சென்னை வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியின் திமுக முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன் 02.08.2011 அன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார். வீட்டில் இருந்தவரை அதிகாலையில் கைது செய்தது சென்னை காவல்துறை.
நிலமோசடி புகாரில் சென்னை வில்லிவாக்கம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., ரங்கநாதனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம், அரும்பாக்கம்- நொளாம்பூர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து ரங்கநாதன், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
No comments:
Post a Comment