நிலஅபகரிப்பு தொடர்பாக அதிமுகவினர் மீது புகார் வந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் கூறினார்.
கோவையில், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க போலீசில் தனிப்பிரிவு, தனி நீதிமன்றம் அமைப்பதை வரவேற்கிறோம். நில அபகரிப்பு தொடர்பாக திமுகவினர் மட்டுமல்ல; அதிமுகவினர் மீதும் புகார்கள் வந்தாலும் சட்டப்படி விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். சிறுதாவூர் நிலத்தை பாதிக்கப்பட்ட ஏழை தலித் மக்களுக்கு வழங்கவேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் நிலைப்பாடு.
இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு, சுயாட்சி வழங்கவேண்டும் என்பதைதான் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.
இலங்கையுடன் உள்ள ராஜிய உறவை மத்திய அரசு பயன்படுத்தி, அங்குள்ள தமிழர்களுக்கு சம உரிமை, அதிகாரப்பகிர்வு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி செப்டம்பர் 7ம் தேதி பாராளுமன்றம் முன் மார்க்சிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க அவசர சட்டம் பிறப்பிக்கவேண்டும்.
இவ்வாறு ராமகிருஷ்ணன் கூறினார்.
No comments:
Post a Comment