முரசொலி அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கை:
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பாரதிதாசன் பாடல்கள் ஒப்பித்தல் போட்டி முரசொலி அறக்கட்டளை சார்பில் நடைபெறுகிறது.
அனைத்து மாவட்டங்களிலும் முதல் நிலை போட்டி நடந்து முடிந்துள்ளது. இறுதிப்போட்டிகள் பள்ளிகளுக்கு செப்டம்பர் 5ம் தேதி காலை 10 மணிக்கும் கல்லூரிகளுக்கு 6ம் தேதி காலை 10 மணிக்கும் கலைஞர் அரங்கில் நடைபெறும்.
மாவட்ட அளவில் பள்ளி அளவில் 1, 2ம் இடங்களுக்கு தேர்வு பெற்ற 2 பேர், கல்லூரி அளவில் 1, 2ம் இடங்களுக்கு தேர்வு பெற்ற 2 பேர் இதில் பங்கேற்பார்கள். இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியாக முதல் பரிசு ஸீ15 ஆயிரம், 2ம் பரிசு ஸீ10ஆயிரம், 3ம் பரிசு ஸீ5ஆயிரம், ஆறுதல் பரிசு 2 பேருக்கு தலா ஸீ3ஆயிரம் வழங்கப்படும். திமுக இலக்கிய அணி செயலாளர் தஞ்சை கூத்தரசன் போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்துவார். பள்ளிகளுக்கான போட்டிகளுக்கு ஆ.சந்திரசேகர், வண்ணப்பூங்கா வாசன், கண்மணி ஆகியோரும் கல்லூரிகளுக்கான போட்டிகளுக்கு கவிதைப்பித்தன், சேவுகப்பெருமாள், சித்ரமுகி சத்யவாணி முத்து ஆகியோரும் நடுவர்களாக இருப்பார்கள். ஏற்கனவே நடந்த போட்டிகளில் பரிசு பெற்றவர்கள் இந்த ஆண்டு போட்டிகளில் பங்கேற்க இயலாது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment