திருச்சியில் திமுக அலுவலகம் கட்டியதில் நிலம் அபகரிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழ க்கில் முன்னாள் அமைச்சர் நேரு, முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி உள்பட 7 பேர் 25.08.2011 அன்று அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
திருச்சி கரூர் பைபாஸ் ரோட்டில் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயம் சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இதற்கு துறையூரை சேர்ந்த டாக்டர் சீனிவாசன் என்பவரிடம் இருந்து 12 ஆயிரம் சதுர அடி நிலம் வாங்கப்பட்டது.
இந்த நிலையில் முன் னாள் அமைச்சர் நேரு உள் ளிட்ட சிலர் தன்னை மிர ட்டி இந்த நிலத்தை அபகரி த்து கொ ண்டதாக டாக்டர் சீனிவாசன் திருச்சி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித் தார். அதன்பேரில் மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழ க்கு பதிவு செய்தனர். இது தொடர்பான விசாரணை யை நிலஅபகரிப்பு பிரிவு போலீசார் மேற்கொண்டு வந்தனர்.
இதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் நேரு, லால்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ.சவுந்திரபாண்யடின், முன்னாள் எம்.எல்.ஏ அன்பில் பெரியசாமி, திருச்சி துணை மேயர் அன்பழகன், மாவட்ட திமுக துணை செயலாளர் குடிமுருட்டி சேகர், நேருவின் தம்பி தொழில் அதிபர் ராமஜெயம், ஜவுளிக்கடை அதிபர் சுந்தர்ராஜூலு, ஷெரீப், கொப்பம்பட்டி தமிழ்மாறன், தமிழ்ச்செல்வன், மாமுண்டி ஆகிய 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 25.08.2011 அன்று அதிகாலை திருச்சி துணை கமிஷனர் ஜெயம்பாண்டியன், நில அபகரி ப்பு விசாரணை பிரிவு உதவி கமிஷனர் மாதவன் ஆகி யோர் தலைமையில் 100 போலீசார் தில்லைநகர் 5வது கிராசில் உள்ள நேரு வீட்டுக்கு சென்றனர். வெளிப்புற கேட்டை பூட்டி விட்டு நேருவை நில அபகரிப்பு வழக்கில் கைது செய் வதாக கூறி அழைத்துச்சென்றனர்.
இதேபோல் கிராப்பட்டி அன்புநகரில் முன் னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமியின் வீட்டிற்கு சென்ற உதவி கமிஷனர் காமராஜ் அவரை கைது செய்தார்.
தொடர்ந்து ஜவுளிக்கடை அதிபர் சுந்தர்ராஜூலுவையும் கைது செய்த போலீசார் 3 பேரையும் திரு ச்சி கே.கே.நகர் ஆயுதப்ப டை வளாகத்தில் உள்ள போலீஸ் சமுதாய கூடத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் நேரு உள்பட 3 பேரையும் போலீசார்
வேனில் ஏற்றி மாஜிஸ்திரேட் (ஜே.எம்.4) புஷ்பராணி வீட்டுக்கு கொண்டு சென்றனர். அவர்களை செப்டம்பர் 8ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து நேரு உள்ளிட்டோரை கடலூருக்கு கொண்டு சென்று 25.08.2011 அன்று மதியம் கடலூர் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில் 25.08.2011 அன்று மதியம் திருச்சி மாநகராட்சி துணை மேயர் அன்பழகன், குடமுருட்டி சேகர், ஷெரீப், மாமுண்டி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் துணை மேயர் சேலம் மத்திய சிறையிலும் மற்றவர்கள் திருச்சி மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய 11 பேரில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேரு, முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரிய சாமி, சுந்தராஜுலு ஆகிய 3 பேரையும் திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் உள்ள போலீஸ் சமுதாய கூடத்தில் இருந்து மாஜிஸ்திரேட் வீட்டிற்கு அழைத்து செல்ல போலீசார் முயன்றனர். அப்போது சமுதாய கூட வாசலை மறித்து திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட கே.என்.நேருவை திருச்சியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் போலீசார் வைத்தனர். கே.என்.நேருவை சந்திக்க அவரது வழக்கறிஞருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று திமுகவினர் கூறினர்.
9 பிரிவுகளில் வழக்கு:
முன்னாள் அமைச்சர் நேரு உள்ளிட்டோர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நில அபகரிப்பு தொடர்பாக மாநகர குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் அமைச்சர் நேரு, எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் உள்ளிட்ட 11 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 147 5 அல்லது 5 பேருக்கு மேல் சட்ட விரோதமாக வன்முறையில் ஈடுபடுதல்) 447 ( அடுத்த நபருக்கு சொந்தமான இடத்தில் அத்துமீறி நுழைதல்), 363 (ஆள் கடத்தல்), 342 (சட்ட விரோதமாக அடைத்து வைத்தல்), 506(2) ( கொலை செய்து விடுவேன் என மிரட்டுதல்), 325 ( கொடுங்காயம் ஏற்படுத்துதல்), 387 ( மிரட்டி பறித்தல்), 392 ( சட்ட விரோதமாக பொருளை பறித்தல்), 120 (பி) (கூட்டு சதி செய்தல்) என 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாரண்ட் இல்லை
நேரு உள்ளிட்ட 3 பேரையும் ரிமாண்ட் செய்வதற்காக திருச்சி கலெக்டர் குடியிருப்பு பகுதியில் உள்ள திருச்சி 4ம் எண் மாஜிஸ்திரேட் புஷ்பராணி வீட்டிற்கு காலை 9 மணிக்கு போலீசார் வேனில் அழைத்து சென்றனர். அப்போது மாஜிஸ்திரேட் புஷ்பராணி வாரண்ட் எங்கே? என கேட்டார். அதிகாரிகள் சிறிது நேரத்தில் வந்து விடும் என கூறினர். உடனே மாஜிஸ்திரேட் வாரண்ட் கொண்டு வந்து கொடுத்த பிறகு அவர்களை அழைத்து செல்லுங்கள். அதுவரை வேனை நகர்த்தக்கூடாது என்று உத்தரவிட்டார். அதன்பிறகு போலீசார் அவசரமாக அதை தயார் செய்தனர். சரியாக 9.25 மணிக்கு வாரண்ட்டை தில்லைநகர் சிறப்பு எஸ்.ஐ. சுந்தரம் எடுத்து வந்து ஒப்படைத்தார். அதன்பிறகு நேரு உள்பட 3 பேரும் வேனில் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இடைத்தேர்தலை சந்திக்க பயந்து திமுகவினர் கைது - ஜெயலலிதா மீது கே.என்.நேரு தாக்கு :
திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலை நேரடியாக சந்திக்க பயந்து அதிமுக அரசு திமுகவினரை கைது செய்வதாக கே.என். நேரு குற்றம் சாட்டினார்.
திருச்சியில் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் நேரு, போலீஸ் வேனில் இருந்தபடி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:,
கடந்த 2007ம் ஆண்டு திருச்சி கரூர் பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள இடத்தை டாக்டர் சீனிவாசனிடம் இருந்து வாங்கினோம். அந்த இடத்தை அவருக்கு நான் 3 மாதங்களுக்கு முன்னர் வாங்கி கொடுத்திருந்தேன். அப்போது திமுக அலுவலகம் கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் சீனிவாசனிடம் இடத்தை வாங்கினோம். நிலத்தை விற்ற சீனிவாசன் கலைஞர் அறிவாலயம் கட்டப்படுவதற்கு நன்றி தெரிவித்து அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு சால்வை அணிவித்தார். அவரது மகள் திருமணத்தையும் கலைஞர் அறிவாலயத்தில் கட்டணம் இன்றி நடத்தினார். இந்த நிலையில் நாங்கள் நிலத்தை மிரட்டி வாங்கியதாக புகார் பெறப்பட்டுள்ளது. இதை நீதிமன்றத்தில் சந்திப்போம். தமிழக அளவில் திருச்சியில் தான் அதிக அளவில் திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதற்கு திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலும் ஒரு காரணம் என்றார்.
பேட்டியின் போது உடன் இருந்த முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, �கன்டோன்மெண்ட் உதவி கமிஷனர் காமராஜ் தலைமையில் போலீசார் அதிகாலை 5.30 மணிக்கு வீட்டிற்கு வந்தனர். அப்போது அவர்கள் குற்றப்பிரிவு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் வாருங்கள் என கூறினர். எந்த வழக்கு தொடர்பாக என கேட்டேன். தெரியவில்லை என்றனர்� என கூறினார்.
No comments:
Post a Comment