முரசொலி மாறனின் 7&ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்வர் கருணாநிதி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக முன்னோடிகளில் ஒருவருமான மறைந்த முரசொலி மாறனின் 7&ம் ஆண்டு நினைவு நாள் 23.11.2010 அன்று அனுசரிக்கப்பட்டது. நினைவு நாளை முன்னிட்டு முரசொலி அலுவலக வளாகத்தில் உள்ள மாறன் சிலை, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை 8.50 மணிக்கு முதல்வர் கருணாநிதி அங்கு வந்து, மலர் தூவி முரசொலி மாறனுக்கு மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், பரிதி இளம்வழுதி, தா.மோ.அன்பரசன், என்.செல்வராஜ், மைதீன்கான், மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், சற்குணபாண்டி யன், காஞ்சனா கமலநாதன், காயத்திரி சீனிவாசன், இந்திர குமாரி, பேராயர் எஸ்றா சற்குணம், எம்எல்ஏக்கள் ப.ரங்கநாதன், சங்கரி நாராயணன், முன்னாள் எம்எல்ஏ செங்கை சிவம், மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், வி.எஸ்.பாபு, திராவிட கழக தலைவர் கி.வீரமணி, தாயகம் கவி, ஏ.சி.சண்முகம், இரா.ஜனார்த்தனம், ரகுமான்கான், வி.பி.மணி, முத்துஎழிலன், முன்னாள் மத்திய அமைச்சர் ரகுபதி, பூச்சி முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் மரியாதை செலுத்தினர்.
முரசொலி அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன், தென்சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன் மற்றும் கழகத் தோழர்கள் உள்ளனர். முரசொலி மாறன் சிலைக்கு மாலை அணிவித்த கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள், முதலமைச்சரைச் சந்தித்து சிறிதுநேரம் உரையாடி விடைபெற்று வந்தார்.

No comments:
Post a Comment