கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, August 20, 2011

கருணாநிதி கொண்டு வந்த சமச்சீர் கல்வியே சிறந்தது : எ.வ.வேலு பேச்சு


கருணாநிதி கொண்டு வந்த சமச்சீர் கல்வி சிறந்தது என உச்சநீதிமன்றமே கூறியுள்ளது என்று முன்னாள் உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
வேலூர் மாவட்ட திமுக இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் சமச்சீர் கல்வி வெற்றி விழா பொதுக்கூட்டம் 19.08.2011 அன்று நடந்தது. வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் நடந்த இந்த கூட்டத்துக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.கே.சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார்.
இதில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு பேசியதாவது:
கருணாநிதி 5வது முறையாக முதல்வராகி இந்த நாட்டு மக்களுக்கும் ஊருக்கும் ஏன் ஒவ்வொரு வீட்டுக்கும் தேவையான திட்டங்களை தீட்டி செயல்படுத் தினார். அப்படி இருந்தும் எப்படி தோற்றோம் என்று திமுகவினர் கூடிப்பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், அதிமுகவினரோ ‘நாங்கள் எப்படி ஜெயித்தோம்’ என்று கூடிப்பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் இன்றைய நிலை. சமச்சீர் கல்வியை அமல்படுத்த ஸி200கோடி மதிப்பில் புத்தகங்கள் அச்சடித்து தயார் நிலையில் இருந்தது.
நாங்கள் ஆட்சிக்கு வந்திருந்தால் புத்தகங்களை உடனடியாக கொடுத்து பாடம் தொடங்கி இருக்கும். ஆட்சி மாற்றத்தால் சமச்சீர் கல்வியை தடை செய்ய காலம் கடத்தப்பட்டது.
கருணாநிதி கொண்டு வந்த சமச்சீர் கல்வியே சிறந்தது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. செம்மொழி மையப் பாடல் இன்று சிங்கப்பூர் விமானத்தில் ஒலிப்பதாக என் நண்பர்கள் கூறுவது பெருமையாக இருக்கிறது. செயின்ட் ஜார்ஜ் கோட்டை இடிந்துவிழும் நிலையில் உள்ளது.
அதனால், சட்டமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேறு இடம் பார்க்க வேண்டும் என்று கூறியது ஜெயலலிதாதான்.
நாங்கள் கட்டிய புதிய சட்டமன்ற கட்டிடத்தை இப்போது மருத்துவமனையாக மாற்றப்படும் என்று கூறியுள்ளார். மருத்துவமனைக்கு அந்த கட்டிடம் எப்படி பொருத்தமாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஏ.பி.நந்தகுமார் நன்றி கூறினார்.
இந்த கூட்டத்தில் மாஜி எம்பி முகமது சகி, மேயர் கார்த்திகேயன், துணை மேயர் முகமது சாதிக், மாநகர செயலாளர் அ.ம.ராமலிங்கம், ஒன்றிய செயலாளர் ஆர்.பி.ஏழுமலை, கண்ணையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment