கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, August 11, 2011

ஸ்விஸ் வங்கியில் பணமா? சட்டரீதியான நடவடிக்கை : கருணாநிதி அறிவிப்பு


“ஸ்வீஸ் வங்கியில் பணம் உள்ளது என்று பொய் செய்தி வெளியிட்ட பத்திரிகை மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கருணாநிதி அறிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி, அண்ணா அறிவாலயத்தில் 09.08.2011 அன்று அளித்த பேட்டி:
உச்ச நீதிமன்ற தீர்ப்பு எப்படி இருந்தாலும், அதை அப்படியே நிறைவேற்றுவேன் என்று முதல்வர் ஜெயலலிதா இத்தனை நாட்கள் கழித்து, நேற்றைய தினம் (8ம் தேதி) சட்டப்பேரவையில் அறிவித்திருக்கிறார். அதை நிறைவேற்றுவாரா?
தொடர்ந்து கவனிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.
தலைமைச் செயலகம் உட்பட மிகப்பெரிய கட்டிடம் அழகாகக் கட்டப்பட்டாலும், அதனை ஏற்காமல் விசாரணைக் கமிஷனை இந்த அரசு அமைத்துள்ளது. மக்களின் வரிப் பணம்தான் வீணாகிறது. இதைப்பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?
தலைமைச் செயலகக் கட்டிடத்தைப் பொறுத்து நேற்று ஆங்கில பத்திரிகையில் பெரிய விளம்பரம் வந்துள்ளது. புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தைப் பற்றி மக்கள் கருத்துக்களை வழங்க வேண்டும் என்று அதில் கேட்கப்பட்டுள்ளது.
�இந்து� பத்திரிகை அதிபரோ அல்லது ஆசிரியர் ராம் அல்லது அவரைப் போன்ற அக்கறை கொண்ட பத்திரிகாதிபர்கள் சிலரோ பத்திரிகைக்காரர்களையும், அவர்களின் பிரதிநிதிகளையும் அழைத்துக் கொண்டு புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தைச் சுற்றிப் பார்த்து அந்தச் செயலகத்திலே எவ்வளவு சிறப்பான ஏற்பாடுகள், வசதி வாய்ப்புக்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்பதை நேரிலேயே அறிந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் வெளியிடுவார்களேயானால் அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள கருத்தாய்வின்படி பலருடைய கருத்துக்களைப் பெறுகிற முயற்சியிலே கூட ஈடுபடாமல் அந்தக் குழுவினரே ஒரு நல்ல முடிவுக்கு வர முடியும்.
ஏனென்றால் இந்தப் புதிய தமிழக அரசு அலுவலகத்திலே தான் கவர்னர் உரை படிக்கப்பட்டு, அந்த உரையின் மீது விவாதம் நடைபெற்றிருக்கிறது. பட்ஜெட் உரையும் அதன் மீதான விவாதமும் இதே கட்டிடத்தில் தான் நடைபெற்றிருக்கிறது. ஆகவே கட்டப்பட்டுள்ள அழகான மண்டபங்களில் ஒன்றான அமைச்சரவை கூட்ட மண்டபத்தில் அமைச்சர்கள் தாராளமாக உட்கார்ந்து பத்து கூட்டங்களுக்கு மேல் நடத்தியிருக்கிறார்கள். அத்தகைய இடம் அரசு அலுவலர்களுக்கும் அமைச்சர்களுக்கும் பேரவை உறுப்பினர்களுக்கும் போது மானதல்ல, வசதியானதல்ல என்று ஒரு பொய்யைக் கூறி அதைப் புறக்கணிப்பது ஜெயலலிதா அரசைப் பொறுத்தவரையில் சமச்சீர் கல்வியைப் புறக்கணித்தது போலத்தான்.
சமச்சீர் கல்வி தொடர்பான தீர்ப்பில் உச்சநீதி மன்ற நீதிபதி சவுகான் சொல்லும்போது, ஏற்கனவே சென்னை உயர் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பில் நாங்கள் குறுக்கிட விரும்பவில்லை, அதை அமுல்படுத்த வேண்டுமென்று சொல்லியிருக்கிறார். அந்தச் சூழ்நிலையில் தமிழக அரசின் மனுவை உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. தமிழக அரசின் செயல்பாட்டின் காரணமாக மாணவர்களின் 100 நாட்களின் படிப்பு கெட்டுப் போய் இருக்கிறது. அந்த 100 நாட்கள் இழப்பை எப்படி சரிக்கட்டலாம் என்று மூத்தப் பெரியவர் என்ற முறையில் அரசுக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆலோசனை கூற முடியுமா?
கல்வியாளர்களையும் & குறிப்பாக பள்ளிகளின் ஆசிரியப் பெருமக்களின் பிரதிநிதிகளையும் கலந்து கொண்டு இடைக்காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை எவ்வாறு சரி செய்வது என்று முடிவெடுக்க அரசு உடனடியாக முன் வர வேண்டும்.
திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்ற முறையில் மெட்ரோ ரெயில் திட்டத்தையும் இந்த அரசு மூடி விட்டு, மோனோ ரெயில் திட்டத்தைக் கொண்டு வரப் போவதாக அறிவித்திருக்கிறது. அதற்கும் நீங்கள் நீதி மன்றத்தை அணுகுவீர்களா?
இதையும் அதையும் நான் தொடர்பு படுத்த விரும்பவில்லை.
திமுக ஆட்சியில் மெட்ரோ ரெயில் திட்டம் பல கோடி ரூபாய் மதிப்பில் போடப்பட்ட திட்டம். ஆனால் பிரதமரை முதல்வர் ஜெயலலிதா சந்தித்த போது அந்தத் திட்டத்திற்கு உதவி கேட்காமல், மோனோ ரெயில் திட்டத்திற்கு தானே நிதி உதவி கோரியிருக்கிறார்?
மத்திய அரசு கவனித்து முடிவெடுக்க வேண்டிய விஷயம் அது.
இலங்கை அமைச்சர் கோத்தபய ராஜபக்ஷே அளித்த பேட்டியில் தமிழகத்திலே இலங்கைத் தமிழர்களுக்காக பேசுபவர்கள் எல்லாம் அரசியல் ஆதாயத்திற் காகத் தான் பேசுகிறார்கள் என்று சொல்லியிருக்கிறாரே?
தமிழ் இன உணர்வோடு நீண்ட காலமாக வாதாடி, போராடி வருகின்ற திமுகவையும், அரசியல் ஆதாயத்திற்காக இலங்கைப் பிரச்சினையில் அக்கறை காட்டுகின்ற கட்சி என்று அவர் சொல்வாரேயானால், அது தவறு. இது ஈழத்திலே உள்ள தமிழ் இன விடுதலைக்காக எழுப்பப்படுகின்ற குரல் என்பதை அவர் உணர்வார்.
மேலும் அவர் தனது பேட்டியில் இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் ரீதியாக செய்யப்பட வேண்டியதையெல்லாம் செய்து முடித்து விட்டதாகச் சொல்லியிருக்கிறாரே, அதை நீங்கள் ஏற்கிறீர்களா?
போராடிப் பெற முனைபவர்கள் எல்லாம், அதை மறுப்பவர்களின் வாதத்தை ஏற்றுக் கொள்ள இயலாது.
இலங்கையில் நடந்த அந்த இனப்படுகொலையை ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து உலக நாடுகள் எல்லாம் கண்டித்திருக்கின்றன. அங்கே நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் தமிழர்கள் தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்த நிலையில் இந்திய பாராளுமன்றத்தில் இலங்கை பாராளுமன்ற உறு ப்பினர்களுக்கு வரவேற்பு தந்தது முறை தானா?
திமுக என்றைக்கும் இலங்கையில் தமிழ் இனப் படுகொலையை ஆதரித்தது கிடையாது. தமிழ் இனம் அங்கே அழியும் போது ஒரு போர் என்றால் அதில் மக்கள் மடிவது இயற்கை தான் என்று ஜெயலலிதா போல சொன்னதும் கிடையாது.
பேரவையை திமுக தற்போது தொடர்ந்து புறக்கணித்து வருகிறதே, இது தொடருமா?
பேரவையில் திமுக உறுப்பினர்களுக்கு ஒரே பகுதியில் தொடர்ந்து இடம் தராவிட்டால் இப்படித் தான் நடக்கும்.
வாரப் பத்திரிகை ஒன்றில் ஸ்விஸ் வங்கியில் நீங்கள் (கருணாநிதி) 35 ஆயிரம் கோடி ரூபாய் வைத்திருப்பதாக செய்தி வந்துள்ளதே?
ஸ்விட்சர்லாந்து வங்கியில் 35 ஆயிரம் கோடி ரூபாய் என் பணம் இருப்பதாக ஒரு மோசடிக்காரன் ஒரு பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறான் என்று செய்தி வந்தது. அவன் உண்மையான ஆண் மகன் என்றால் அதை நிரூபிக்க வேண்டும். நிரூபிக்க தவறினால் இத்தகைய மோசடிக்காரர்களை நாடு அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். இதற்கிடையே இதற்கு சட்ட ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து மூத்த வழக்கறிஞர்களோடு கலந்து பேசி வருகிறேன்.
சுவிஸ் வங்கியில் உங்களுக்கு பணம் இருக்கிறது என்று அந்தப் பத்திரிகை வெளியிட ஏதாவது பின்னணி இருப்பதாக நினைக்கிறீர்களா?
தெரியவில்லை. இந்தப் பத்திரிகையின் ஆசிரியரோ அல்லது உரிமையாளரோ அல்லது இந்தப் பத்திரிகையிலே தொடர்புடைய ஒருவரை கடந்த ஆறேழு மாதங்களுக்கு முன்பு, அதாவது நான் ஆட்சியிலே இருந்த போது & அவரை காவல் துறையினர் கைது செய்த போது & நான் உடனடியாக தலையிட்டு, பத்திரிகைகாரர்களையெல்லாம் கைது செய்ய வேண்டாம் என்று உத்தரவிட்டு அவரை விடுதலை செய்தேன். அவர் என்னிடம் அதற்காக நன்றி தெரிவித்து விட்டுப் போனார். ஒருவேளை அந்த நன்றியை இப்போது அவர் காட்டியிருக்கிறார் என்று கருதுகிறேன். (அப்போது ஒரு நிருபர், “அது உங்கள் ஜாதகம் அல்லவா” என்றார். உடனே அரங்கில் சிரிப்பலை எழுந்தது)
சமச்சீர் கல்வியில் உச்சநீதி மன்றத் தீர்ப்புக்குப் பிறகு, ஜெயலலிதா தனது பிடிவாதப் போக்கை விட்டு விடுவார் என்று கருதுகிறீர்களா? ஏனென்றால் ஜெயலலிதாவின் பழைய கால வரலாறுகளைப் பார்க்கும்போது, இனிமேலாவது திருந்துவார் என்று நினைக்கிறீர்களா?
எதிர்பார்க்கிறேன்.
சமச்சீர் தீர்ப்பு திமுகவிற்கு கிடைத்த முதல் வெற்றி என்று நினைக்கிறீர்களா?
எத்தனையோ வெற்றிகளில், குறிப்பாக சமூக நீதிக்காக திமுக பெற்ற வெற்றிகளில் இதுவும் ஒன்று.
இது மிகப் பெரிய வெற்றி. இது யாருக்கு கிடைத்த வெற்றி?
சாதாரண சாமான்ய மக்களுக்குக் கிடைத்த வெற்றி; மாணவர்களுக்குக் கிடைத்த வெற்றி; தமிழர்களுக்கு பொதுவாகக் கிடைத்த வெற்றி.
தலைமைச் செயலகப் பிரச்சினையும் சமச்சீர் கல்வி போன்றது தான். அந்தக் கட்டிடமும் மக்களுக்காகக் கட்டப்பட்டது தான். வாடகை வீட்டில் இல்லாமல் சொந்த வீட்டில் இருக்கவேண்டுமென்ற எண்ணத் தோடு கட்டப்பட்டது. அந்தப் பிரச்சினையிலும் இதைப்போன்று மக்களுக்கு ஆதரவான தீர்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா?
இதே மாதிரி நீங்கள் கேள்விகளைக் கேட்டால், நானே எழுதிக் கொடுத்து கேட்கச் செய்ததாக நினைப்பார்கள்.
திமுக முதன் முதலாக சட்டப் பேரவைக்குள் நுழைந்த போதே, நமக்கென்று ஒரு சட்டசபை, நமக்கென்று ஒரு தலைமைச் செயலகம் வேண்டும் என்பது தான். அந்தக் கோரிக்கையை நீங்கள் இவ்வளவு நாட்கள் கழித்து நிறைவேற்றிடக் காரணம் என்ன?
ஒவ்வொரு முறையும் ஒரு ஆட்சியாளர் கட்ட முனைந்து இடையில் வேறு யாரோ கட்ட முயற்சித்து பிறகு அவர்களே கட்டி விட்டுப் போகட்டுமே என்று விட்டு விட்ட காரணத்தால் ஏற்பட்ட நிலை இது. நாங்கள் தொடர்ந்து இப்போது மேலும் இரண்டு மூன்று ஆண்டுக் காலம் பொறுப்பிலே இருந்த காரணத்தால் இந்தக் கட்டிடத்தைக் கட்டி முடித்தோம்.
இவ்வாறு கருணாநிதி பேட்டி அளித்தார்.

No comments:

Post a Comment