கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, August 25, 2011

ஜெயலலிதா மாற்றினாலும் தை முதல் நாளை புத்தாண்டாக நாமெல்லாம் கொண்டாடுவோம் - கலைஞர்


திமுக தலைவர் கருணாநிதி 24.08.2011 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக பொறுப்புக்கு வந்தது முதல், திமுக ஆட்சியில் நடைபெற்ற முக்கிய திட்டங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தலைமை செயலகம் மற்றும் சட்டப்பேரவை செயலகத்திற்காக ஓமந்தூரார் வளாகத்தில் சுமார் 500 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டிடம் தரமாக இல்லை என்று கூறி அதிலே தொடர்ந்து செயல்படமாட்டோம் என்றார்கள். பிறகு அந்த கட்டிடத்தில் மருத்துவ மனை அமைக்கப் போகிறோம் என்றார்கள்.
திமுக அரசு அறிமுகப்படுத்திய சமச்சீர் கல்வி சட்டத்தை ஏற்க மாட்டோம் என்று சட்டத்தை அவசரமாக நிறைவேற்றினார்கள். அந்த பிரச்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை சென்று, எதிர்க் கட்சிகள் எல்லாம் எடுத்துக் கூறியும் கேளாமல் அதிலே சரியாக குட்டுபட்டார்கள். அதனால் கோபமடைந்த ஜெயலலிதா மற்றொரு நடவடிக்கையாக தை முதல்நாள் தமிழ் புத்தாண்டு தினத்தை மீண்டும் சித்திரை முதல் தேதிக்கு மாற்றிட மசோதா தாக்கல் செய்து குரல் நிறைவேற்றியிருக்கிறார்.
கடந்த 2008ல் பேரவையில் ஆளுநர் செய்த அறிவிப்பில், �பெரும் புலவரும், தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்தவருமான மறைமலை அடிகளார் தலைமையில் ஐநூறுக்கு மேற்பட்ட புலவர்கள் 1921ம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் கூடி தமிழர்களுக்கென்று ஒரு தனி ஆண்டு தேவை என்று கருதி, திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றினை பின்பற்றுவதென்றும், அதையே தமிழ் ஆண்டு என கொள்வதென்றும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என்றும் முடிவெடுத்தார்கள். அந்த கருத்தினை 37 ஆண்டுகளுக்கு முன்பே முதலமைச்சர் கருணாநிதி ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும், 1972ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசிதழிலும் நடைமுறைப்படுத்திட ஆணை பிறப்பித்தார். எனவே, பொங்கல் திருநாளை தமிழர் திருநாளாக கொண்டாடி வரும் தமிழ்நாட்டு மக்கள், இனி தமிழ் புத்தாண்டு பிறந்த நாளாகவும் இணைத்து இந்நாளை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் வாழை, மா, பலா என முக்கனி தருக்களை நாட்டி, வண்ண வண்ண கோலங்களிட்டு, வரிசை விளக்குகளால் ஒளியுமிழ் இல்லங்கள் புது எழில் காட்டிட, புத்தாடை புனைந்து தமிழ் மானம், தன்மானம் போற்றிப் பாடியும், ஆடியும்; சமத்துவ உணர்வு பரப்பியும்; தமிழ் புத்தாண்டு இதுவென துள்ளும் மகிழ்ச்சியால் அன்பை அள்ளிப் பொழிவர்” என பலத்த கைதட்டலுக்கிடையில் அறிவித்தார்.
மறைமலை அடிகள், திரு.வி.க, கா. சுப்பிரமணிய பிள்ளை, சச்சிதானந்த பிள்ளை, ந.மு. வெங்கடசாமி, சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ. விசுவநாதம் உள்ளிட்டோர் கலந்து கொண்ட கூட்டத்தில் எடுத்த முடிவுகள் மூன்று:
திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டாக பின்பற்றுவது, அதனையே தமிழாண்டு என கொண்டாடுவது, வழக்கத்தில் திருவள்ளுவர் காலம் கி.மு. 31ஐ கூட்டினால் திருவள்ளுவராண்டு வரும் என்பதனை மேற்கொள்வது என்பனவாகும்.
அதன் பிறகு 1939ம் ஆண்டு திருச்சியில் அகில இந்திய தமிழர் மாநாடு சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடியது. அதில் பெரியார், கரந்தை தமிழ்ச் சங்க தலைவர் உமாமகேசுவரனார், கா. சுப்பிரமணியம், தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், திரு.வி.க., மறைமலை அடிகளார், பி.டி. ராஜன், ஆற்காடு ராமசாமி முதலியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகிரி பங்கேற்றனர். அந்த மாநாடும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும், பொங்கல் திருநாளே தமிழர் திருநாள் என்று தீர்மானித்தது.
ஆளுநரின் அறிவிப்பு வெளிவந்த மறுநாளே குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் விடுத்த அறிக்கையில், தொன்மைக் காலம் தொட்டே தைத்திங்கள் முதல் திருநாளே தமிழர் வாழ்வு சார்ந்த எழுச்சியும் மகிழ்ச்சியும் ஊட்டுகின்ற திருநாளாகும் என்றார்.
திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இந்த நல் முயற்சிக்கு தற்போது பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டு சரித்திரத்திலே தமிழையே பகைத்துக் கொள்கிற, செம்மொழி என்றாலே வெறுக்கிற, ஒதுக்குகிற, புறக்கணிக்கிற ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அந்தக் காலத்திலும் இப்படி இருந்திருக்கிறார்கள். இதோ ஒரு கதை.
நக்கீரன் காலத்திலே குயக்கொண்டான் என்று ஒருவர் தமிழ்ச் சங்கத்திலே நடைபெற்ற ஒரு பட்டிமன்றத்திலே �ஆரியம் நன்று, தமிழ் தீது� என்று சொல்ல, உடனே நக்கீரனுக்கு கோபம் வந்து, �தமிழ் தீதென்றும், வடமொழி நன்றென்றும் சொன்ன நீ சாகக் கடவாய்� என்று அறம் பாடினாராம். உடனே குயக்கொண்டான் கீழே விழுந்து இறந்து விடுகிறார். சிலர் நக்கீரனை பார்த்து குயக்கொண்டாரை பிழைக்க வைக்க கேட்டுக் கொண்டார்கள். அதை கேட்ட நக்கீரன், �ஆரியம் நன்று தமிழ் தீ தென் உரைத்த காரியத்தால் காலன்கோட் பட்டானை சீரிய அந்தண் பொதியில் அகத்தியனார் ஆணையினால் செந்தமிழை தீர்க்க சுவாகா� என்று பாட, குயக்கொண்டான் உயிர் பெற்று எழுந்தானாம்.
தமிழக அரசின் அறிவிப்பு வந்த நேரத்திலேயே ஐராவதம் மகாதேவன், �இன்றைய பஞ்சாங்கங்களை வான நூல், பருவங்களின் சுழற்சி ஆகியவற்றின் தற்கால நிலையை அறிவியல் கண்ணோட்டத்துடன், ஆராய்ந்து திருத்திக் கொள்ள நமக்கு துணிவு இல்லையெனில், அறுவடை நாளாகிய பொங்கல் திருவிழாவை புத்தாண்டு என்று கொண்டாடுவதில் என்ன தவறு? இந்தியாவில் இன்று நடை முறையில் உள்ள பல புத்தாண்டுகளில் இதுவும் ஒன்று� என்றார்.
ஆளுநர் உரையை தொடர்ந்து, 29&1&08 அன்று 2008ம் ஆண்டு தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டு சட்ட முன் வடிவை நான் அறிமுகம் செய்தேன். 1&2&08ல் இம் மசோதா மீது விவாதம் நடைபெற்று பலரும் மசோதாவினை வரவேற்று பேசி அது நிறைவேறியது.
இப்போது மலேசியா நாட்டில் தமிழர்கள் தை முதல் நாளையே புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள். மு. வரதராசனார், �முன் காலத்தில் வருடப் பிறப்பு சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல் நாளைத்தான் வருடப் பிறப்பாக கொண்டாடினார்கள்� என்று விளக்கியுள்ளார்.
இப்படியெல்லாம் போற்றப்பட்ட, பாராட்டப்பட்ட ஒரு முடிவு திமுக ஆட்சியிலே சட்டமாக நிறைவேற்றப் பட்டது என்றால் அது இருக்கலாமா என்று அதற்கு முடிவு கட்ட அதிமுக ஆட்சியில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை பா.ஜ. அவசரமாக வரவேற்றுள்ளது. அதிலிருந்தே இந்த தீர்மானத்தின் நோக்கத்தை புரிந்து கொள்ளலாம். ஆனாலும் மசோதாவை இரண்டு கம்யூனிஸ்ட்களும் எதிர்த்தார்கள் என்பதுபற்றி கருத்து கேட்டபோது, அவர்களின் தமிழ் உணர்வுக்கு தலை வணங்குகிறேன் என்று கூறினேன்.
நாங்கள் எதைச் செய்தாலும் அதை சீரழிப்பதே திமுகவின் வேலை என்று ஜெயலலிதா சொல்லி யிருக்கிறார்.அது தவறு. திமுக எதைச் செய்திருந்தாலும், அதை சீரழிப்பதுதான் அதிமுகவின் வேலை என்பதே சரியாகும்.
அவர்கள் எப்படி வேண்டுமானாலும் செய்து விட்டு போகட்டும். நம்மை பொறுத்த வரையில் தை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள். இதை மனதிலே கொண்டு அந்நாளை உவகை பொங்கிட கொண்டாடி மகிழ்ந்திடுவோம்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment