கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, August 24, 2011

தலைமை செயலக கட்டிட விவகாரம் : தங்கராஜ் கமிஷனை எதிர்த்த வழக்கு விசாரணைக்கு ஏற்பு


புதிய தலைமை செயலகம் தொடர்பான விசாரணை கமிஷனுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி தங்கராஜை தலைவராக நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டது.
புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்தாக கூறி, ஓய்வு பெற்ற நீதிபதி தங்கராஜ் தலைமையில் விசாரணை கமிஷனை தமிழக அரசு நியமித்தது. இதை எதிர்த்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, விஜயலட்சுமி ஆகியோர் தனித்தனியே உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் 23.08.2011 அன்று நீதிபதிகள் முருகேசன், சசிதரன் ஆகியோர் அளித்த உத்தரவு:

தங்கம் தென்னரசு தொடர்ந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்கிறோம். இதில் தலைமைச் செயலரும், பொதுத்துறை செயலரும் 2 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடுகிறோம். அன்பழகன் தாக்கல் செய்த பொதுநலன் வழக்கு உச்ச நீதிமன் றம் வகுத்த நெறிமுறைகளின்படி இல்லை. சொந்த நலன் சார்ந்தாக தெரிகிறது. அன்பழகன் சார்ந்த கட்சி நலன் உள்ளதாக தெரிகிறது, இதில் பொதுநலன் இல்லை. எனவே பொதுநலன் வழக்காக கருத முடியாது, அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. தங்கராஜ் நியமனத்தை எதிர்த்து விஜயலட்சுமி என்பவர் தாக்கல் செய்த மனுவையும் விசாரணைக்கு ஏற்றுக் கொள்கிறோம். இதில் 8 வாரத்திற்குள் அரசு பதில் அளிக்க உத்தரவிடுகிறோம்.


இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
தங்கம் தென்னரசு சார்பாக வக்கீல் தண்டபாணி ஆஜராகி, ‘‘அரசியல் உள்நோக்கத்துடன் தங்கராஜ் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. தங்கராஜ் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டிருப்பதால், அந்தக் கமிஷன் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். இல்லையென்றால் அவர் விரைந்து செயல்பட்டு திமுகவுக்கு எதிராக அறிக்கை தயார் செய்வார்’’ என்றார்.
கமிஷனுக்கு தடை விதிக்க அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்தார்.
‘‘இப்போது எந்த தடையும் விதிக்க முடியாது. அரசு பதில் மனு தாக்கல் செய்த பிறகு இதில் முடிவு எடுக்கலாம்’’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment