மதுரை சிறையில் தி.மு.க.வினரை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பார்த்தார்.
போலீசார் தொடர்ந்த வழக்கில் கைது செய்யப்பட்ட டாக்டர் நவநீதகிருஷ்ணன், மாநகராட்சி மண்டல தலைவர் இசக்கிமுத்து, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் மின்னல்கொடி, கவுன்சிலர் மலைச்சாமி, ஒன்றிய செயலாளர் விஜயன், முத்துப்பாண்டி, ஈஸ்வரன் ஆகியோர் மதுரை சிறை காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை 24.08.2011 அன்று சிறையில் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி பார்த்தார். வெளியே வந்த அவரிடம் �சிறையில் இருக்கும் தி.மு.க.வினர் உங்களிடம் என்ன கூறினார்கள்?� என்று கேட்டனர். இதற்கு பதிலளித்து அமைச்சர் அழகிரி கூறியதாவது:
�அனைத்தும் பொய் வழக்குகள். அதை தைரியமாக சந்திப்போம்� என்று என்னை தைரியப்படுத்தினார்கள். �யார் யார் பொய் வழக்கு தொடர்ந்தார்களோ அவர்கள் மீது சட்டப்பூர்வமாக வழக்கு தொடர நடவடிக்கை எடுப்போம் என்று அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்�
இவ்வாறு அழகிரி கூறினார்.
�அனைத்தும் பொய் வழக்குகள். அதை தைரியமாக சந்திப்போம்� என்று என்னை தைரியப்படுத்தினார்கள். �யார் யார் பொய் வழக்கு தொடர்ந்தார்களோ அவர்கள் மீது சட்டப்பூர்வமாக வழக்கு தொடர நடவடிக்கை எடுப்போம் என்று அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்�
இவ்வாறு அழகிரி கூறினார்.
அவருடன் மத்திய அமைச்சர் நெப்போலியன், மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் தளபதி, மூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் வேலுசாமி, வக்கீல்கள் மோகன்குமார், லிங்கதுரை ஆகியோரும் சென்றனர்.
காரை அனுமதிக்க மறுப்பு
மதுரை சிறை காவலில் இருப்பவர்களை பார்க்க அமைச்சர்கள், வி.ஐ.பி. வரும்போது, அவர்களின் கார் ஜெயில் காம்பவுண்டு சுவரை தாண்டி அமைந்துள்ள வளாகம் வரை அனுமதிக்கப்படுவது வழக்கம். நேற்று மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, நெப்போலியன் சென்ற கார் வளாகத்தை நோக்கி சென்றபோது, திடீரென்று சிறை காவலர்கள் கதவை இழுத்து மூடினர். வழக்கத்திற்கு மாறாக காரை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். தி.மு.க.வினர் �தேசிய கொடியுடன் அமைச்சரின் காரை சிறை வளாகம் வரை அனுமதிக்க மறுப்பது புதிதாக உள்ளது� என வாதிட்டனர். அதற்கு சிறை அலுவலர்கள் �மேலிடத்தில் இருந்து இப்போது தான் புதிய தகவல் வந்துள்ளது� என்றனர். உடனே அமைச்சர் அழகிரி காரை வளாகத்திற்கு வெளியே நிற்க சொல்லி விட்டு, இறங்கி நடந்து சென்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment