
ஜெயலலிதா ஆட்சியில் மூவலூர் ராமாமிர்தம் திருமண நிதி உதவித் திட்டம் நிறுத்தப்பட்டிருந்தது என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் 28.11.2010 அன்று வெளியிட்ட அறிக்கை:
ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், Òதிருமண உதவித் திட்டம், அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நிறுத்தப்பட்டது என்று மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது உண்மைக்கு புறம்பானதுÓ என்று எழுதியிருக்கிறார். ஆனால், அவரே மூவலு£ர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண திட்டம், தனது ஆட்சியில் கைவிடப்பட்டது என்று எழுதி, எனது கூற்றை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
திருமண உதவித் திட்டத்தைப் பொறுத்தவரையில் 5 திட்டங்கள் தமிழக அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் 4 திட்டங்கள் சிறிய திட்டங்கள். அவை குறிப்பிட்ட பிரிவினருக்காக மட்டும் நடத்தப்படுபவை.
உதாரணமாக, ஏழை விதவைகளாக இருப்பவர்களின் மகள்கள் திருமண உதவித் திட்டம், இந்தத் திட்டம் ஈ.வெ.ரா மணியம்மையார் பெயரால் இயங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஏழை விதவைகளாக இருப்பவர்களின் பெண்கள் மட்டுமே பயன்பெற முடியும்.
2வது திட்டம் ஆதரவற்ற பெண்களுக்கு திருமணத்திற்காக நிதி உதவி அளிக்கும் திட்டம். இத்திட்டம் அன்னை தெரசா பெயரால் இயங்கி வரும் திட்டமாகும். 3வது திட்டம் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் பெயரால் இயங்கி வரும் விதவைகள் மறுமணத் திட்டம்.
4வது திட்டம், கலப்புத் திருமணம் செய்து கொள்வோருக்கு எனது பாட்டியார் அஞ்சுகம் அம்மையார் பெயரால் நடத்தப்படும் திட்டம். இந்த 4 திட்டங்களையும் விட, மிகப் பெரிய திட்டம், அனைத்து ஏழைப் பெண்களுக்கும் திருமணம் செய்து கொள்வதற்காக வழங்கப்படும், மூவலு£ர் ராமாமிர்தம் அம்மையார் நிதி உதவித் திட்டம்.
இத்திட்டத்தின்கீழ்தான் அதிகமான பெண்கள் பயன் பெற முடியும். இத்திட்டம் 1989ம் ஆண்டு முதல்வர் கருணாநிதியால் அறிமுகப்படுத்தப்பட்ட போது, தரப்பட்ட உதவித் தொகை 5 ஆயிரம் ரூபாய். மீண்டும் 1996ல் திமுக ஆட்சியில் 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. அப்போது, 2 லட்சத்து 28,593 ஏழைப் பெண்களுக்கு 228 கோடியே 59 லட்சத்து 30,000 ரூபாய் வழங்கப்பட்டது.
ஜெயலலிதா தனது அறிக்கையிலே அவருடைய ஆட்சியிலே, ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையரது மகள் திருமண உதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம், கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம் என நான்கு விதமான திருமண நிதி உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்று சொல்லியிருக்கிறார்.
இதிலேகூட 3 திட்டங்கள் யாருடைய நினைவால் நடத்தப்படுகின்றன என்று குறிப்பிடும்போது கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம் எனது பாட்டியார் அஞ்சுகம் பெயரிலே உள்ள திட்டம் என்பதால், பெருந்தன்மையோடு அந்தப் பெயரை விட்டு விட்டார். ஜெயலலிதா தனது அறிக்கையில் இலவசத் திருமணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் எம்.ஜி.ஆர். என்றும் சொல்லியிருக்கிறார்.
எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் ஏழை விதவைத் தாய்மார்களின் பெண்களுக்கும், ஆதரவற்ற பெண்களுக்கும் நிதி உதவி அளிக்கும் திட்டங்கள் மட்டுமே நடைமுறையில் இருந்தன. ஆனால், 1967ம் ஆண்டிலேயே திமுக ஆட்சியில் கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம் தொடங்கப்பட்டு விட்டது. குறிப்பாக, ஏழைப் பெண்களுக்கு அதிக எண்ணிக்கையில் திருமண நிதி உதவி அளிக்கும் திட்டம் திமுக ஆட்சியில் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தொடங்கப்பட்டது.
இதற்கும் ஜெயலலிதா ஆதாரம் கேட்பாரானால், 1989&90ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை பார்க்கலாம். இத்திட்டம் 1989ம் ஆண்டு பீ5000 நிதி உதவித் திட்டத்துடன் தொடங்கப்பட்டு செயல்பாட்டில் இருந்தது. 1996 முதல் திமுக ஆட்சியில் பீ10000 ஆக உயர்த்தப்பட்டது. இத்திட்டம், 2002ல் ஜெயலலிதா ஆட்சியிலே நிறுத்தப்பட்டது. பின்னர் 2006 முதல் இவ்வரசால் மீண்டும் செயல்படுத்தப்பட்டு பீ15,000 என உதவித்தொகை உயர்த்தப்பட்டது. மீண்டும் 2008 முதல் இந்த ஆட்சியில் நிதி உதவியை பீ20000 என்று உயர்த்தி வழங்கியது. மாநில அரசின் முன்னோடி நிதித் திட்டமாக இத்திட்டம் செயல்படுவதால் இதுவரை வழங்கப்பட்ட நிதியுதவித் தொகை 1.4.2010 முதல் பீ25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் இலங்கை அகதிகள் சுமார் 1100 பேர்கள் பயனடையும் விதத்தில் பீ2.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கடந்த ஐந்தாண்டில் மட்டும் 4 லட்சத்து 39,538 ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவியாக பீ832.10 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தைத் தான் ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் நிறுத்தி விட்டார். அதே நேரத்தில் அவரது ஆட்சிக் காலத்தில் நான்கு பிரிவினருக்கு நிதி உதவிகள் வழங்கியதாக, அவரது அறிக்கையிலே சொல்லியிருக்கிறாரே, அந்த நான்கு திட்டங்களுக்கும் சேர்ந்து எத்தனை பேர்களுக்கு எவ்வளவு செலவிடப்பட்டது தெரியுமா?
2006 முதல் 2009&2010 வரை மூவலு£ர் ராமாமிர்தம் அம்மையார் பெயரால் உள்ள ஏழைப் பெண்கள் திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 44 ஆயிரத்து 456 பேர்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ள அந்த நான்கு திட்டங்களின் மூலமாக இதே கால கட்டத்தில் நிதி உதவி பெற்றோரின் எண்ணிக்கை 17,585 பேர்கள் மட்டுமே.
ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் நிறுத்தி வைத்த மூவலு£ர் ராமாமிர்தம் அம்மையார் பெயரிலான திருமண நிதி உதவித் திட்டத்திற்காக மட்டும் 2010&2011ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் 1 லட்சத்து 20,000 குடும்பங்கள் பயனடையத்தக்க விதத்தில் 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
2006 முதல் 2010 வரை திருமண நிதி உதவித் திட்டங்களின் கீழ் செலவழிக்கப்பட்டது 882 கோடியே 6 லட்சம் ரூபாய். பயனாளிகள் 4 லட்சத்து 67,419 பேர்.
ஆனால் ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் அந்த நான்கு திட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் 4 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கினார். அந்த ஐந்தாண்டு காலத்தில் அவர் கூறும் நான்கு திட்டங்களின் மூலமாக 17,585 பேர்களுக்கு 22.51 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது என்பதிலிருந்தே, யாருடைய அறிக்கை கோயபல்ஸ் அறிக்கை, விஷமத்தான அறிக்கை, கண்டிக்கத்தக்க அறிக்கை என்பதை புரிந்து கொள்ள முடியும்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள், தவறுகள் என்றெல்லாம் இதே ஜெயலலிதா அறிக்கை விட்டு, அந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அவர் தயாரா? என்று நான் சவால் விடுத்ததும், அதற்குப் பிறகு வாரங்கள் பல கடந்தும்கூட, அந்த சவாலுக்கு பதில் கூற முன் வராத ஜெயலலிதா என்னுடைய இந்தப் பதிலுக்காவது அவரது அடுத்த அறிக்கையிலே விளக்கம் தருவாரா? தரத் தயாரா?
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment