கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, August 11, 2011

பாளை சிறையில் திமுக பொறுப்பாளர்களை சந்தித்தார் மு.க. ஸ்டாலின்திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் 09.08.2011 அன்று காலை விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு உள்ளிட்ட தி.மு.க.,வினர் வரவேற்றனர்.


பாளையங்கோட்டை சிறையில் இருக்கும் தி.மு.க.,வினரை சந்திப்பதற்காக மதுரையில் இருந்து கார் மூலம் மு.க.ஸ்டாலின் சென்றார்.

காலை 10.50 மணி அளவில் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைக்கு திமுக பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் வந்தார்.

திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ், மதுரை கிழக்கு மண்டல தலைவர் குருசாமி ஆகி யோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளை. சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர் களை திமுக பொருளாளர் ஸ்டாலின் பாளை. சிறையில் சந்தித்துப் பேசினார். பாளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க.,வினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.


முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, டிபிஎம் மைதீன்கான், பூங்கோதை, கீதா ஜுவன், திமுக மாவட்டச் செயலாளர் கருப்புசாமி பாண்டியன் உள்பட திமுகவினர் உடன் இருந்தனர்.

பத்திரிகையாளர்கள் தர்ணா
பாளை. சிறைக்கு ஸ்டாலின் வந்த போது கூட்டம் முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போட்டோகிராபர்கள், வீடியோகிராபர்கள் படம் எடுக்க முடியாமல் திணறினர். பத்திரிகையாளர்களை சிறையின் முதல் வாசலுக்குள் அனுமதிப்பதாக கூறிய போலீசார், பின்னர் கதவை மூடி விட்டனர்.
இதனால் போலீசாருக்கும், பத்திரிகையாளர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசாரை கண்டித்து பத்திரிகையாளர்கள் சிறை வாயிலில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். அதற்கு பின்னர் பத்திரிகையாளர்களை போலீசார் அனுமதித்தனர்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருச்சி சென்ற அவர், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள காஜாமலை பகுதிச்செயலாளர் விஜி, மதுரையைச் சேர்ந்த அட்டாக் பாண்டி மற்றும் கரூர் மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ரவிக்குமார் ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

No comments:

Post a Comment