கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, August 22, 2011

உலக அளவில் 125 முறை கோர்ட்டில் வாய்தா வாங்கிய புகழ் ஜெயலலிதாவை தான் சேரும்: மு.க.ஸ்டாலின்தஞ்சையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, தமிழக முன்னாள் துணை முதல் அமைச்சரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் 21.08.2011 அன்று தஞ்சை வந்தார். அவரை வரவேற்று மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர் உபயதுல்லா, கவுன்சிலர் சன்.ராமநாதன் ஆகியோர் சங்கம் ஓட்டலுக்கு அழைத்துசென்றனர்.

தஞ்சை மாவட்ட திமுக விவசாயஅணி அமைப்பாளர் பொன்.கலியமூர்த்தியின் இளைய மகன் பொன்.க.இளஞ்செழியனுக்கும், புதுக்குடி நாகராஜசோழகரின் மகள் நா.மோகனப்ரியாவுக்கும் திருமணம் 21.08.2011 அன்று பூதலூர் ஒன்றியம் செங்கிப்பட்டி ஓவியா திருமண மாளிகையில் நடைபெற்றது.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். தங்க.திருஞானசம்பந்தம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. பூதலூர் ஒன்றிய திமுக செயலாளர் கல்லணை செல்லக்கண்ணு வரவேற்றார்.
மத்திய நிதித்துறை இணைஅமைச்சர் மற்றும் மாவட்ட திமுக செய லாளர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், முன்னாள் அமைச்சர்கள் கோ.சி.மணி, உபயதுல்லா, முன்னாள் எம்.பி.எல்.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கும்பகோணம் எம்.எல்.ஏ.சாக்கோட்டை அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் கே.என்.சேகரன், கவிதைபித்தன், அன்பில் பெரியசாமி, கோ.இளங்கோவன், துரை.சந்திரசேகரன், மகேஷ்கிருஷ்ணசாமி, முன்னாள் மாநில விவசாய அணி துணைத்தலைவர் கோட்டூர்.ராஜசேகரன், ஏனாதிபாலு, ரவிச்சந்திரன், காரல்மார்க்ஸ், சி.இறைவன், பூதலூர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் பூண்டி.வெங்கடேசன், கச்சமங்கலம் மணி, ஓரத்தூர் மனோகரன் மற்றும் நகர, ஒன்றிய, மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண் டனர்.
முன்னாள் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஒரத்தூர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.


பின்னர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்ற போது அவரிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர்.


பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராகாமல் இருப்பதற்கு விலக்கு கேட்டு அதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா மனு தாக்கல் செய்திருப்பது குறித்து நிருபர்கள் கேட்டனர்.


அதற்கு பதில் அளித்த மு.க.ஸ்டாலின், உலக அளவில் ஏறக்குறைய 125 முறை கோர்ட்டில் வாய்தா வாங்கிய புகழ் ஜெயலலிதாவை தான் சேரும் என்றார்.


No comments:

Post a Comment