கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, March 4, 2011

திமுக கூட்டணிக்கு அமோக வெற்றி ‘எனது நண்பர் விஜயகாந்த் இதுவரை அதிமுக கூட்டணியில் சேரவில்லை’ : மு.க.அழகிரி பேட்டி



மதுரையில் மறைந்த முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜமாணிக்கம் மனைவி ராணி தலைமையில் மதுரை மேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 300க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையும் விழா மத்திய அமைச்சர் மு.க.அழகிரி முன்னிலையில் அவரது இல்லத்தில் 04.03.2011 அன்று நடைபெற்றது.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

தேர்தல் பணியை ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கி விட்டேன். திமுக வேட்பாளர் நேர்காணல் முடிந்ததும், தென் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தி பிரசார திட்டங்கள் வகுக்கப்படும். மேலூர் தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ மறைந்த ராஜமாணிக்கத்தின் மனைவி மற்றும் குடும்பத்தினர் திமுகவில் இணைந்துள்ளனர். தேர்தலுக்குப் பிறகு எல்லோரும் திமுகவிற்கு வந்து விடுவார்கள்.
திமுக கூட்டணி நிச்சயமாக அமோக வெற்றி பெறும். திமுக அரசின் 5 ஆண்டுகால ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற்றுள்ளனர். முதல்வர் கூறியதுபோல் 5 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி பிரசாரம் செய்வோம்.

பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பதில் அளித்தார்.

கேள்வி: அதிமுகவிடம் தேமுதிக கூட்டணி வைத்ததால் அதிமுக கூட்டணி பலமாக இருக்கிறதே?

பதில்: விஜயகாந்த் எனது நண்பர். தன்மானம் மிக்கவர். அதிமுகவுடன் கூட்டணி வைத்ததாக அவர் இதுவரை வாய் திறக்கவில்லையே. பொறுத்திருந்து பாருங்கள்.

கேள்வி: உங்கள் பெயரில் 20 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடக் கோரி விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்களே?

பதில்: நான் என்ன 20 தொகுதிகளிலா போட்டியிட முடியும். முடியாதே.

கேள்வி: வரும் சட்டமன்ற தேர்தலில் முடிவுகள் எப்படி இருக்கும்?

பதில்: மே 13ஆம் தேதிக்கு பிறகு திமுக ஆட்சி அமைக்கும். அதிமுக என்ற கட்சியே மே 13க்கு பிறகு இருக்காது என்றார்.

No comments:

Post a Comment