கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, August 18, 2011

புறக்கணிப்பு முடிவு வாபஸ் ஜனநாயக கடமையை ஆற்ற பேரவை செல்ல திமுக முடிவு - மு.க.ஸ்டாலின்


வரும் செவ்வாய்கிழமை முதல் திமுக உறுப்பினர்கள் பேரவைக்கு சென்று ஜனநாயக கடமையை ஆற்றுவார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக எம்எல்ஏக்கள் கோவி.செழியன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் 13 .08 .2011 அன்று தலைமை செயலகம் வந்து சட்டப்பேரவை தலைவர் டி.ஜெயக்குமாரிடம் திமுக சட்டமன்ற கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை கொடுக்க வந்தனர். அவர் இல்லாததால், பேரவை செயலாளர் ஜமாலுதீனிடம் கடிதத்தை கொடுத்துச் சென்றனர். பேரவை தலைவருக்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
எங்கள் சட்டமன்ற கட்சி உறுப்பினர்களின் சார்பில் 8.6.2011 அன்று தங்களுக்கு நான் எழுதிய கடிதத்தில், திமுக உறுப்பினர்கள் அனைவரையும் பேரவையில், திமுக சட்டமன்ற கட்சி தலைவர் அமர்ந்திருக்கும் இடத்திற்கு பின் பகுதியில் அமர்ந்து செயலாற்ற அனுமதி அளிக்க வேண்டும். அப்படி செய்தால்தான் எங்களால் தொடர்ந்து அவையிலே செயலாற்றிட இயலும். அதற்கான வாய்ப்பினை தாங்கள் உடனடியாக ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று நான் வைத்த வேண்டுகோள் பட்ஜெட் மீதான பொது விவாதம் முடிகின்ற வரையில் ஏற்கப்படவில்லை. பட்ஜெட் விவாதத்தில் கலந்து கொண்டு எங்கள் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களைச் சொல்லவும், தொகுதிவாழ் மக்களின் கோரிக்கைகளை எடுத்துச் சொல்லவும் வாய்ப்பில்லாமல் போய் விட்டது.
சட்டமன்றத்திற்கு ஒவ்வொரு கட்சியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒரே பகுதியில் இருந்தால்தான் விவாதத்தின் போது எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்து அவ்வப்போது கலந்து பேசி முடிவெடுத்திட இயலும் என்பது தாங்கள் அறியாததல்ல. எதிர்க்கட்சிகளின் சார்பில் வைக்கப்படும் இதுபோன்ற சாதாரண கோரிக்கைகளைக் கூட தாங்கள் புறக்கணிப்பதை பார்க்கும்போது, பேரவை விவாதத்தில் எங்கள் கட்சியின் சார்பில் உறுப்பினர்கள் கருத்துக்களை தெரிவிக்காமல் இருப்பதையே ஆளுங்கட்சிக்கு உதவிடக் கூடிய செயல் என்று தாங்கள் கருதுகிறீர்களோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.
தங்களுக்கு மீண்டும் ஒரு வேண்டுகோளை வைக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு இந்த கடிதம் எழுதுகிறேன். நாடாளுமன்றத்திலும் சரி, மற்ற மாநிலங்களிலும் சரி மன்றங்களில் உறுப்பினர்கள் அமர்வது என்பது கட்சிகளின் அடிப்படையில், அந்தந்த கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் ஒரே பகுதியில் அமருகின்ற அடிப்படையிலேதான் என்பதை தாங்கள் நன்கறிவீர்கள்.
நாங்கள் அவைக்கு வராதது குறித்து, நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் அவையிலே பேசும்போது, இந்த கோரிக்கையை சிறுபிள்ளைத்தனமான கோரிக்கை என்றும், ஏதோ அச்சப்பட்டுக் கொண்டு அவைக்கு வராமல் இருக்கிறோம் என்றும் கூறியிருக்கிறார். பேரவைத் தலைவர் என்ற முறையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் வேண்டுகோளை தாங்கள் ஏற்பீர்கள் என்று இன்னமும் நம்பிக் காத்திருந்தோமே தவிர, பன்னீர்செல்வம் போன்றவர்களுக்கு அச்சப்பட்டு அல்ல.
இதற்கு பின்னரும் எங்கள் கட்சியின் உறுப்பினர்களை ஒரே இடத்தில் அமரச் செய்வதற்கு அனுமதி தரவில்லை என்றால், அதையும் மக்களிடத்தில் தெரிவித்துவிட்டு, ஜனநாயக கடமையை தொடர்ந்து ஆற்றாமல் இருப்பது மக்களுக்கு அளிக்க வேண்டிய கடமையில் இருந்து தவறுவதாகும் என்ற எண்ணத்தோடு, பேரவையில் பல்வேறு துறைகளின் மீது நடைபெறும் விவாதங்களில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிப்பார்கள்.
இவ்வாறு கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment