இந்திராகாந்தி பிறந்த நாளை முன்னிட்டு, கோட்டை யில் முதல்வர் கருணா நிதி தலைமையில் அமைச்சர்கள், அரசு ஊழியர் கள் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி ஏற்றனர்.
மறைந்த பிரதமர் இந்திராகாந்தி பிறந்த நாள் தேசிய ஒருமைப்பாட்டு நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்நாளை முன்னிட்டு, சென்னை கோட்டையில் உள்ள மைதானத்தில் அமைக்கப்பட்ட பந்தலில், இந்திராகாந்தி உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. 19.11.2010 அன்று காலை 11 மணிக்கு, முதல்வர் கருணாநிதி அங்கு வந்து, இந்திராகாந்தி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், நிதி அமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, கோ.சி.மணி, பொன்முடி, அன்பரசன், வீரபாண்டி ஆறுமுகம், பரிதி இளம்வழுதி, ஐ.பெரியசாமி, நேரு, மு.பெ.சாமிநாதன், பூங்கோதை, கீதா ஜீவன் மற்றும் அமைச்சர்கள், தலைமைச் செயலர் மாலதி மற்றும் துறை செயலர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் கருணாநிதி உறுதி மொழி கூறியதும் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் திரும்பக் கூறி உறுதி மொழி ஏற்றனர்.
No comments:
Post a Comment