மாண்புமிகு மத்திய அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு, மானமிகுவாக டில்லியிலிருந்து விமானம்மூலம் சென்னை காமராசர் முனையத்திற்கு 16.11.2010 அன்று இரவு 8 மணிக்கு வருகை தந்தார் மானமிகு ஆ. இராசா அவர்கள்.
அவரை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து அன்பு தவழ வரவேற்றார். மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், மாநில அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, செல்வராசு, தமிழக அரசின் டில்லி பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சிவசுப்பிரமணியம், சட்டப்பேரவை உறுப்பினர் சிவசங்கரன், ஓவியர் முகுந்தன், பெருநற்கிள்ளி, வழக்கறிஞர் பழனிமுத்து முதலியோர் விமானத் திடலில் வரவேற்றனர்.
திராவிடர் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை, பொதுச் செயலாளர்கள் கவிஞர் கலி. பூங்குன்றன், சு. அறிவுக்கரசு, தலைமை நிலையச் செயலாளர் வீ. அன்புராஜ், பேராசிரியர் மு.நீ. சிவராசன், பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி யின் மாநிலத் தலைவர் கவிஞர் செ.வை.ர. சிகாமணி, தலை மைச் செயற் குழு உறுப்பினர் க. பார்வதி, சென்னை மண்டல திராவிடர் கழகத் தலைவர் தி.ரா. இரத்தினசாமி, மண்டல செயலாளர் வெ. ஞான சேகரன், வடசென்னை மாநில திராவிடர் கழகத் தலைவர் கோ. தங்கமணி, செயலாளர் தி.வே.சு. திருவள்ளுவன், துணைத் தலைவர் கோபால், தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா. வில்வநாதன், ஆவடி மாவட்டக் கழகத் தலைவர் ம.ஆ.கந்தசாமி, ஆவடி மாவட்டக் கழகச் செயலாளர் பா. தெட்சிணாமூர்த்தி, திராவிடர் கழக மாணவரணி துணைச் செயலாளர் நம்பியூர் மு. சென்னியப்பன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தமிழ் சாக்ரட்டீஸ், பகுத்தறிவாளர் கழக இணைச் செயலாளர் பிரின்ஸ், மாநில துணைத் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி, தருமபுரி மாவட்ட ப.க. தலைவர் செயராமன், வடசென்னை மகளிரணி தலைவர் கு. தங்கமணி, பெரியார் களம் அமைப்பின் தலைவர் இறைவி, இளைஞரணி தோழர்கள் வை. கலையரசன், பெரம்பூர் ராஜு, ஜோதி இராமலிங்கம், சைதை செல்வம், தாம்பரம் சிவசாமி, நெடுங்கிள்ளி, விஜயகுமார், மெகா இளங்கோ, அனகாபுத்தூர் பரந்தாமன், ஆவடி கார்வேந்தன், பொறியாளர் கரிகாலன், பண்பொளி, சி. வெற்றிச்செல்வி, சுமதி, மீனாட்சி மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் கழகக் கொடிகளுடன் வருகை தந்து இனமான முழக்கமிட்டு மானமிகு இராசா அவர்களை வரவேற்றனர்.
No comments:
Post a Comment