கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, August 18, 2011

77வது பிறந்த நாள் விழா : முரசொலி மாறன் சிலைக்கு கருணாநிதி மலர் தூவி மரியாதை


மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 77ம் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு திமுக தலைவர் கருணாநிதி மற்றும் தலைவர்கள் 17 .08 .2011 அன்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
திமுக முன்னணி தலைவர்களில் ஒருவரும், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சருமான முரசொலி மாறனின் 77வது பிறந்த நாள் 17 .08 .2011 அன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னையில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில் உள்ள மாறனின் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. .
காலை 9.35 மணிக்கு முரசொலி மாறன் சிலைக்கு, திமுக தலைவர் கருணாநிதி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முரசொலி செல்வம், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அமிர்தம், மு.க.தமிழரசு, முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, சுப.தங்கவேலன், தங்கம் தென்னரசு, பரிதி இளம்வழுதி, தா.மோ.அன்பரசன், எ.வ.வேலு, ரகுமான்கான், ஐ.பெரியசாமி, பெரிய கருப்பன், கே.பி.பி.சாமி, மைதீன்கான், சற்குணபாண்டியன், மேயர் மா.சுப்பிரமணியம் உள்ளிட்டோர், மாறன் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், திமுக மாவட்ட செயலாளர்கள் ஆர்.டி.சேகர், சுதர்சனம், எம்எல்ஏக்கள் சக்கரபாணி, லீலா ஆல்பன், கம்பம் ராமகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏக்கள் சேகர்பாபு, சங்கரி நாராயணன், செங்கை சிவம், துரை.சந்திரசேகர், எஸ்.ஆர்.ராஜா, ஞானசேகரன், துணை மேயர் சத்தியபாமா, கவுன்சிலர்கள் ராமலிங்கம், ஏழுமலை, முனுசாமி, குப்பன், விஜயா தாயன்பன்
தலைமை நிலைய செயலாளர்கள் துறைமுகம் காஜா, சதாசிவம், உசேன், த.மாசிலாமணி, ஐசிஎப் முரளி, தமிழ்வேந்தன், ஆறுமுகம், மற்றும் செல்லமுத்து, க.ப.அறவாணன், நாகநாதன், திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வக்கீல்கள் கல்யாணசுந்தரம், கிரிராஜன், தாயகம் கவி, பாபு, ராஜபிரபு மற்றும் க.வே.செழியன், முத்துமாணிக்கம், பொன்.குமார், பூச்சி முருகன், வி.பி.மணி, மகேஷ்குமார், வி.எஸ்.ராஜ், த.வேலு, தசரதன், தம்பிதுரை, சத்தியமூர்த்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சொந்த ஊரில்
முரசொலி மாறன் பிறந்த ஊரான நாகை மாவட்டம் திருக்குவளையில், திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டில் உள்ள முரசொலி மாறன் சிலைக்கு திமுகவினர் திரளாக வந்து மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருவாரூர் அடுத்த காட்டூரில் திமுக தலைவர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் உள்ள முரசொலி மாறன் படத்துக்கு முன்னாள் அமைச்சர் மதிவாணன் மற்றும் திமுகவினர் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினர்.

No comments:

Post a Comment