கூட் டணிக்கு ஜெயலலிதா அழைப்பு விடுத்து இருப் பது பற்றி காங்கிரஸ் மேலிடம் முடிவு செய் யும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறி உள்ளார்.
`ஜி-20' நாடுகளின் 2 நாள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தென் கொரியா தலைநகர் சியோல் சென்று இருந்த பிரதமர் மன்மோகன் சிங், அங்கிருந்து 12.11.2010 அன்று இரவு 10 மணிக்கு டில்லி திரும்பினார்.
முன்னதாக பிரதமர் விமானத்தில் வந்த போது, அவருடன் வந்த செய்தியாளர்கள் ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீடு விவ காரம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை கள் குறித்து கருத்து கேட்டனர்.
தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ஆ. இராசா மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என் றும், அதன் காரணமாக அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு தி.மு.க. வின் ஆதரவை இழக்க நேரிட்டால், மத்திய அர சுக்கு ஆதரவு அளிக்க தயார் என்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித் துள்ளாரே? என்று செய் தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு மன்மோகன் சிங் பதில் அளிக்கையில்,
இந்த விஷயத்தை நான் இப்போதுதான் முதல் தடவையாக கேள்விப்படுகிறேன். இதுபற்றி காங்கிரஸ் மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும். மேலும் ஜெயலலிதா என்ன சொன்னார் என்று எனக்குத் தெரியாது'' என்றார்.அத்துடன், நாங்கள் தற்போது தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருக்கி றோம். அந்தக் கூட்டணி நீடிக்கிறது என்றும் அவர் கூறினார்.
2-ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையை குறிப் பிட்டு, அமைச்சர் ஆ. இராசா விஷயத்தில் என்ன திட்டம் வைத்து இருக்கிறீர்கள்?'' என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார்.அதற்கு மன்மோகன் சிங், இப்போது நாடா ளுமன்ற கூட்டத் தொடர் நடந்து கொண்டு இருக் கிறது. மேலும் இந்த பிரச்சினை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால் அதுபற்றி நான் கருத்து சொல்வது சரியல்ல என்று பதில் அளித்தார்.
No comments:
Post a Comment