கருணாநிதியை விமர்சிப்பதை விஜயகாந்த் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நடிகர் வாகை சந்திரசேகர் கூறினார்.
கிருஷ்ணகிரியில் மாவட்ட இளைஞரணி சார்பில் சமச்சீர் கல்வி வெற்றி விழா பொதுக்கூட்டம் 19.08.2011 அன்று நடந்தது. திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ., மாநில இளைஞரணி துணை செயலாளர் சுகவனம் எம்.பி., ஆகியோர் பேசினர்.
நடிகர் வாகை சந்திரசேகர் பேசியதாவது:
அதிமுக அரசு திமுகவினர் மீது பொய் வழக்குகளை பதிவு செய்து சிறையில் அடைத்து வருகிறது. எப்படி வேகமாக அவர்கள் கைது செய்து வருகிறார்களோ அதை விட வேகமாக திமுக எழுச்சியுடன் வீறு கொண்டு எழும். ஜெயலலிதா ஆட்சி வந்தவுடன் சமச்சீர் கல்வியை ரத்து செய்தார்.
தற்போது, உச்சநீதிமன்றம் சமச்சீர் கல்வி தொடரும் என தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து 90 நாட்களில் நமக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.
நடிகர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தின் போது �நான் யாருடனும் கூட்டணி வைத்துகொள்ள மாட்டேன். மக்களுடன்தான் கூட்டணி வைத்துகொள்வேன்� என்று பேசினார். ஆனால், பின்னர் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டார். அவர் இன்று கருணாநிதியையும், மு.க.ஸ்டாலினையும் விமர்சிக்கிறார்.
விஜயகாந்த் எந்த இடத்தையும் பிடிக்க முடியாது. இதுதான் அவர் வகிக்கும் கடைசி பதவி. அவருக்கு திருமணத்தை நடத்தி வைத்தவரே கருணாநிதிதான். அவரையே விமர்சனம் செய்வதை இனியாவது விஜயகாந்த் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு வாகை சந்திரசேகர் பேசினார்.
No comments:
Post a Comment