கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, November 30, 2010

போக்குவரத்து தொழிற்சங்க தேர்தல் வெற்றி சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு வெள்ளோட்டம் - முதல்வர் கருணாநிதி அறிக்கை


போக்குவரத்து தொழிலாளர் சங்க தேர்தலில் தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி சட்டமன்ற தேர்தலுக்கான வெள்ளோட்டம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி நேற்று (29.11.2010) வெளியிட்ட அறிக்கை:
அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்கான சங்கத்தை தேர்வு செய்வதற்கான தேர் தல் கடந்த 25ம் தேதி தமிழகமெங்கும் நடைபெற்றது. தி.மு.க. தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், அ.தி.மு.க., தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கப் பேரவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சி.ஐ.டி.யு.), இந் தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனம் (ஏ.ஐ.டி.யு.சி.), காங்கிரஸ் கட்சி யின் போக்குவரத்து தொழி லாளர் சம்மேளனம் (ஐ.என்.டி.யு.சி), தே.மு.தி.க., பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஆத ரவு பெற்ற சங்கங்கள் என மொத்தம் 13 தொழிற்சங்கங்கள் போட்டியிட்டன.
அதிலும் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., ஆகிய கட்சிகளின் ஆதரவானவர்கள் இணைந்து, கூட்டணியாக போட்டியிடப் போவதாக அறிவித்து, அது 2011 சட்டமன்ற தேர்தலுக்கான முன்னணி என் பதைப் போல ஏடுகள் சில பெரும் முக்கியத்துவம் தந்தது. ஜெயலலிதாவோ, கொடநாட்டில் இருந்தவாறே அ.தி.மு.க. தலைமையிலான சங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமென்று அறிக்கைகள் வெளியிட்டார்.
மொத்தம் 1 லட்சத்து 33 ஆயிரத்து 580 ஊழியர்களில், 1 லட்சத்து 28 ஆயி ரத்து 377 பேர், அதாவது 96 சதவிகிதத்தினர் வாக்களித்தனர். வாக்கு எண் ணிக்கை தொடங்கியது முதலே தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச.தான் முன்னணி யில் இருந்து வெற்றி பெற்றது. தே.மு.தி.க., ம.தி.மு.க., உட் பட்ட எட்டு சங்கங்களின் ஆதரவுடன் போட்டியிட்ட, அ.தி.மு.க. தொழிற்சங்கம் இரண்டாவது இடத்திற்குகூட வர முடியாமல், மூன் றாவது இடத்திற்கு வந்துள்ளது.
தி.மு.க. தொழிற்சங்கம் 73,450 வாக்குகளை அதா வது 57.31 சதவிகிதம் பெற்று முதல் இடத்திலும், சி.ஐ.டி.யு., 19,002 வாக்குகளைப் பெற்று இரண்டா வது இடத்திலும், அ.தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., ஆதரவு பெற்ற சங்கங்கள் 15,765 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்திலும், காங்கிரஸ் கட்சியின் ஆதரவு பெற்ற ஐ.என்.டி.யு.சி., சங்கம் 4,824 வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்திலும், பா.ம.க. சங்கம் 2,857 வாக்குகளைப் பெற்று 6ம் இடத்திலும், விடுதலை சிறுத்தை கள் சங்கம் 2,307 வாக்குகளைப் பெற்று 7ம் இடத்திலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு பெற்ற ஏ.ஐ.டி.யு.சி. சங்கம் 1,912 வாக்குகளையும் பெற்றுள்ளன.
தொ.மு.ச வெற்றி பெற்று முதல் இடத்திற்கு வர வாக்களித்த அத்தனை தொழிலா ளர் நண்பர்களுக்கும் என்னுடைய நன்றியையும், அந்த வெற்றிக்காக உழைத்த அந்தச் சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் தேர்தலில் தொ.மு.ச.விற்கு வாக்களிக்காமல், வேறு சங்கங்களுக்கு வாக்களித்தவர்கள் மீது எனக்கு வருத்தம் இல்லை. அவர்கள் கட்சி கட்டுப்பாடு கருதி வாக்களித்திருக்கலாமே தவிர, திமுக அரசு தொழிலாளர்களுக்கு உதவிகளை செய்யவில்லை, சலுகைகளை அளிக்கவில்லை என்று எண்ணியிருக்க மாட்டார் கள் என்பதை நான் அறிவேன்.
அதனால்தான் நான் 27ம் தேதி மாலையில் வேலூர் கூட்டத்தில் பேசும்போதுகூட, கம்யூனிஸ்ட் கட்சி சங்கம் வெற்றி பெற முடியாமல், தி.மு.க. சங்கம் பெரு வெற்றியைப் பெற்று வருகிறது என்ற செய்தியைக் கேட்டபோது, அதற்காக நான் மகிழ்ச்சி அடையவில்லை. இடதுசாரி இயக்கத்தினுடைய தோழர்கள் வெற்றி பெறாமல் போய் விட்டார்களே என்ற சங்கடம்தான் எனக்கு என்று குறிப்பிட்டேன்.
அ.தி.மு.க.வின் மீது ஆழ்ந்த பற்றும் பாசமும் கொண்ட போக்குவரத்துக் கழக ஓட்டுநர் ஒருவர் இந்தத் துறையின் அமைச்சர் நேருவைப் பார்த்த போது, “நான் அ.தி.மு.க. தான், ஆனாலும் தொ.மு.ச.விற்குத் தான் வாக்களிப்பேன், கார ணம் கலைஞர் ஆட்சிக்கு வந்தால் தான், தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே ஊதிய உயர்வு, ஊக்கத் தொகை என்றெல்லாம் கொடுப்பார்“ என்று சொன்ன போது, நேரு அவரிடம் உன் தோள் மீது அ.தி.மு.க. அடையாளமிட்ட சிறு துண்டை அணிந்திருக்கிறாயே என்று கேட்க, அதற்கு அவர் அது எப் போதும் என் தோள் மீது தான் இருக்கும், அதை எடுக்க மாட்டேன், இருந்தாலும் இந்தத் தேர்தலில் என் வாக்கு தொ.மு.ச.விற்குத் தான் என்று கூறினாராம்.
அந்த அளவிற்கு நம்முடைய அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன என்பதை அறிந்து எனக்கு மகிழ்ந்து கொண்டே அந்தத் தொழிலாளர்களுக்கு என்ன செய்தோம் என்று நினைத்துப் பார்த்தேன்.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 2001ம் ஆண்டு முதல் 2004&2005ம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் போக்குவரத்து தொழிலாளர்கள் 20 சதவீத போனஸ் வேண்டுமென்று கேட்ட போதும், 8.33 சதவீத அளவிற்குத் தான் கொடுத்தார். ஆனால் அந்தத் தொழிலாளர்களை ஏமாற்றுவதைப் போல தேர்தல் ஆண்டான 2005&2006ம் ஆண்டில் மட்டும் 20 சதவீதம் போனஸ் என்று அறிவித்து ரூ.63.15 கோடி போனசாகக் கொடுத் தார். ஆனால் தி.மு.க. 2006ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல் ஒவ்வொரு ஆண்டும் 20 சதவீதம் போனஸ் என்ற அளவிற்கு 2006&2007ல் ரூ.86.26 கோடியும், 2007&2008ம் ஆண்டில் ரூ.87.32 கோடி யும், 2008&2009ல் ரூ.88.27 கோடியும், 2009&2010ல் ரூ.88.27 கோடியும், 2010& 2011ல் ரூ.99.54 கோடியும் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்பட்டது.
சம்பள உச்சவரம்பு அதிகப்பட்சம் ரூ.3,500 என்பதை ரூ.10,000 ஆக உயர்த்தியும் தகுதி தொகையை ரூ.2,500 லிருந்து ரூ.3,500 ஆக உயர்த்தியும் வழங்கப்பட்டது. இதன் பலனாக 2005&2006ல் ஒரு பணியாளர் பெற்ற அதிகபட்சத் தொகை ரூ.6,000 என்பது 2006&2007 முதல் ரூ.8,400 என்ற அளவிற்குப் பெற்று வருகிறார் என்கிறபோது தொ.மு.ச.வை வெற்றி பெற வைத்ததில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?
ஐந்தாண்டுகள் என மாற்றப்பட்ட ஊதிய ஒப்பந்தக் காலத்தை மூன்று ஆண்டு கள் என மீண்டும் திருத்தியமைக்கப்பட்டது. 2003ம் ஆண்டு ஜெயலலிதா ஆட் சிக் காலத்தில் தொழிலாளர்களோடு ஊதிய ஒப்பந்தம் போட்டபோது, ஊதிய ஒப்பந்தத்தில் அடிப்படை சம்பளத்தில் 9 சதவீதம் என்றும், குறைந்தபட்ச ஊதிய உயர்வு ரூ.600 என்றும் இருந்தது.
தி.மு.க. ஆட்சியில் 2007ம் ஆண்டு ஊதிய ஒப்பந்தத்தில் அடிப்படை சம்பளத்தில் 12 சதவீத ஊதிய உயர்வு என்றும், குறைந்தபட்ச ஊதிய உயர்வு ஆயிரம் ரூபாய் என்றும் ஒப்புக் கொள்ளப் பட்டது. மேலும் இந்த ஊதிய ஒப்பந்தத்தில் விலைவாசிப்படி அடிப் படை சம்பளத்தில் சதவீத முறையில் கணக்கிட ஒப்புக் கொள்ளப்பட்டது. மேலும் ஆண்டு ஊதிய உயர்வுத் தொகை ஒன்றரை மடங்காக உயர்த்தப்பட்டது. ஊதிய ஒப்பந்தத்தால் ஆண்டிற்கு கூடுதல் செலவு ரூ.200 கோடி என்பதிலிருந்தே அர சுக்கு உள்ள அக்கறையைப் புரிந்து கொள்ள முடியும்.
பணியிலிருந்து ஓய்வு பெற்ற 6278 தொழிலாளர்களுக்கு 31&7&2009 வரை நிலுவையில் இருந்து வழங்கப்பட ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை சுமார் ரூ.115 கோடி அரசால் முன்பணமாக வழங்கப்பட்டது. இந்தத் தொகை மேற்கண்ட தொழிலாளர்கள் சென் னைக்கு அழைத்து வரப்பட்டு காசோலை மூலமாக நேரடியாக வழங்கப்பட்டது. மேலும் ரூ.10 கோடி அரசால் வழிவகை முன்பணமாக வழங்கப்பட்டு, அது ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 31&3&2009 வரை நிலுவையில் இருந்த விடுப்பு ஒப்படைப்புத் தொகை வழங்கப்பட்டது.
முதல் முறையாக 17800 பதலி பணியாளர்களுக்கும் 2008&2009ம் ஆண்டுக்குரிய போனஸ் வழங்கப்பட்டது. 2009&2010ம் ஆண்டிற்கும் வழங்கப்படுகிறது. ஓட்டுநர்களுக்கான கல்வித் தகுதி பத் தாம் வகுப்பு தேர்ச்சி என் பதை எட்டாம் வகுப்பு தேர்ச்சி என குறைக்கப்பட்டுள்ளது. மேலும் தேவையிருப்பின் நிர்ணயிக்கப்பட்ட உயர அளவான 160 செ.மீ. என்பதிலிருந்து அரை செ.மீ. குறைத்துக் கொள்ளலாம்.
2006 முதல் 2010 வரை, வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக 12,279 பேரும், கருணை அடிப்படையில் 1183 பேரும், பதலிப் பணியாளர்களாக 31,313 பேரும் அமர்த்தப்பட்டுள்ளார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் 2005&2006ல் பதவி உயர்வு பெற்றவர்கள் 171 பேர் மட் டுமே. ஆனால் தி.மு.க. ஆட் சியில் 2006ல் 744, 2007ல் 1805, 2008ல் 1119, 2009ல் 856 பேர் பதவி உயர்வு பெற்றிருக்கிறார்கள்.
அ.தி.மு.க.வும் ஆட்சி யில் இருந்த கட்சி தானே, ஜெயலலிதாவும் முதல் அமைச்சராக இருந்தவர் தானே, அவர் வேண்டுகோள் விடுத்தும் அ.தி.மு.க. சங்கத்திற்கு ஏன் வாக்களிக்கவில்லை என்ற கேள்வி எழ லாம். அ.தி.மு.க. ஆட்சியில் சலுகைகள் பறிக்கப்பட்டன. அதற்கு உதாரணம் வேண்டுமா?
போக்குவரத்துப் பணியாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தக் காலத்தை 3 ஆண்டிலிருந்து 5 ஆண்டாக உயர்வு, புதிய பணியாளர் கள் நியமனத்திற்குத் தடை, போக்குவரத்துக் கழகத்தில் இறந்த தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு வேலை வாய்ப்பு நிறுத்தம், பதவி உயர்வு நிறுத்தம், போ னஸ் மற்றும் ஊக்கத் தொகை 20 சதவீதம் தரப்படாததால் 17 நாட்கள் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சி யாக அவர்களுக்குரிய வருடாந்திர ஊதிய உயர்வு, மறுகட்ட ஆய்வின் மூலம் ஊதிய உயர்வு ஆகியவைகள் மறுக்கப்பட்டன
போக்குவரத்துத் துறையிலே பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, அலுவலர்களுக்கு தி.மு.க. ஆட்சியிலே செய்யப்பட்ட நன்மைகளும், அ.தி.மு.க. ஆட்சியிலே செய்யப்பட்ட தீமைகளும் தான் தொழிலா ளர் சங்கத் தேர்தலில் திமுக பெற்ற மாபெரும் வெற் றிக்கு முக்கியமான காரணம்.
போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, திமுக அரசு இதுபோலவே சமுதாயத்திலே உள்ள அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்படக்கூடிய தேவைகளை உணர்ந்து, நிறைவேற்றும் பணியில் முன்னிறுத்திக் கொண்டு பணியாற்றுகிறது. எந்த ஒரு முற்போக்குப் பணிக்கும் வெள்ளோட்டம் விடுவது என்பது எப்போதும் பழக்கமான ஒன்று. அந்த வகையில் 2011ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வெள்ளோட்டம்தான் நடந்து முடிந்துள்ள போக்குவரத்துத் தொழிலாளர்கள் தேர்தல் வெற்றி.
இவ்வாறு கருணாநிதி எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment