கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, August 19, 2011

ஜெயேந்திரருக்கு ஒரு நியாயம் வீரபாண்டியாருக்கு ஒரு நியாயமா? : ஐகோர்ட்டில் வக்கீல் ஜோதி கேள்வி


சங்கராச்சாரியாருக்கு ஒரு நியாயம்; முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு ஒரு நியாயமா? என்று உயர் நீதிமன்றத்தில் வக்கீல் ஜோதி கேள்வி எழுப்பினார்.
நில அபகரிப்பு வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஜாமீன் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜசூர்யா, ‘திமுக பிரமுகர்கள் மனுக்களை விசாரிக்க விரும்பவில்லை. அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் என் மீது நம்பிக்கை இல்லை என்று கூறிவிட்டார். எனவே, இதை வேறு நீதிபதி விசாரணைக்கு அனுப்புகிறேன்� என்று கூறி, மனுவை வேறு நீதிபதி விசாரணைக்கு அனுப்பினார்.
இதனால், வீரபாண்டி ஆறுமுகம் ஜாமீன் மனு நீதிபதி சுதந்திரம் முன் 18.08.2011 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வீரபாண்டி ஆறுமுகம் தரப்பில் வக்கீல் என்.ஜோதி ஆஜராகி, “மனுதாரர் மீது போலீசார் பொய் வழக்குப் பதிவு செய்து, அதில் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவரை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும்” என்றார்.
இதைக்கேட்ட நீதிபதி, “ஒரு வழக்கில் மாஜிஸ்திரேட் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தால், சட்டப்படி செசன்ஸ் நீதிமன்றத்தில் அடுத்த கட்டமாக ஜாமீன் மனுத்தாக்கல் செய்துவிட்டு தான், உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்ய முடியும். அப்படி இருக்கும் போது வீரபாண்டி ஆறுமுகம் சேலம் செசன்ஸ் நீதிமன்றத்தில் தான் ஜாமீன் மனுத் தாக்கல் செய்த பிறகு உயர் நீதிமன்றத்திற்கு வர முடியும்” என்றார்.
இதற்கு வக்கீல் என்.ஜோதி பதில் அளிக்கும் போது, “காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டவுடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கூட ஜாமீன் மனுத்தாக்கல் செய்யவில்லை. நேரடியாக உயர் நீதிமன்த்தில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை உயர் நீதிமன்றம் விசாரித்து தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து, அவர் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார். அப்படி இருக்கும்போது அவருக்கு ஒரு நியாயம்; வீரபாண்டியாருக்கு ஒரு நியாயமா?” என்று கேள்வி எழுப்பினர்.
இதைக்கேட்ட நீதிபதி, ‘இது முக்கியமான சட்டப் பிரச்சனை. இதுகுறித்து 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு விசாரணைக்கு அனுப்பி வைக்கிறேன்’ என்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment