கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, August 12, 2011

கலைஞர் டிவி எப்படி செயல்படுகிறது என்று எனக்குத் தெரியாது : கனிமொழி


2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக, குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதன் மீதான விவாதம், இரண்டு வாரங்களாக, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.


டில்லி வழக்கறிஞர்கள், 11.08.2011 அன்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டதை அடுத்து, இந்த வழக்கு விசாரணை தடைபட்டது. வழக்கறிஞர்கள் யாரும் 11.08.2011 அன்று , வாதாட மறுத்து விட்டனர். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு, நீதிபதி ஓ.பி.சைனி, அனுமதியளித்தார்.

இதையடுத்து, ஒவ்வொருவராக, தங்கள் கருத்துக்களை, சுருக்கமாக, அதிகாரபூர்வமற்ற வகையில், எடுத்து வைத்தனர்.

தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி ‘’கலைஞர் டிவி' செயல்பாட்டிற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்கள், எப்படி செயல்படுகின்றனர் என்பதும், அங்கு என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பதும் எனக்குத் தெரியாது'என்றார்.


கலைஞர் டிவி' மேலாண் இயக்குனர் சரத் குமார் கூறுகையில், ’’கடந்த சில மாதங்களாக, சிறையில் நாங்கள் அவதிப்படுகிறோம். குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்கள் மீது, இன்னும் குற்றப்பத்திரிகை கூட, தாக்கல் செய்யவில்லை'என்றார்.

தொலைத் தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ராசா, ‘’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த விஷயத்தில், நான் தனிப்பட்ட முறையில் முடிவு எடுத்ததாக, சி.பி.ஐ., கூறுகிறது.


ஆனால், 2008 ஜனவரி 6ல், பிரதமர் அலுவலகம், குறிப்பு ஒன்றை அனுப்பியது. அதில், தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு, முந்தையக் கட்டணத்திலேயே, துவக்க நிலையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு அளிக்கலாம் என, கூறப்பட்டிருந்தது.


ஆனாலும், பிரதமர் அலுவலகம் மீது, இந்த விஷயத்தில் சி.பி.ஐ., சந்தேகம் தெரிவிக்கிறது. பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டியது என் கடமை.

மத்திய அரசில், 12 ஆண்டுகள் அமைச்சராக இருந்துள்ளேன். அமைச்சராக பதவிப் பிரமாணம் எடுத்தபோது, அரசியல் அமைப்பு சட்டத்துக்கு கட்டுப்படுகிறேன் என, கூறினேன்’’என்று கூறினார்.


No comments:

Post a Comment