கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, November 27, 2010

இலங்கை தமிழர் புனரமைப்பு பணிகள் இந்தியாவுக்கு திருப்தி அளிக்கிறதா? - கனிமொழி கேள்வி


இலங்கையில் தமிழர் புனரமைப்பு பணிகள் இந்திய அரசுக்கு திருப்தி அளிக்கிறதா என, கனிமொழி எம்.பி., கேள்வி எழுப்பினார்.

இலங்கையில், உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு வீடு கட்ட மத்திய அரசு வழங்கியுள்ளள பணத்தை இலங்கை அரசு சரிவர பயன்படுத்த வருகிறதா? அந்தப் பணிகள், இந்திய அரசுக்கு திருப்தி அளிக்கிறதா? இலங்கை தமிழர்களுக்கு சம அதிகாரம் வழங்க வகை செய்யும் 13வது திருத்தத்தை அமல்படுத்த இலங்கை அரசு தயாராக உள்ளதா என்று கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த கேள்விகளுக்கு வெளியுறவுத்துறை இணையமைச்சர் பிரனீத் கவுர் அளித்துள்ள பதிலில்,

இலங்கையில் இடம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க இந்திய அரசு முன்வந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள், முகாம்களில் உள்ள அனைத்து தமிழர்களும் மறுகுடியேற்றம் செய்யப்பட்டு விடுவர் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே உறுதி அளித்துள்ளார்.

தமிழர் அமைப்புகள் மற்றும் பிரரையும் இணைத்து, அதிகார பரவல் குறித்து இலங்கை அரசு பேச்சு நடத்த வேண்டும் என்று இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது. கடந்த ஜூன் மாதம் இந்தியா வந்த இலங்கை அதிபர், அனைத்து சமுதாயத்தினரும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வு காண முயற்சி எடுப்பதாக கூறினார் என்று இணையமைச்சர் பிரனீத் கவுர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment