தலைமை செயலக வழக்கு விசாரணை வரும் 17ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது.
புதிய தலைமை செயலகம் கட்டியது தொடர்பாக விசாரிக்கும் தங்கராஜ் கமிஷனுக்கு தடை கோரி திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
இதை விசாரணைக்கு ஏற்கக்கூடாது என தமிழக அரசின் தலைமை வக்கீல் நவநீத கிருஷ்ணன் ஆட்சேபம் தெரிவித்தார். இந்நிலையில் இந்த மனு 11.08.2011 அன்று நீதிபதிகள் முருகேசன், சசிதரன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அன்பழகன் சார்பாக வக்கீல் சீனிவாசன் ஆஜராகி, ‘‘ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரித்து, அரசு செய்யும் தவறுகளை சுட்டிக் காட்ட எதிர்க்கட்சிகள் பொது நல வழக்கு தாக்கல் செய்ய அதிகாரம் உள்ளது என தெரிவித்தது. எனவே இந்த வழக்கும் விசாரணைக்கு உகந்ததுதான்’’ என்றார்.
மற்றொரு மனுதாரர் விஜயலட்சுமி சார்பாக வக்கீல் மணிகண்டன் ஆஜராகி, ‘‘தங்கராஜ் நியமனம் தவறானது. அவசரம் அவசரமாக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்றார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘‘வரும் 17ம் தேதிக்கு அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அன்றைய தினம் தீர்ப்பளிக்கப்படும்’’ என்றனர்.
No comments:
Post a Comment