தமிழகத்தில் திமுகவினர் சோர் வடைய தேவையில்லை. இரவும் பகலும் மாறி மாறி வரும் என்று முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் பேசினார்.
நெல்லை மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் சமச்சீர் கல்வி வெற்றி விழா கொண்டாட் டம் 19.08.2011 அன்று பாளை ஜவஹர் மைதானத்தில் நடந்தது.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் பேசியதாவது:
சட்டசபை தேர்தலில் மக்கள் தவறான ஒரு தீர்ப்பை வழங்கிவிட்டனர். அதற்காக நாம் மக்களை வெறுக்க கூடாது. கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை இப்போதுதான் பொதுமக்கள் எண்ணி பார்க்கின்றனர். தமிழகத்தில் கருணாநிதி காலம் பொற்காலமாகும்.
தேர்தலில் தோல்வி என்பது ஒரு பொருட்டல்ல. அண்ணா காஞ்சிபுரத்தில் மட்டுமல்ல, நகராட்சி தேர்தலில் கூட தோற்றுள்ளார். காமராஜர், இந்திரா, அம்பேத்கர் என அனைவருமே தேர்தலில் தோல்வியடைந்தவர்கள்தான். 34 ஆண்டுகள் மேற்கு வங்கத்தில் கொடி கட்டி பறந்த கம்யூனிஸ்டுகள் இன்று தோற்கவில்லையா? இப்போதைய முதல்வர் ஜெயலலிதா கூட 96ம் ஆண்டில் பர்கூரில் தோல்வியை தழுவியவர்தான். பொன்னகரம் இடைத்தேர்தலில் அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளுக்கு டெப்பாசிட் கூட கிடைக்கவில்லை.
இரவும், பகலும் மாறி வருவது போல் தேர்தலில் வெற்றி, தோல்வி மாறி வரும். அதற்காக திமுகவினர் சோர்வடைய வேண்டியதில்லை. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை குறை கூறியவர்கள் இன்றைய நிலையை எண்ணி பார்க்க வேண்டும். எம்.எல்.ஏ பழ.கருப்பையா வீட்டில் திருட்டு நடந் தது. மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் வீட்டில் தங்கியிருந்து திருடர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுதான் அதிமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு நிலையாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சமச்சீர் கல்வியை செயல் படுத்த கோரி பாளையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
சமச்சீர் கல்வியை செயல் படுத்த கோரி பாளையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment