பதைக் கெடுத்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பு மேலே உள்ளவர்களுக்கும் இருக்கிறது என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். ஏதோ பெரிய கூட்டம் கூடியிருக்கின்றது. இந்தக் கூட்டத்தைப் பார்த்ததும் கருணாநிதிக்கு எல்லாம் பேச வேண்டும் என்று தோன்றிவிட்டது போலிருக்கிறது என்று கருதுவார்களேயானால், அது தவறு. நான் இதைவிடப் பெரிய கூட்டத்தை யெல்லாம் பார்த்தவன். இதைவிட பெரிய மாநாடுகளையெல்லாம் கண்டவன். அந்த மாநாடு களிலும், கூட்டங்களிலும் எனக்கு எவ்வளவு அடக்கம் இருந்ததோ, அந்த அடக்கத்திலே கிஞ்சிற் றும் குறைவில்லாமல், அந்த அடக்கத்தோடுதான் இன்றைக்கும் நான் பேசுகின்றேன். நாம் ஒன்றாக இருந்தால்தான், இந்திய அரசும் தமிழகத்திலே இருக்கின்ற தமிழக அரசும் கைகோர்த்துக் கொண்டு மதவாதத்தை எதிர்த்தால்தான், மதவாதத்தை அழிக்க முடியும் - அதை மாண்டு போகச் செய்ய முடியும். அந்த. உறுதியை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்ற அதே நேரத்தில், தற்கால அரசியலைப் பற்றிய ஒன்றிரண்டு செய்திகளைச் நான் சொல்ல வேண்டியவனாக இருக்கின்றேன்.

ஜனநாயகத்தை மதித்து ராசா பதவி விலகினார்!

இப்பொழுது ஸ்பெக்ட்ரம் - ஸ்பெக்ட்ரம் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது. அதில், நம்முடைய கழக அமைச்சர் தம்பி ராசாவைப் பற்றி நாடாளு மன்றத்தில் ஒரு சந்தேகத்தைக் கிளப்பி தினந்தோறும் கூச்சல் போட்டார்கள். நாடாளுமன்றம் என்பது கூச்சல் போடுகிற இடம் அல்ல. பாராளுமன்றம் என்பது கூடிப் பேசுகிற இடமே தவிர கூச்சல் போடுகின்ற சந்தை அல்ல. என்ன வேண்டும் என்று கேட்டபோது, ராசாவை ராஜினாமா செய்யச் சொன்னால், பாராளுமன்றம் நிம்மதியாக நடக்குமா? அப்படி நடக்குமேயானால், அதற்கு உறுதி உண்டென்றால், எங்கள் ராசா ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறார். இந்தப் பதவி பெரிதல்ல. பாராளுமன்ற ஜனநாயகம்தான் பெரிது என்ற முறையிலே ராசா, ராஜினாமா செய்தார்.
அதற்குப் பிறகு என்ன கேட்கிறார்கள்? பாராளுமன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டும் - ஜெ.பி.சி. குழு (துடிவே ஞயசடயைஅநவே உடிஅஅவைவநந) விசாரணை வேண்டும் என்று கேட்கிறார்கள். அறிவார்ந்த வேலூர் பகுதி மக்களே, அரசியல் தெரிந்த நண்பர்களே - இந்தியாவினுடைய சரித்திரம் புரிந்தவர்களே, சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவிலே ஏற்பட்ட அரசியல் நிகழ்வுகளையெல்லாம் தெளிவாக உணர்ந்தவர்களே, உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன். முந்த்ரா ஊழல் என்று ஒரு பெரிய ஊழல். முந்த்ரா ஊழல் - அதில் டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் என்ற நிதியமைச்சருக்கு தொடர்பு உண்டு என்று அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது, பாராளுமன்றத்தில். உடனே அந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரியாரை காங்கிரஸ் கட்சி ராஜினாமா செய்ய அறிவுரை கூறியது. அவர், ராஜினாமா செய்தார். அதோடு, அவருடைய ராஜினாமாவோடு முந்த்ரா ஊழல் பற்றிய பாராளுமன்ற விவாதங்கள், கூச்சல், குழப்பங்கள் ஓய்ந்தன. ஏன்? டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் ராஜினாமா செய்தவுடன் பாராளுமன்றத்திலே கூச்சல் இல்லை - குழப்பம் இல்லை. அவரைப் பற்றி மோசமான விமர்சனங்கள் இல்லை. தமிழ் நாட்டிலே அப்போது அவரைப் பற்றி எழுது வதற்கு ஆனந்த விகடனுக்கு கை ஓடவில்லை. கல்கிக்கு கை ஓடவில்லை. தினமணிக்கு கை ஓட வில்லை - நிறுத்திக் கொண்டார்கள் - முடிந்து விட்டது. முந்த்ரா ஊழல் வெறும் முணுமுணுப்போடு முடிந்துவிட்ட ஊழலாக ஆகிவிட்டது. நான் சொல்கிறேன், இன்றைக்கு ராசாமீது குறையே இருக்கட்டும். ராஜினாமா செய்த பிறகு, டி.டி.கிருஷ்ண மாச்சாரியைப் பற்றி வந்த முந்த்ரா ஊழல் நின்று விட்டது. ராசா மீது பேசப்பட்ட இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் மாத்திரம் இன்னும் பேசப்படுகிறதே என்ன காரணம்? ராசா தலித். டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் - அவரது பெயரிலேயே இருக்கிறது ஆச்சாரியார். ஆச்சாரியாருக்கு ஒரு நியாயம் - ஆதி திராவிடருக்கு ஒரு நியாயமா? இதுதான் இந்தியாவிலே சமதர்மமா? கூச்சல் போடுகின்ற கட்சிகளைக் கேட்கிறேன். ஒன்றை நான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். என்னுடைய அரசில் தி.மு.கழக அரசில் உமாசங்கர் என்கிற ஒரு ஆதி திராவிடத் தோழர் - அவர் ஆதி திராவிடரா அல்லவா என்பது விசாரணையில் இருக்கிறது. அவர்மீது ஒரு புகார் வந்தபோது, அதை நாங்கள் கேட்டோம் - விளக்கம் கேட்டோம் அவரிடத்திலே. விளக்கம் கேட்டவுடன் இந்த கம்யூனிஸ்ட்டுகள், அ.தி.மு.க. எம்.பி.க்கள் எல்லாம், ஆஹா! உமாசங்கர் தலித் என்ற காரணத்தால், ஆதி திராவிடர் என்ற காரணத்தால் அவரை ஒழிக்கப் பார்க்கிறார் கருணாநிதி என்றெல்லாம் சொன்னார்கள். ஒன்றும் ஒழிக்கவில்லை. இவர்களுடைய எதிர்ப்பைக் கண்டதும் என்றே எடுத்துக் கொள்ளட்டும். அல்லது நியாயமாக சட்டரீதியாக செய்யப்பட்ட காரியம் என்று எடுத்துக் கொள்ளட்டும். தற்காலிக மாக விலக்கப்பட்டிருந்த அவரை மீண்டும் பணியிலே சேர்த்து ஆணை பிறப்பித்தது இந்தக் கருணாநிதிதான். தலித் என்பதற்காக அடியோடு பழி வாங்க வேண்டும் என்று எண்ணவில்லை - தலித் ஆயிற்றே என்று எதிர்க் கட்சிக்காரர்கள் சொன்னவுடன், ஆமாம் - தலித்துதான். இருந் தாலும், பிறகு விசாரித்துக் கொள்ளலாம். இப் போது அவர் மீண்டும் பதவிக்கு வரட்டும் என்று அவரை பதவியிலே அமர்த்தியிருப்பது இந்தக் கருணாநிதிதான்.

பத்திரிகைகள் வேண்டுமென்றே ஊழல் என்று எழுதுகிறார்கள்

நீங்கள் யோசித்துக் கொள்ள வேண்டும் - தலித், இங்கே ஒரு மாடல் - அங்கே ஒரு மாடல். அவர்களை நடத்துவதற்கு தி.மு.க. கையாளுகின்ற முறையும், தி.மு.க. அல்லாத வேறு கட்சிகள், மதவாதக் கட்சிகள், ஏன் இன்னும் சொல்லப் போனால் கம்யூனிஸ்ட் கட்சிகளே கூட கையாளு கின்ற முறையும் எப்படி வித்தியாசப்படுகின்றது என்பதை தயவுசெய்து நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இதிலே தவறு நடைபெற்றிருக்கிறதா இல்லையா? அதற்கு விசாரணைகள் நடைபெறு கின்றன. சி.பி.அய்.விசாரணை, நீதி மன்ற விசாரணை எல்லாம் நடைபெறுகிறது. அந்த விசாரணை நடைபெற்று முடிந்தபிறகு, அந்த விசாரணையின் முடிவு என்ன இருக்கிறதோ, அதற்கேற்ப திராவிட முன்னேற்றக் கழகம் தன்னுடைய முடிவைச் செய்யும். ராசா தன்னுடைய முடிவை அறிவிப்பார். அது வேறு விஷயம். அதற்கு இடையிலே இந்த அளவிற்கு வெறியாட்டம் போடுகிறார்களே? பத்திரிகையைப் புரட்டினால், ஏதோ இமய மலையே கவிழ்ந்துவிட்டதைப் போல ஏதேதோ பேசுகிறார்களே - ஒரு பத்திரிகையிலே சைபர் சைபர் சைபர் என்று ஏழு சைபர் போட்டு, இத்தனை இலட்சம் கோடி ரூபாய் ஊழல் என்று போடுகிறார்கள். அத்தனை இலட்சம் கோடி ரூபாய் ஊழல் என்று நிரூபிக்க முடியுமா? முடியாது. வேண்டுமென்றே மக்களை பயமுறுத்துவதற்காக இத்தனை இலட்சம் ரூபாய் ஊழல் என்கின்றார்கள். நான் கேட்கின்றேன். நீதிமன்றத்தில், பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 66 கோடி அவர் முறைகேடாக சேர்த்திருக்கிறார் என நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கண்டுபிடிக்கப்பட்ட ஊழல் பணம் இவ்வளவு என்று இன்னமும் வழக்கு, ஏறத்தாழ பத்து வருடங்களாக வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக் கிறது. ஓராண்டா? ஈராண்டா? பத்தாண்டு காலம். அவர்களுடைய வழக்கு என்றால் தள்ளிக் கொண்டே போகும். அந்த வழக்கு பத்தாண்டாக நடைபெற்று இன்னமும் தீர்ப்புக் கூறப்படவில்லை. தீர்ப்பு கூறப்படுவதற்கு முன்பு இன்னும் என்னென்ன வாய்தா வாங்குவார்களோ தெரியாது. மொழி பெயர்ப்பு சரியில்லை என்று சொல்வார்கள் - சாட்சி சரியாக வரவில்லை என்று சொல்வார்கள் - வந்த சாட்சி நொண்டிக் கொண்டு வந்தார் என்று சொல் வார்கள் - வந்த சாட்சி போட்ட கையெழுத்து சரியில்லை என்று சொல்வார்கள். இப்படியெல் லாம் எதையாவது சாக்குப் போக்குச் சொல்லி, வழக்கு நீடித்து நீடித்து 12 ஆண்டுகாலம் 13 ஆண்டுகாலமாக வழக்கு நடைபெற்று வருகிறது. சொத்துக் குவிப்பு வழக்கு. ஏறத்தாழ 2 கோடியே ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் சொத்தோடு ஆரம்பிக்கப்பட்ட முதலமைச்சரு டைய வாழ்க்கை - முதலமைச்சர் என்றால் என்னைக் கருதிக் கொள்ளாதீர்கள். முன்னாள் முதலமைச்சரு டைய வாழ்க்கை, 2 கோடியே ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாயிலே ஆரம்பிக்கப்பட்ட வாழ்க்கை 68 கோடி ரூபாய் - 70 கோடி ரூபாய் என்ற அளவிற்கு சொத்துக் குவிப்பு என்று நிரூபிக்கப்பட்டு, அதற்கான தீர்ப்பு வழங்கப்பட விருக்கிறது. ஆனால், வழக்கை முடிப் பதற்கு அவர்கள் விரும்பவில்லை. ஒத்திப் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஒத்திப் போடு கின்ற காரண ங்களைத் தேடித் தேடி, நீதிபதியிடத்திலே சொல்லிச் சொல்லி வலியுறுத்திக் கொண்டே யிருக்கிறார்கள்.

ஜெயலலிதா ஊழலை தினமணி போன்ற ஏடுகள் திரும்பிப் பார்க்காததேன்?

நான் கேட்கின்றேன் - இன்றைக்குக் கின்னாரம் கொட்டுகின்ற பத்திரிகைகளைக் கேட்கின்றேன் - டமாரம் அடிக்கின்ற பத்திரிகைகளைக் கேட்கின் றேன். மணியோசை முழங்குகின்ற தினமணி போன்ற ஏடுகளைக் கேட்கின்றேன். மலர் என்ற பெயரோடு துர்நாற்றம் வீசுகின்ற பத்திரிகைகளைக் கேட்கின் றேன். நீங்களெல்லாம் பெங்களூர் பக்கம் கொஞ்சம் திரும்பிப் பார்க்கக்கூடாதா? அந்த நீதிமன்றத்திலே என்ன நடக்கிறது என்று கேட்பது தவறா? ஜெ.பி.சி. குழு (துடிவே ஞயசடயைஅநவே உடிஅஅவைவநந) விசாரணை வேண்டும் என்று கேட்பவர்கள், இந்திய நாட்டினுடைய அரசியல் சரித்திரத்தில் முந்த்ரா ஊழலுக்குப் பிறகு அது வெளிப்பட்ட பிறகு அதைப் பற்றி விசாரிக்க ஜெ.பி.சி. வேண்டும் என்று பாராளுமன்றத்தைக் குழப்பத்திலே ஆழ்த்தியது உண்டா? இல்லை. நான் முதலிலே சொன்னதைப் போல, அது ஆரியம். இது திராவிடம். ஆரியம் என்றால் ஒன்று. திராவிடம் என்றால் ஒன்று. தம்பி துரைமுருகன் அதைப் பற்றி இங்கே பேசினார். அது ஒரு யுத்தமே நடக்கிறது இப்போது. 71ஆம் ஆண்டு தந்தை பெரியார், இப்போது நடைபெறுவது திராவிட - ஆரிய யுத்தம் என்று சொன்னார். பெரியார் என்ன? இராமாயணத்தைப் பற்றி எழுதிய பண்டித ஜவகர்லால் நேரு அவர்களே, தேவாசுர யுத்தம் என்பது தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடந்த யுத்தம் என்று ஒரு வாதத்திலே எழுதியிருந்தாலும் கூட, இது திராவிடர்களுக்கும், ஆரியர்களுக்கும் நடந்த போராட்டம்தான் என்று ஜவகர்லால் நேரு தனது மகளுக்கு எழுதிய கடிதம் என்ற புத்தகத்திலே எழுதியிருக்கிறார்.

ஆரிய - திராவிட யுத்தம் இப்போது அரசியல்ரீதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது!

இப்பொழுது அரசியல்ரீதியாக அந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தாங்க வேண்டிய, அதைச் சமாளிக்க வேண்டிய பெரும் பொறுப்பு நம்முடைய தோள்களுக்கு வந்திருக்கிறது. நம்முடைய தோள் வீரத்தோள்தான். ஆனால், தமிழன் வீரத்தை நிலைநாட்டிய அளவிற்கு, விவேகத்தைப் பயன்படுத்தியது இல்லை. விவேகத்தைப் பயன்படுத்தாத காரணத்தால், வீரம் இருந்தும் தமிழன் - திராவிடன் தன்னுடைய வலிவை, தன்னுடைய ஆட்சியை, தன்னு டைய அதிகாரத்தை இழக்க நேரிட்டது. அத்தகைய வீழ்ச்சி திராவிடத்திற்கு ஏன் ஏற்பட்டது? திராவிடனுக்கு ஏன் ஏற்பட்டது என்பதை எண்ணிப் பார்த்து, அந்த வீழ்ச்சியிலேயிருந்து நம்மைத் தடுப்பதற்கு, நம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கு, எதிர்கால சமுதாயத்தை - நம்மையல்ல, இங்கே பேசியவர்கள் எல்லாம் சொன்னதைப்போல், எனக்கு 87 வயது ஆகிவிட்டது. எதிர்காலச் சமுதாயம் என்றால் உங்கள் பேரன் பேத்திகள் அவர்கள் எல்லாம் வாழ்வதற்கு, அவர்கள் வைத்திருப்பது உண்மையான மீசைதான் - ஒட்டுமீசையல்ல. உண்மையான மீசைதான் என்று இவ்வுலகத்திற்கு நிலைநாட்டிக் காட்டுவதற்கு தமிழன் வாழ்ந்தான் - அவனை வீழ்த்துவதற்கு ஏதேதோ மோசடிகள் செய்யப்பட்டன. அவைகளையெல்லாம் வீழ்த்தி விட்டு, தமிழன் இன்று ஓரணியில் திரண்டான் என்ற உறுதியான நிலையை ஏற்படுத்துவதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் கைநீட்டுகிறது. இந்தக் கழகத்தினுடைய கையைப் பிடித்துக் கொண்டு, சமுதாயத்திலே இருக்கின்ற ஏழை - எளியவர்கள், பாட்டாளி மக்கள், ஆடவர் - பெண்டிர், உழவர் பெருமக்கள், நெசவாளிகள், சிறுபான்மைச் சமுதாயத்தினர், தேய்ந்தோர் - இன்னும் தேய்ந்து கொண்டிருப்போர் அவர்களெல்லாம், அத்தனை பேரும் இந்த திராவிட சமுதாயத்தை எழுச்சி பெறச் செய்வோம் - ஆரியத்தினுடைய சூழ்ச்சியினை வெல்வோம் - அதற்கு என்றைக்கும் அடிபணிய மாட்டோம் என்கின்ற உறுதியினை எடுத்துக் கொள்வோம் என்று உங்களை யெல்லாம் நான் கேட்டுக் கொண்டு, சமுத்திரம் போல் வேலூர் பொதுக்கூட்டத்திலே நீங்கள் திரண்டிருக்கின்ற இந்தக் காட்சியைக் கண்டு நான் மீண்டும் மீண்டும் நம்பிக்கை பெறுகிறேன். ஆறாவது முறை - ஏழாவது முறை என்றார்கள். எல்லா முறையும் நாம்தான். அந்த நிலையை நாம் அனைவரும் சேர்ந்து உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு விடைபெறு கின்றேன்.


இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment